தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! ,என்று சூளுரைத்த காலம் போய்,ஒப்புயர்வற்ற ஒரு இனம் பூண்டோடு அழிக்கவும் அடக்கி ஆளவும் ..அகதிகளாக வாழ்கையின் சோக வடுக்களை தாங்கி புலம் பெயர்ந்து வாழுகின்ற அவலம் ,காலத்தின் கொடுமை என்றே சொல்ல தோன்றுகிறது .
நமது தமிழ் பண்பாடும் ,கலாசார அமைப்பும் இந்த புவியில் உள்ள மற்ற எல்லா தேசங்களை காட்டிலும் வேறுப்பட்டதும் ,மிக்க தொன்மை மிக்க அறிவு சார் கலாச்சாரம் ஆகும்.
தமிழன் எங்கு புலம் பெயர்ந்தாலும் அவன் தனது கலாச்சார அடையாளத்தையும் இனங்காடியே வாழ்ந்து வந்தும் ,வாழ்ந்து கொண்டும் உள்ளான். சமுக அமைப்பாக ஆகட்டும் , பணி தன்மையாகட்டும் தனித்தே அடையாளம் காட்டக்கூடிய சிறந்த நிலையிலேயே தமிழ் மக்கள் கடல் கடந்தும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர்
கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.இராசநாயக முதலியார் அவர்களுடைய கருத்து.
இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள், மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இஸ்லாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் ஆவர்.
இந்தியத் தமிழ் முஸ்லீம்கள் போலில்லாமல் இவர்கள் முஸ்லீம்கள் என்ற சமய அரசியல் அடையாளத்தை முன்னிறுத்துகின்றார்கள். 1800 களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு என வருவிக்கப்பட்ட
தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களினதும் மனித உரிமைகளை சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்க்ளை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது.
இப்படி வெடித்த போராட்டம் இன்னும் முடிந்த பாடில்லை !!.எண்ணற்ற தமிழர் தம் இன்னுயிரை இழந்து அகதிகளாக தமிழ் மக்கள் அங்கும் இங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்
அரசியல் பூர்வமான தீர்வு ஒன்றே இந்த வன்கொடுமைக்கு எதிரான தீர்வாகும்.அடக்கு முறையால் ஒரு இனம் அழிந்ததாக எந்த வரலாற்றிலும் இல்லை.!பல வரலாற்று சிறப்புகளை உடைய தமிழும் ,தமிழரும் நீறு பூத்த நெருப்பாய் இந்த கொடுமையிளிரிந்து மீள நமது இந்திய அரசும், தமிழ்,தமிழ் என்று முழங்கும் தமிழக அரசும் பேரு முயர்ச்சி எடுக்க நாம் ஒவ்வாருவரும் நம்மால் இயன்ற சிந்தனை உத்வேகத்தை அளிப்போம்
வாழ்க தமிழ்! வளர்க்க தமிழரின் சிறப்பு !!