திங்கள், 8 செப்டம்பர், 2008

ரஜினிகாந்தா?விஜயகாந்தா?சரத்குமாரா?



தமிழகத்தின் கடந்த கால அரசியல் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தோமானால், சினிமா என்கிற மயகயிற்றை வீசி அரியணை பிடித்தவர்களே அதிகம் .கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,அறிஞர் அண்ணா கூட சினிமாவின் வாசம் தொட்டே முதலமைச்சர் ஆனார்கள்!


ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு தொலை நோக்கு பார்வையும்,மக்களின் நாடி துடிப்பையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும் !தற்பொழுது மூவரை வருங்கால முதலமைச்சர் என்று கூப்பாடு போட்டு சத்தம்

கீட்டுக்கொண்டுள்ளதுதிரு.ரஜினிகாந்த்,திரு.விஜயகாந்த்,திரு சரத்குமார் என மூவர் பெயரும் ஊடகங்களாலும்,ரசிக கூட்டத்தாலும் முன்மொழியபட்டபடி


.ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கும் நாட்டுக்கும் நன்று!கடந்த காலங்களில் அவருடைய நிலையற்ற வெளிப்பாடுகள் , உறுதிப்படுத்துகின்றன!.சினிமாவில் சூப்பர் ஸ்டாராக முடிவுகளை தூள் படுத்தும் அவரால் அரசியலில் தனது நிலைபாட்டை உறுதியாக சொல்ல இயலவில்லை!


திரு.விஜயகாந்த் சற்றே மாறுபட்ட அரசியல் முதிர்ச்சி தெரிந்தாலும் அவரால் தனித்து அரசியல் நடத்த முடியுமா என்பது மிக பெரிய கேள்வி?ஒருவேளை ஏதேனும் ஒரு கட்சியோடு கூட்டு வைத்தாலும் அது அவருடைய தனித்தன்மையை அழித்து அவரும் ஒரு சாதரன அரசியல் வாதியாகவே அறியபடுவார்!

திரு சரத்குமார் அவருக்கு போதுமான பலம் இருப்பதாக தெரியவில்லை அவர் பத்தோடு ஒன்றாக நிற்கின்ற நிலைமேயே ஏற்படும்!


மற்றும் முதல்வர் கனவில் திரு கார்த்திக்,திரு.விஜய த.ராஜேந்தர் என சினிமா பட்டாளம் கடை விரித்து வைத்து கொண்டுள்ள அவல நிலை நம் தமிழ்நாட்டில் உள்ளது !அவர்களை ஆதரித்து அரியணை ஏற்றி அடிபட தமிழ் சமுதாயம் தயாரா ?நீங்கள் தேர்ந்தெடுக்க படவேண்டியவர் தகுதியானவரா ? துடிப்பான லஞ்சமற்ற ,ஆட்சியை தருவாரா? சரியான நேரத்தில் சரியான் முடிவுகளை எடுப்பாரா என்பதை சிந்தித்து வாட்களியுங்கள் !!