புதன், 22 அக்டோபர், 2008
தமிழன் என்று சொல்லடா!!.....
நமது தமிழ் பண்பாடும் ,கலாசார அமைப்பும் இந்த புவியில் உள்ள மற்ற எல்லா தேசங்களை காட்டிலும் வேறுப்பட்டதும் ,மிக்க தொன்மை மிக்க அறிவு சார் கலாச்சாரம் ஆகும்.
தமிழன் எங்கு புலம் பெயர்ந்தாலும் அவன் தனது கலாச்சார அடையாளத்தையும் இனங்காடியே வாழ்ந்து வந்தும் ,வாழ்ந்து கொண்டும் உள்ளான். சமுக அமைப்பாக ஆகட்டும் , பணி தன்மையாகட்டும் தனித்தே அடையாளம் காட்டக்கூடிய சிறந்த நிலையிலேயே தமிழ் மக்கள் கடல் கடந்தும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர்
கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.இராசநாயக முதலியார் அவர்களுடைய கருத்து.
இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள், மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இஸ்லாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் ஆவர்.
இந்தியத் தமிழ் முஸ்லீம்கள் போலில்லாமல் இவர்கள் முஸ்லீம்கள் என்ற சமய அரசியல் அடையாளத்தை முன்னிறுத்துகின்றார்கள். 1800 களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு என வருவிக்கப்பட்ட
தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களினதும் மனித உரிமைகளை சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்க்ளை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது.
இப்படி வெடித்த போராட்டம் இன்னும் முடிந்த பாடில்லை !!.எண்ணற்ற தமிழர் தம் இன்னுயிரை இழந்து அகதிகளாக தமிழ் மக்கள் அங்கும் இங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்
அரசியல் பூர்வமான தீர்வு ஒன்றே இந்த வன்கொடுமைக்கு எதிரான தீர்வாகும்.அடக்கு முறையால் ஒரு இனம் அழிந்ததாக எந்த வரலாற்றிலும் இல்லை.!பல வரலாற்று சிறப்புகளை உடைய தமிழும் ,தமிழரும் நீறு பூத்த நெருப்பாய் இந்த கொடுமையிளிரிந்து மீள நமது இந்திய அரசும், தமிழ்,தமிழ் என்று முழங்கும் தமிழக அரசும் பேரு முயர்ச்சி எடுக்க நாம் ஒவ்வாருவரும் நம்மால் இயன்ற சிந்தனை உத்வேகத்தை அளிப்போம்
வாழ்க தமிழ்! வளர்க்க தமிழரின் சிறப்பு !!
செவ்வாய், 21 அக்டோபர், 2008
விடுதலை புலி - வேலுபிள்ளை பிரபாகரன் !!

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை.
தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.
வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும்.
இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள்.
இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார்.
யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன.
அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன.
சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம்,
இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.
இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.
தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை.
பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார்.
வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்
பிரபாகரன் கூற்றுக்கள்
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி
'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' [2]
"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." [3]
"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். [4]
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." [5]
"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." [6]
"செய் அல்லது செத்துமடி."
சிங்கள ராணுவத்தின் அடக்கு முறைக்கு எதிராக ஒரு தமிழன் ஒரு இயக்கத்தை வழிநடத்தி போராடி வருவது என்பது சாதாரன விழயமில்லை .அது வலிமிகுந்த பயணமாகும் !!.
தமிழர்களே ஒன்று திரள்வீர் ,குரல் ஓங்கி ஒலிக்க கரம் சேர்ப்பீர் !!
ஞாயிறு, 19 அக்டோபர், 2008
பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றவேண்டும் !!- திருடர்கள் சங்கம் புகழ் மாலை !!!
இந்திய அளவில் வேறெந்த மாநிலத்திலேயும் இப்படி ஒரு சாதகமான சூழல் நிலவவில்லை , தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. முன்பெல்லாம் நமது தொழிலாளிகள் இரவில் தொழில் செய்ய கிளம்பினால் எங்கு பார்த்தெல்லாம் மின்னொளி தொந்தரவு இருக்கும்
ஆனால் இப்போது ஆரசாங்கமே தடையில்லா மின்வெட்டை அமுல் படுத்தி இருப்பதால் ,எந்த ஒரு தடங்களும் இல்லை .நம்முடைய தொழிலுக்கு இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் என்ற மின்தடயானது இப்போது ஆறரை மணி நேரம் வரை உயர்தப்பட்டுலதால் நம்முடைய மனம் கனிந்த வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் ,தமிழக மின் துறை அமைச்சருக்கு தெரிவிப்பதி மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்
நம்முடைய இரவு நேர தொழில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் மிக பாதுகாப்பாக இயங்கி கொண்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் தி .நகர் ரங்கநாதன் தெருவில் நமது தொழிலாளிகள் இடைவிடாது உழைப்பது சங்கத்திற்கு மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
காற்று உள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும் என்பத நமது தொழிலாளிகள் நன்கு உணர்ந்து .தற்பொழுதைய மின்வெட்டு சூழலை நன்கு பயன்படுத்தி எவ்வளவு லவ்வட்டமுடியமோ அவ்வளவு ஆட்டையை போட்டு சங்கத்திற்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுகொள்கிறது.
மீண்டும் நமது தமிழக மின்துறைக்கு நம்முடைய மனம் கனிந்த வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்!!
சனி, 18 அக்டோபர், 2008
குறுகிய காலத்தில் கோடிஸ்வரராவது எப்படி? - நூறு சதவித வெற்றிக்கு எளிய வழிகள் !!
அவ்வாறில்லாமல் எல்லோரும் எளிய முறையில் கோடிஸ்வரர் ஆக வழிகள் உள்ளன ,அவற்றில் சில பயனுள்ள வழிகள்.
* நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஏதேனும் ஒரு பெட்ரோல் பேங்க் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துகொள்ளவேண்டும் ,இரவோடு இரவாக பக்க வாட்டில் துளை இட்டு .தினமும் ஒரு பத்து லிடேர் பெட்ரோலை
உறிஞ்சவேண்டும்.
இதன் சந்தை மதிப்பு பதினெட்டாயிரம் ரூபாய் ,இதையே இருபத்து லிற்றாக உறிஞ்சினால் முப்பத்தி ஆறாயிரம் ருபாய்
* இப்படி விற்று வருகின்ற பணத்தை ,மீட்டர் வட்டி ,deluxe வட்டி எண்டு நீங்கள் விட்டால் நான்கு லட்ச ருபாய் பெற்றுவிடலாம் ,iது உங்களுடைய ஒரு மாத உரிஜுதளுடைய வருமானம்
* இப்படி கிடைக்கின்ற பணத்தை அந்த பகுதியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் ,நகராட்சி தலைவர் என கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள்
* கையேடு கையாக ஒரு நல்ல நாள் பார்த்து ஆளுங்கட்சியின் அடிப்படை உறுபினாரக சேர்ந்து விடுங்கள்
* இப்போதெல்லாம் நிறைய மாநாடுகளும், கூட்டங்களும் நடைபெறுவதால் ,ஆட்களை தேடி பிடித்து சப்பலை செய்யுங்கள் தலைக்கு நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்
* அந்த பகுதியில் சாராயம் காய்சுபவர்களை தேடி பிடித்து partnaragi விடுங்கள் .உங்களை யாராலும் பிடிக்க இயலாத உயரத்திற்கு பொய் விடுவீர்கள்
* ஆளுங்கட்சிக்கு எதிராக யாரேனும் அறிக்கையோ ,ஆர்ப்பாட்டமோ செய்தால் அவர்கள் ஆபீஸ் எதிரே தீக்குளிக்க போவதாக ஆர்ப்பாட்டம் செய்து கோதாவில் இறங்குங்கள் . இது தலைமைக்கு போகும்
பின்னர் அடுத்த தேர்தலில் உங்களுக்கு சீட்டு கிடைதுவிடு அப்புறம் என்ன ?
ஆரசியல் வாதியகிவிட்டால் தமிழ்நாடே உங்களுடையது !
எதை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுயதாகி கொள்ளளலாம் !
இரண்டாயிரம் கோடி என்பதெல்லாம் சர்வ சாதாரணம் , இப்படி வந்தவர்கள்தான் இப்போது டெல்லியிலும்,கோட்டையிலும் ,கோடி ஏற்றி கொண்டு திரிகிறார்கள்.
இங்கிலீஷ் தெரிய வேண்டாம் , உலக புள்ளி விவரங்கள் தெரிய வேண்டாம், கொஞ்சம் கழுதை பால் மட்டும் அடிக்கடி குடிக்க வேண்டும் அப்போதுதான் சிம்ம குரலில் கத்த முடியும்
ஒரு வேளை நீங்கள் பெரிய கோடிஸ்வரராக ஆகி விட்டால் ஒரு பெட்டி மட்டும் கொடுத்து அனுப்புங்கள் ஓகே வா ??
புதன், 15 அக்டோபர், 2008
மாப்பிள்ளைகளே! வருங்கால மருமகன்களே!!-உஷார் இதை தவறாமல் படியுங்கள்!

திங்கள், 13 அக்டோபர், 2008
மானாட,மயிலாட- பார்ப்பவன் மதிகெட்டோட!!

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சேவை செய்திட எத்தனையோ தொலைக்காட்சிகள் தோன்றி,தமிழ் மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கின்றன .!
ஆபாச குப்பைகளை,அரசியல் திசை திருப்பும் கோமாளி தனங்களை போட்டி போட்டு கொண்டு ,பல சேனல் களும் ஓளி பரப்பி தங்களுடைய குள்ள நரித்தனத்தை சாதுரியமாக மக்கள் மீது திருப்ப பார்க்கின்றன.
நேற்றைய கலைஞர் டிவியின் மானாட,மயிலாட ஓளி பரப்பில் ஒரு கோமாளித்தனம் காட்டப்பட்டது .ஆடிய எல்லா ஜோடிகளுமே அறை இறுதியில் இருந்து இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதாக கலா அக்கா அறிவிக்க. !!
ஒவ்வொரு ஜோடியும் கண்ணிற் விட்டு தேம்பி தேம்பி அழுதார்கள்.......
அவர்கள் அழுவதை பார்த்து கலா அக்கா , குஷ்பூ மேடம், ரம்பா மேடம், இன்னும் வந்திருந்த ஜோடிகளின் அருமை தாய்களும்,தங்கைகளும் அழுது நிகழ்ச்சியை நெஞ்சை நெகிழ செய்துவிட்டார்கள்!!
ஆபாச உடைகளும் ,மழை தீம்களும், அடுகிறவர்களுக்கு கெமிஸ்ட்ரி வேண்டும் என்ற அறிவுரைகளும் .ஒவ்வொரு போட்டியாளரும் கலா அக்காவை புகழ்வதும் .அடிக்கடி கண்ணிற் விடுவதும் தமிழனின் தலைவிதிஎன நொந்து கொள்ளவே செய்யதொன்றுகின்றன.
கலைஞர் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள டிவி தமிழுக்கு அந்நியமாகவே நிகழ்ட்சிகளை ஓளி பரப்பிவருகிறது.இதற்கு இடையே சன் நெட் வோர்கிற்கும் கலைஞர் டிவி இக்கும் இடையே வாரிசு மற்றும் தொழில் போட்டிகளுக்கான போர் தளங்களாகவே மாறி வருகின்றன
மக்கள் இது போன்ற (மானாட மயிலாட போன்ற) நிகழ்ட்சிகளை ஆதரிக்க கூடாது .தமிழை காசுக்கு விற்கும் சாமர்த்தியத்தை மக்கள் அனுமதிக்க கூடாது.
மின் வெட்டு, பொருட்களின் விலை உயர்வு, என கழ்டபடுகின்ற தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைப்பது வேதனையிலும் வேதனையே
சனி, 11 அக்டோபர், 2008
முதல் மற்றும் இரண்டாம் உலக போர் -அறிய வேண்டிய அரிய தகவல் ,படங்கள்
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெருமாபாலன் பகுதிகளில் நடைபெற்ற பாரிய போர் இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 என அறியப்படுகிறது.
முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் யேர்மனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைப்பெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டு போரிட்டன.
மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர்வரை பலியானார்கள்
இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா சின்னப் பையன், கொழுத்த மனிதன் என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது


இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன.
நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரிய, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி யோடு போரிட்டதே முதல் உலகப்போர் ஆகும்.
மனிதர்கள் பலவிதம் - சீன உணவு திகைபூட்டும் படங்கள் !!!

விசித்திரமான உணவு முறைக்கு தென் கிழக்கு ஆசியர்கள் பெயர் போனவர்கள் !.மனிதர்கள் பலவிதம் சீனர்கள் உணவும் பலவிதம். மேலே நீங்கள் பார்ப்பது நாய் தந்தூரி..
சீன ,கொரிய உணவில் நாய் மாமிசம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது!

இது வேறு ஒன்றும் இல்லை பாம்பு சூப் .நீங்களும் ட்ரை பண்ணுங்கள் !
வெள்ளி, 10 அக்டோபர், 2008
உலகின் தற்பொழுதைய ஏழு அதிசயங்கள் - சுவாரசிய தகவல்கள் -

பெரிய பிரமிட்137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.
பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், பசோல்ட், கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது


ரோமானிய கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு.

சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரீகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது.

பெற்றா கோட்டை கிரேக்க மொழியில் பாறையை குறிக்கும் .ஜோர்டான் நாட்டில் உள்ள கருவூலம் . ஹோர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை ,ஆயிரத்தி எட்நூற்றி பனிரெண்டு வரை மேற்கு நாடுகளுக்கு தெரியாமலே இருந்தது .

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது
செவ்வாய், 7 அக்டோபர், 2008
செஞ்சிக் கோட்டை-விளக்க படங்களும் வரலாறும்!!!

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர்

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.
ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்


இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது
திங்கள், 6 அக்டோபர், 2008
திருப்பதி - தரிசன அழகிய படங்கள் !!
கிருஷ்ணா தேவராயர் காலத்தில் புகழ் பெற தொடங்கியது.
சனி, 4 அக்டோபர், 2008
அரசியல்- இடி முழக்க கவிதை !!
நவின பெயர் - அரசியல் !
வார்த்தைகளை வீசி
வாக்குகளை பெற்று
மக்களின் வரி பணத்தில்
வலம் சேர்க்கும் திருட்டு
கும்பலின் நிஜ முகம் -அரசியல் !
உடன் பிறப்பே !ரத்தத்தின் ரத்தமே !
கண்மணிகளே !என வெற்று
வார்த்தை ஜாலங்களால் ..
வானுயர மாளிகைகளும் ,
பல கோடி வணிக நிறுவனங்களையும்,
கட்டுக்குள் வைத்துக்கொண்டு
கண்ணீர் விடும் -குள்ள நரித்தனத்தின்
மறுபெயர் அரசியல் !
இன்று ஒரு பேச்சு !
நாளை ஒரு பேச்சு !
இவர்கள் குடித்தது தாய் பாலல்ல
மதுவென்றே சொல்லதோன்றும்
உண்மை குடி மகன்களின்
உறைவிடம் -அரசியல் !
நாட்டின் சாபமே
வரமென நாம் நினைக்கும்
விந்தையின் மறுபெயர்-அரசியல் !
-ராஜ்குமார் -
வெள்ளி, 3 அக்டோபர், 2008
பேய் பேய்தான் - உண்மைகதை !!
பனி கொட்டிய அந்த இரவினை என்னால் மறக்க முடியாது.அப்படி ஒரு குளிர்!.பனி மட்டும் இல்லை அன்று என்னுடைய வாழ்க்கையில் நான் கண்ட சம்பவமும்தான்.அந்த இரவு நேரத்தில் செகண்ட் ஷோ முடிந்து மிதிவண்டியில் வீட்டிற்கு வந்து கொண்டிருதேன் .
ஏற்கனவே பலமுறை வந்த பாதை தான் .டவுன் இல் இருந்து கிராமத்திற்கு செல்லும் மண்சாலை திரும்பும் போது சட்டென்று இருட்டும் .தவளைகளின் சத்தமும் வண்டியின் கேரியரில் உட்கார்ந்து கொண்டதை போல் இருந்தது
வீட்டில் எத்தனையோ முறை திட்டு வாங்கினாலும் இப்படி இரவு நேரத்தில் வீடு திரும்புபோது சற்று பயமும் சேர்ந்து கொள்ளவே செய்கின்றது.
குண்டும் குழியுமாய் அந்த மண் சாலை வண்டியின் வேகத்தை மட்டுபடுதியதுவேடியப்பன் கோயில் சந்து திரும்பி பத்து நிமிழதில வீட்டுக்கு போய்டலாம் .
இதோ கோயில் தாண்டி வந்தாச்சி .புளியமரத்து டீ கடை இருக்கற எடம் தெரியல!. ரொம்ப நாள் பூட்டி கிடக்கும் கவுண்டர் வீட்டில் இருந்து ஐந்தாவது நிமிழம் வீடு வந்திடும்,....சட்டென்று சைக்கிளின் முன் சக்கரத்தில் ஏதோ பெரிய கல் ஒன்று இடறியது .நான் சுதாரிக்கும் முன் வண்டியிலிருந்து நான்நாலு அடி தள்ளி விழுந்தேன் !
மீண்டும் எழுந்து சைக்கிள்ஐ , தூக்கி நிறுத்தும்போதே கவுண்டர் வீட்டு வாயிலில் இருந்து என்னை நோக்கி ஒரு குரல் வந்தது "யாரது !!".
கவுண்டர் ரொம்ப நாள் புத்தி சரியில்லாம இருந்து இறந்து போய் வருஷம் ஒன் ஆகுது
குரல் வந்த திசை நோக்கினேன் .யாரென்று சரியாக சொல்லமுடியவில்லை அம்பது வயசிருக்கும் .கவுண்டர் மாதிரி தான் தெரிந்தது !!
யாரது ?? இந்த முறை குரலில் மிரட்டல் தெரிந்தது .நான் பேச முயல்வதற்குள் அது எனக்கு வெகு அருகில் வந்து நின்றது . இடுங்கி போன கண்கள் ,காவியேறிய பற்கள்,வெகு நாள் சாபிடாத ஒட்டிய வயிறு ! குரலில் மட்டும் சற்று அதிக மிரட்டல்.
நான் பேச முனையவில்லை ஏனெனில் இது கௌண்டேரேதான் .உடல் வேர்க்க ஆரம்பித்து விட்டது .நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி வா வா எதாவது கொடு !! பற்கள் நறநறக்க கவுண்டர் என்னை நோக்கி
அந்த நடையில் தள்ளாட்டமும் வேகமும் ,ஒருங்கே இருந்தது.சட்டென்று அவருடைய கையில் வெட்டரிவாள் ஒன்று வந்து சேர்ந்தது .நான் யோசிக்கும் முன்னே என்னை நோக்கி அவர் விசியத்தில் என்னுடைய தலை வெட்டுப்பட்டது .
நான் கதறினேன் .கவுண்டர் மண்டியிட்டு ரத்தம் குடித்தார் .உடம்பு விலுக் விலுக் என்று தூக்கி போட்டது .மண்டையில் பட்டென்று அடி விழுந்தது நாயே பகல் தூக்கமா ? எழுந்திரு அப்பா வின் சத்தம் .அன்று இரவு செகண்ட் ஷோ போகலாம் என்றிந்த நான் வெகு நீண்ட நாள் போகவே இல்லை
வியாழன், 2 அக்டோபர், 2008
தஞ்சை பெரிய கோயில் - தமிழனின் அழகு,அற்புதம்,கம்பீரம் !!!

அற்புதமான கலை நயம் மிக்க பிரகார சிலைகள்
பதினெட்டு அடி உயரம் கொண்ட துவார பாலகர்கள்
இந்த கோவிலில் உள்ள சிவலிங்கமே மிக கம்பீரமும் ,உயரமும் கொண்டாதாகும்
ஒரு தமிழ் மன்னனின் பெருஎண்ணம்,உலகமெலாம் தமிழனின் பெருமை சாற்றும் உன்னத தெய்விக கலை படைப்பு