வியாழன், 28 ஆகஸ்ட், 2008

திருவண்ணாமலை- சிவனின் உறைவிடம் !!!



திருவண்ணாமலை

திருவண்ணாமலை (ஆங்கிலம்:Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
சென்னையிலிருந்து நூற்றி தொண்ணுறு கி.மி தொலைவில் உள்ளது. ராஜகோபுரம் இரு நூற்றி பதினேழு அடி உயரம் கொண்டது .
அடிக்கு ஒரு லிங்கம் என புனிதமாக போற்றபெற்ற இத்தளத்தில் செருப்பணிந்து செல்வது தவறாக கொள்ளப்பட்டது.
கிரிவலம் எனும் மலை சுற்றும் பொது வெறும் படத்தில் பக்தர்கள் வலம் வருவது இங்கு வழக்கம் .ரமண மஹரிஷி , இடைக்காடு சித்தர் ,யோகி ராம் சுரத் குமார்,மான் செஷ்றி சுவாமிகள் என பல ஞானிகளும் சித்தர்களும் வாழ்ந்ததும் ,இன்னும் பலர் வாழ்ந்து வருவதும் இங்கு உண்மை.

பார்க்கவேண்டிய இடங்கள்
திருவண்ணாமலைஆலயம்,
ரமண மஹரிஷி ஆச்ரமம்,
ராம் சுரத் குமார் ஆச்ரமம்,
ஆதி அண்ணாமலை ஆலயம்,
சாத்தனூர் அனை,
செஞ்சீ கோட்டை ...

கோவில்நகரம்
சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.
திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும்.
இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும்.
இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். [1] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.22° N 79.07° E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,301 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருவண்ணாமலை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவண்ணாமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அருணாசலேஸ்வரர் மலையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத் தோற்றம்

அருணாசலேஸ்வரர் அருள் பெருங்கள் ..ஆனந்தமாய் வாழுங்கள் !!

மக்களின் ஜனாதிபதி:ஏ. பி. ஜே. அப்துல் கலாம்!!











ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு




அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார்.


கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர்.


கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது.


தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் கலாம் குறிப்பிட்டுள்ளார்




எழுதியுள்ள நூல்கள்
அக்னிச் சிறகுகள்
எழுச்சித் தீபங்கள்
இந்தியா 2020
india 2010




புதன், 27 ஆகஸ்ட், 2008

சிவாஜி ராவ் காயக்வாட்-ரஜினிகாந்த் உங்கள் பார்வைக்கு













ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் காயக்வாட் [மராட்டியில் शिवाजीराव गायकवाड / ஷிவாஜிராவ் காயக்வாட்] ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.






இளமை
ரஜினிகாந்த், டிசம்பர் 12 1949 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோஜி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

திரைப்படங்களில்
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமய புனிதரான ராகவேந்திரரின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா (திரைப்படம்) வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஹாசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில் ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு
ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ஆன்மீக ஈடுபாடு
ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி ஆவார். சிறு வயது முதல் ராகவேந்திரர், ராமகிருஷ்ணர் போன்றோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அடிக்கடி இமய மலையில் உள்ள ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் தொடர்பு

1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார்.

குடும்பம்
16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுஷை மணந்தார்.












அனல் சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் ஏறினால், அரை மணி நேரத்தில் ச்சில்லென பெங்களூர்!

...சமீபத்தில் ஒரு நாள் சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினியுடன் பேசிக்கொண்டு இருந்தோம். விகடனில் வெளிவரும் தன் ஆன்மிக பயணத் தொடருக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பு பற்றி சிலிர்ப்புடன் இருந்தார்.



‘‘இமயமலைப் பயணம் பற்றி ஒரு ஆன்மிகத் தொடருக்கு இப்படி ஒரு வரவேற்புகிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ். வெரிகுட்... பிரமாதம்!’’ என்றார். பாபாஜியின் மகத்துவங்கள் பற்றி நிறைய எடுத்துச் சொன்னார். ‘‘நாம ரிலாக்ஸ்டா பேசலாம். நிறைய பேசலாம்.

பெங்களூர்ல மீட் பண்ணலாமா?’’ என்று அழைத்தார். பொதுவாக ரஜினி, ஓய்வுக்கும் தனிமைக்கும் மட்டுமே பெங்களூரைத் தேர்ந்தெடுப்பார். முதல் முறையாக அங்கே நமக்கு அழைப்பு!

ஜூன் 10... பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ஏரியா...

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பிரபலங்கள் வசிக்கிற வசீகரமான பகுதி. ஏரியாவை இப்போது கூடுதல் முக்கியத்துவத்துடன் கவனிக்கிறது கர்நாடக அரசாங்கம். காரணம், ரஜினி!

‘‘ஹாய்!’’ கறுப்பு குர்தா, வெள்ளை பைஜாமாவில் துள்ளலாக வரவேற்கிற ரஜினியிடமிருந்து நமக்குள்ளும் பாய்கிறது உற்சாக மின்சாரம்!




‘‘வாங்க, இங்கே இதான் நம்ம வீடு!’’ என உள்ளே அழைத்துச் செல்கிறார்.






‘‘சும்மா சிம்பிளா, நீட் அண்ட் ஸ்வீட் ஹோம்!’’ என வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார். எளிமையான டபுள் பெட்ரூம் ஃப்ளாட். ஏராளமான சினிமா, மியூஸிக் ஆல்பங்கள். ஒரு ஷெல்ஃப் நிறைய புத்தகங்கள். சுவரில் பாபாஜி படங்கள். ஒரே ஒரு உதவியாளர் மட்டும் உடனிருக் கிறார். ‘‘இங்கே நான் மட்டும்தான். திடீர்னு நினைச்சா பறந்து வந்துடுவேன்’’எனச்சிரிக்கிறார்ரஜினி






தமிழ்நாட்டிலேயே பிரபலமான தலைமுடியைக் கோதும் விரல்கள். காற்றில் கபடி ஆடுகிற கைகளே பாதி பேசிவிடுகின்றன. புருவங்கள் வருடியபடி, ஒரு முறை இடம் வலம் நடக்கிற ரஜினி, ‘‘காபி ஆர் டீ..? என்ன சாப்பிட லாம்?’’ எனக் கேட்டு, ‘‘ஹலோவ்’’ என குரல் கொடுக்க, பெங்களூர் குளிருக்கு இதமான தேநீர் கோப்பைகள் இறக்குமதியா கின்றன.

‘‘ரஜினி சார், நீங்க ரொம்ப அபூர்வமான பொருளா ஆகிட் டீங்க... அதுவும் மீடியா முன் ரஜினி வர்றது அபூர்வத்திலும் அபூர்வமா ஆகிடுச்சு..’’ என்றதுமே சிரிக்கிறார்.

‘‘இது எப்படி ஆகிப் போச்சுன்னா... முதல்ல ஷ¨ட்டிங் நடத்த வெளியே போகலாம்னா, ‘இல்ல சார்... கூட்டம் தாக்குப் பிடிக்க முடியாது. ஸ்டுடியோவிலேயே செட் போட்டு எடுத்திர லாம்’னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம் மைசூர், பெங்களூர்னு ஷ¨ட்டிங் போக வேண்டியதாச்சு. இது கொஞ்சங்கொஞ்சமா வளர்ந்து, ஒரு கட்டத்தில் சும்மா நான் வெளியே வர்றதே முடியாதுன்னு ஆகிப்போச்சு. ஆனா, எப்பவும் நான் அதே ஆளுதான்!’’

‘‘ஏன் மௌனத்தையே உங்க ஆயுதமா தேர்ந்தெடுத்தீங்க?’’

‘‘நத்திங் ஸ்பெஷல்! முன்னெல்லாம் பிரஸ்னா ஆறேழு பேர் வருவாங்க... ஆனா, இப்போ பிரஸ் மீட்னாலே, அது ஏதோ பப்ளிக் மீட்டிங் மாதிரி நடக்குது. இருநூறு பேரெல்லாம் வர்றாங்களே. பொதுவா பிரஸ்ல நிறைய நண்பர்கள் உண்டு. ஆனா ஒரு சிலர்... ஒரு சிலர் மட்டும் கொஞ்சம் குறும்பு பண்ணிடறாங்க. காயப்படுத்திடறாங்க!

என் மேரேஜ்ல ஆரம்பிச்சு, டாட்டர் மேரேஜ் வரைக்கும் என்னென்னவெல்லாம் எழுதிட்டாங்க. அது தப்பில்லையா! பட்.. ஐ ரெஸ்பெக்ட் பிரஸ்!’’

நீங்க ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ‘இதுதான் பைரவி வீடா?Õனு சரேல்னு கதவைத் தள்ளிட்டு உள்ளே வருவீங்களே... அப்போ அந்த சினிமா பிரவே சத்தை ஒரு வாய்ப்புனு நினைச்சீங்களா, இல்லே, இதுதான் இனி வாழ்க்கைனு நம்பினீங்களா?

‘‘வாழ்க்கைனுதான்! எவ்வளவு நாள் கனவு, போராட்டத்துக்கு அப்புறம் எனக்குக் கிடைச்ச வாய்ப்பு அது! சினிமா டிராமானு சான்ஸ் தேடி திரிஞ்சதால், கண்டக்டர் வேலையிலிருந்து என்னை டிஸ்மிஸ் பண்ணின நேரம் அது (பெரிதாகச் சிரிக்கிறார்)! ஹைய்யோ... அது பெரிய கதை!
ஆனால், சினிமா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தரும்னு நான் நினைச்சுக் கூடப் பார்த்ததே இல்லை... ரொம்ப தூரம் கடந்து வந்துட்டேன்!’’

‘‘இதோ இப்போ கோடை விடுமுறை முடிஞ்சு ஸ்கூலெல்லாம்கூடத் திறந் தாச்சு. ஆனாலும், ‘சந்திரமுகி’ எல்லா ஷோவும் ஹவுஸ்ஃபுல் ஆகுது. இந்த வெற்றி உங்களுக்கு உணர்த்தியது என்ன?’’

என்றதும், விறுவிறுவென தலை கோதியபடி, நாலைந்து விநாடிகள் தீர்க்கமாக யோசிக்கிற ரஜினி பிரமாதமாகச் சிரிக்கிறார்.

‘‘டெஃபனிட்டா ஹிட்டாகும், நல்லா ஓடும்னு எனக்குத் தெரியும். ஆனா, இத்தனை பெரிய வெற்றி எதிர்பார்க்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் மக்கள் என் மேல் வெச்சிருக்கிற அன்பு ஒரு துளிகூடக் குறையலைனு உணர்ந்தேன்.’’

‘‘ஒரு பக்கம் கிளாமரான சினிமா லைஃப் ஸ்டைல்... இன்னொரு பக்கம் ஆன்மிகம். அதுவும் இமயமலைக்கெல்லாம் போய் தனிமையில் தன்னைத் தேடுகிற ஆன்மிகம்... ஒரே நேரத்தில் எப்படி இரண்டு வேறு தளங்களில் உங்களால் இயங்க முடியுது?’’

‘‘ம்ம்ம்... இதுதான் நிஜம். சினிமா தான் ரஜினி! ஆன்மிகம்... அது வந்து அப்பப்போ போயிட்டு வர்றது. கொஞ்சங்கொஞ்சமா மனசு அதில் லயிக்க ஆரம்பிச்சிருக்கு. ரெண்டும் கலந்ததுதான் நான்!

மனுஷனுக்கு முதல்ல ஆசைகள், கனவுகள்... ஒரு கற்பனை உலகத்தில் மிதப்பான். அப்புறம் தேவைகள்... அதுக்காக வொர்க்\அவுட் பண்ணுவான். அது கெடைச்சதும், தானாகவே ஒரு ஆடம்பரம் வந்துடும். நினைச்சதெல்லாம் செய்ய ஆரம்பிப்பான். அப்புறம் மலரும் நினைவுகள்! எங்கேயிருந்து வந்தோம்... எப்படி வளர்ந்தோம்னு நினைப்பு ஓடும். இப்படியே போறப்போ சட்டுனு மனசுக்குள் ஒரு ‘வேக்குவம்’ & வெறுமை... தனிமை வரும். நாம யாரு, என்ன பண்ணிட்டு இருக்கோம்னு இந்தப் பிறவிக்கு ஒரு அர்த்தம் தரத் தோணும்! எது செஞ்சாலும் சரி, நல்லது செய்யணும்னு ஒரு முடிவெடுத்து செயல்பட்டா நிச்சயம் அந்த வெற்றிடத்தை ஈடுகட்டிடலாம்!’’

‘‘ரஜினிக்கு அழகே சிம்ப்ளிசிட்டிதான். இதுதான் உங்க இயல்பா? இந்த லைஃப் ஸ்டைல் உங்களுக்கு அமைஞ்சது எப்படி?’’

‘‘தெரியலே... இப்படியே தான் இருக்கேன். பொதுவா எனக்குத் தேவைகள் பெரிசா இருந்ததில்லை. எனக்கு எப்பவுமே மன நிம்மதி மட்டும்தான் முக்கியம். மத்த எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். இப்படி இருக்கணும்... அப்படி இருக்கணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை. இதுக்குப் பேர் சிம்ப்ளிசிட்டின்னா, ஓகே! இதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!’’



‘‘எல்லாருக்கும் அம்மா & அப்பா சொல்லிக் கொடுத்து இறை நம்பிக்கை வரும். ரஜினி சாருக்கு எப்படி வந்தது?’’

‘‘நல்ல கேள்வி! இறை நம்பிக்கை முதல்ல எப்போ எப்படி வந்துச்சுனு சொல்லத் தெரியலை. ஆனா, ஒரு ஏழெட்டு வயசிலேயே எனக்கு மனசுக்குள் மூணு உருவங்கள் வந்துபோகும்... ஒண்ணு ஹிமாலயாஸ். இன்னொண்ணு ஸ்வான் & அன்னப் பறவை! அப்புறம் கமலம்... லோட்டஸ்... தாமரை! இறைவன் மேல ஆழமா எனக்கு நம்பிக்கை வந்ததுக்கு நிறையச் சம்பவங்கள் இருக்கு. அது ரொம்பப் பெரிய ஏரியா!
அப்புறம் என் பிரேயர்...

பொதுவா கடவுள் முன்னால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா நிப்பாங்க. சில பேரு, ‘சாமி எனக்கு அது வேணும்... இது வேணும்’னு நிறைய கோரிக்கைகளை வெப்பாங்க. சிலருக்கு கோரிக்கையே இருக்காது. டோட்டலா சரண்டர் ஆகிடுவாங்க. இன்னும் சிலர், கடவுளுக்கு நன்றி சொல்லப் போவாங்க... Ôதாங்க்ஸ் கிவிங்Õ மட்டுமே அவங்க பிரார்த்தனையா இருக்கும்!

என் பிரேயர் ஒவ்வொரு கட்டத்திலேயும் ஒவ்வொரு விதமா இருந்திருக்கு. இப்ப என் பிரேயர் எல்லாம் ‘இறைவா! உன் நினைவோட என்னை வெச்சிரு எப்போதும், அது போதும்!’ அவ்வளவுதான்!’’

‘‘நீங்க திட்டம் போட்டு, கணக்குப் போட்டுத்தான் எப்பவும் செயல்படுவீங்களா... இல்லை, உங்க இன்டியூஷன் உங்களை வழி நடத்துதா?’’

‘‘நிச்சயமா உள்ளுணர்வு தான்! எப்பவுமே நமக்கு ‘ஆண்டவன் சொல்றான், நாம செய்றோம்’தான். இந்தக் கணக்கு போட்டு காய் நகர்த்தற சமாசாரமே தெரியாது. மனசு என்ன சொல்லுதோ அப்படிப் போயிட்டே இருப்பேன்!’’






‘‘பர்சனலா ஒரு கேள்வி... ரஜினி சாருக்கு ரெண்டும் பெண் பிள்ளைகள். எப்போவாவது ‘அடடா, நமக்கு ஒரு பையன் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?’னு யோசிச்சதுண்டா?

‘‘(துளியும் தயங்காமல்) நெவர்! ஆண் பிள்ளை இல்லியேனு யோசிச்சதே இல்லை. ரெண்டும் பெண் குழந்தைகள்னு சந்தோஷப்பட்ட நேரங்களே அதிகம். ஐஸ்வர்யா & சௌந்தர்யானு நான் ரெண்டு பெண்களுக்குத் தகப்பன். காலையில் எந்திரிச்சு வரும்போது, வீட்டில் ரெண்டு மகள்களும் கலகலனு நடமாடுறதைப் பார்த்தாலே ஒரு தனி சந்தோஷம் வரும். ஆமா, ஒரே ஒரு பொண்ணு இருந்தாக்கூட போதும்... அந்த வீட்டுக்கே உயிர் வந்துடும். ஏன்னா... பெண்தான் சக்தி... தாய்!

ஒரு வீட்ல ஆம்பள கெட்டுப் போயிட்டால், அந்தக் குடும்பத்தை பொண்ணு எப்படியாவது பொழைக்க வெச்சிடுவா. ஆனா, ஒரு பொண்ணு கெட்டுப் போயிட்டா, அந்தக் குடும்பமே அழிஞ்சுபோயிடும்னு சொல் வாங்க! தட்ஸ் வெரி ட்ரூ! பெண் அப்படியரு மகா சக்தி!’’

‘‘வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப கரடுமுரடான பாதையில் பயணம் வந்திருக்கீங்க. இந்த உயரத்துக்கு வர எவ்வளவோ விலை கொடுத்திருப்பீங்க... எங்கேயோ எதிர்பார்க்காத இடத்தில் காயப்பட்டு இருப்பீங்க... அவமானங்களைக்கூட சந்திக்க வேண்டி இருந்திருக்கும்... சில சமயம் எதிர்பார்க்காத தோல்விகள்... ஆனால், இது அத்தனையையும் தாண்டி நீங்க உங்களைக் காப்பாத்திக்கிட்டது எப்படி?’’

‘‘டியூட்டி! செய்ற வேலையில் நமக்கு இருக்குற கன்விக்ஷன்தான் எப்பவுமே நம்மைக் காப்பாத்தும்!

ஒரு சகோதரனா, ஒரு நண்பனா, நடிகனா, மகனா, அப்பனா, குடும்பத் தலைவனா நாம என்ன ரோல் எடுக்கிறோமோ, அதைக் கவனமா முழு மனசோட செய்துடணும்.

வாழ்க்கை ஒலிம்பிக்ஸ் மாதிரி... கிரவுண்ட்ல போய் நின்னுட்டோம்னா, எடுத்துக்கிட்ட வேலையைச் சரியா செஞ்சு, சரியா ஓடிப் போய் எல்லையைத் தொட்டுறணும். ‘கடமையைச் செய்!’ தான் என் பாலிசி! நிச்சயம் பலன் தானே பின்னால் வரும்.

ஏன், நான் சினிமா பண்றப்பகூட அப்படித் தான். சமயத்தில் அம்பது அறுபது சதவீதம் படம் நடக்கும்போதே, அது ஓடுமா ஓடாதானு தெளிவாத் தெரிஞ் சுடும். ரெடியான வரையில் அந்தப் படம் நமக்கு புடிக்கலைன்னே வெச்சுக்குங்க... அதுக்காக அதை விட்டுட்டு விலகிட மாட்டேன். என் ஆர்வத்தையும் குறைச்சுக்க மாட்டேன். அது கமிட்மென்ட். அங்கே நாலு பேர் நம்மை நம்பி இருப்பாங்க... அதனால அந்த வேலையை சின்ஸியரா முடிச்சுக் கொடுத்துருவேன். அப்படித்தான் இருந்திருக்கேன்... இருப்பேன். அந்த உறுதி மனசில் இருந்ததுன்னா ஒவ்வொண்ணா ஜெயிச்சிடலாம்!’’

‘‘முடிவுகள் எடுப்பதில் பொதுவா ரஜினிக்கு ஒரு தயக்கம் இருக்கிற மாதிரி தெரியுதே. உதாரணத்துக்கு, ஒரு படம் பண்றதுக்கே மூணு வருஷ இடைவெளி விட ஆரம்பிச்சுட்டீங்க. என்ன கதைனு முடிவெடுக்க அவ்வளவு டைம் எடுத்துக்கறீங்க... ஆனா, பூஜை போட்டுட்டா அடுத்த மூணாவது மாசம் படம் தியேட்டருக்கு வந்துடுது. ஒரு முடிவு எடுக்கிறதுக்கு ஏன் இந்த பெரிய இடைவெளி... முடிவெடுத்த பின் எப்படி இப்படியரு வேகம்?

‘‘அதுதான் சொன்னேனே... எடுத்துக்கற டியூட்டில நாம சின்ஸியரா இருக்கணும்னு! ஒரு விஷயத்தில் இறங்குறதுக்கு முன்னாடி நிறைய யோசிப்பேன். அது சரிதானா, சரியா வருமா, சரியாப் பண்ணணும்னா என்ன செய்யணும்னு யோசிச்சுட்டே இருப்பேன். எதிலும் இறங்கறதுக்கு முன்னால் அதுக்கு நான் என்னைத் தகுதியாக்கிக்கணும். இதோ‘இன்னிக்கு நாம சந்திக்கலாம்’னு பேசி வெச்சோம். அப்போதிருந்து இதுவும் மனசுக்குள் ஓடிட்டே இருந்தது. சொன்ன நேரத்துக்கு ஒரு நிமிஷம் தள்ளி வந்தீங்கன்னாக்கூட, அது ஒரு நாள் மாதிரி இருக்கும் எனக்கு.






இப்போ சினிமா விஷயம்.. நாம என்ன பண்ணாலும் அது டிஃபரென்ட்டா இருக்கும்னு மக்கள்ட்ட ஒரு எதிர்பார்ப்பு வளர்ந்துருச்சு. அதனால்தான் டைம் எடுத்துக்கிறேன். இதோ ‘சந்திரமுகி’ பிச்சுக்கிச்சு... அப்படி ஒரு சாலிட் ரெஸ்பான்ஸ். குட்... சந்தோஷம். ஆனா, உடனே அடுத்த படம் என்னன்னு உட்கார்ந்துட மாட்டேன். அட்லீஸ்ட் ஆறு மாசத்துக்கு அந்த ஸ்விட்ச்சை ஆஃப் பண்ணிடுவேன். சுத்தமா அதிலேயிருந்து விலகிடுவேன்.

மனசை ஃப்ரீயா வெச்சுக்குவேன். அப்போதான் அடுத்து ஒரு வேலைக்கு படத்துக்கு உட்காரும்போது முழு சக்தியோட இறங்க முடியும்.
அடுத்த மாசம் ஒரு விழாவுக்கு வர்றேன்னு ஒப்புக்கிட்டா, இப்பவே ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அந்த நிகழ்ச்சி சம்பந்தமா நினைவுபடுத்திக்குவேன். அது அப்படியே மனசுக்குள் ஒரு பக்கம் ஓடிட்டே இருக்கும். அங்கே யாரைச் சந்திக்கணும், என்ன பேசணும்னு யோசனை துளைச்சுக்கிட்டே இருக்கும். அதுவே ஒரு பெரிய பொறுப்பா மாறிடும். அதனாலேயே பெரும்பாலும் எந்த நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கறது இல்லை.
சிலர் சொல்வாங்க... ‘நிகழ்ச்சின்னா அப்படியே நேரா போய் கலந்துக்குவேன்’னு! என்னால அப்படியெல்லாம் முடியாதுங்க. நான் எந்தச் சின்ன நிகழ்ச்சியா இருந்தாலும், என்னைத் தயார் பண்ணிக்கிட்டுதான் போவேன். மத்தபடி மனசுக்குள் ஒரு கமிட்மென்ட் வந்துட்டா போதும், தடதடனு வேலையை முடிச்சுக் கொடுத்துடுவேன். அதான் என் கேரக்டர்!’’

‘‘கோபதாபமான, கொந்தளிப் பான ஒரு அதிரடி ரஜினியை ஆரம்ப காலம் முதல் தமிழ்நாட் டுக்கு தெரியும். ஆனால், போகப் போக ரொம்பப் பக்குவப்பட்ட மனிதரா தெரியறீங்க...’’

‘‘அடி மேல அடி விழுந்தா அம்மியும் நகரும்னு சொல்வாங்கள்ல... அப்படித்தான் வந்துச்சு... ஹாஹ் ஹாஹ் ஹா!’’
உரக்கச் சிரிக்கிற ரஜினி, அதன் பிறகு சொல்கிற விளக்கத்தில் அவரது வெற்றியின் ரகசியம் ஒளிந்திருக்கிறது!


ஒரு கனிவான வேண்டுகோள்!

பாபாஜி குகை தரிசனம் செல்ல விரும்புபவர்கள், துவார காட்டில் Ôயோகுடா சத்சங்Õகின் அனுமதி பெற்ற பிறகே, பெரிய குகைக்குச் செல்ல வேண்டும்.


சிறிய குகைக்குள் நுழைய முயற்சிக்காதீர்கள். காலங்காலமாக ரிஷிகள் தவமிருக்கும் குகை அது. மான் தோல், கமண்டலம் எனப் புனிதப் பொருட்கள் இருக்கும் அந்த அருள் குகையில், பாபாஜியின் ஆசிர்வாதமும் தீட்சையும் பெற்றவர்கள் மட்டுமே பிரவேசிக்க முடியும்!

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

முத்துவேல் கருணாநிதி தெரிந்து கொள்ளுங்கள் !!


முத்துவேல் கருணாநிதி
தமிழ்நாட்டு முதலமைச்சர்
Constituency
சேப்பாக்கம்
பிறப்பு
ஜூன் 3 1924திருக்குவளை, தமிழ்நாடு
அரசியல் கட்சி
தி.மு.க.
பிள்ளைகள்
4 மகன்கள் 2 மகள்கள்
வதிவிடம்
சென்னை
மே 31 இன் படியான தகவல், 2006மூலம்: Government of Tamil Nadu
கலைஞர் முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) (பிறப்பு - ஜூன் 3, 1924)


திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். 1969 முதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மே 13, 2006 முதல் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவருடைய எழுத்து வன்மை, பேச்சாற்றலின் காரணமாக கலைஞர் எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்த இவர், பிற்காலத்தில் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்டது


அரசியல்
தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினர்.1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த பெருமை இவருக்கு உரியது.
1969-1971 -- அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 -- நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி


குடும்பம்
மனைவிகள்
திருமதி. பத்மாவதி
திருமதி. இராசாத்தி அம்மாள
திருமதி. தயாளு அம்மாள்
மகன்கள்
மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு
மகள்கள்
கனிமொழி
செல்வி
மு.க. ஸ்டாலின் தற்பொழுதைய (2007) தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார். [1]
திரைப்படப் பணி

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்
கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை' '
மேலும் பல...

மேடை நாடகங்கள்
சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
மேலும் பல...

புத்தகங்கள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்க தமிழ்
பொன்னார் சங்கர்
திருக்குறள் உரை
மேலும் பல...

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

நீங்கள் இன்னும் உருப்படாமல் இருப்பதற்கு காரணம்...

நீங்கள் இன்னும் உருப்படாமல் இருப்பதற்கு காரணம்...


இளைஞ்சர்களே..!பெருமக்களே !முதியவர்களே !..நீங்கள் இன்னும் உருப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று இதுவரை யோசிதிருகிரிகிகளா??.இல்லை என்றால் மீண்டும யோசியுங்கள் .இறுதியாய் நீங்கள் பின்வரும் காரணங்களில் மிக சரியாய் பொருந்திஇருபிர்கள் !!!நீங்கள் இன்னும் உருப்படாமல் இருப்பதற்கு காரணம்...
* உங்களுக்கு என்று இலக்கோ ஓர் கனவோ இல்லை !!
* மிதமிஞ்சிய சோம்பேறித்தனம் ..எல்லா வேலைகளையும் தள்ளி போட்டு ..உருப்படாத வேளைகளில் ஈடுபாடு காட்டுவது!!
* முயற்சிஇன்மை ..மந்தமாய் இருத்தல்
இந்த மூன்று காரணங்களில் பெரும்பாலான இளைஞ்சர்கள் விடியலை காணாமல் பாதை மாறி விடுகிறார்கள்
ஆதலினால் கனவு இலக்கு கொள்வீர்!,சோம்பலை ஒழிப்பிர் !தாகம் குறையாத முயற்சி கொள்வீர் !!
நன்றிகள் பல !!படியுங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் !!

சனி, 23 ஆகஸ்ட், 2008

குசேலன் தரமில்லை சீறுகிறார் மலையாள டைரக்டர்








குசேலனின் `அக்மார்க்' ஒரிஜினலான `கதபறயும்போள்' படத்தின் டைரக்டர் மோகனனிடம் `குசேலன்' பார்த்தீர்களா என்றோம். பொரிந்து தள்ளிவிட்டார்.


``கதபறயும்போள் கதை ஸ்ரீனிவாசன் சாரோடது. அந்தப் படத்தைப் பொறுத்தவரை நட்பு குறித்த ஒரு சின்ன இழைதான் கதை. நான் டைரக்ட் பண்ண முதல் படம் அது. நான் எர்ணாகுளத்தில `குசேலன்' படம் பார்த்தேன். படம் துவங்கினதுமே ஷாக் ஆயிட்டேன். வடிவேலுவின் மனைவி எக்சர்சைஸ் செய்யும் சீன் துவங்கியதுமே, `என்னடா இது மலையாளத்துல இப்படி ஒண்ணும் நான் சீன் வைக்கலையே'ன்னு யோசிச்சுகிட்டிருக்கும்போதே படம் எங்கேயோ போயிட்டிருக்கிற மாதிரி இருந்துச்சி.

மலையாளத்துல இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னால ஒரு சீன்ல மட்டுமே மம்முட்டி சூப்பர்ஸ்டாரா வருவார். ஆனா குசேலனில் முதல்லேயே ரஜினியை ஏகப்பட்ட பில்டப் கொடுத்து அறிமுகப்படுத்துறாங்க. இதனால் கதையோட மெயின் `நாட்' அடிபட்டுப் போச்சு. இங்கே கதபறயும்போள் பிரிவியூவின் போது இடைவேளையில் மம்முட்டி ரசிகர்கள் `என்ன சார் இப்படி படம் எடுத்திருக்கீங்கன்னு'' வருத்தமா கேட்டாங்க. ஆனா படம் முடிஞ்சதும் மம்முட்டி ரசிகர்கள் என்னைக் கட்டிப்பிடித்து `சார் உண்மையிலேயே மம்முட்டி சாரோட நல்ல படத்தை டைரக்ட் செய்திருக்கீங்க. கிளைமாக்ஸ்ல அழுதிட்டேன்'னு பாராட்டினாங்க.


அது மட்டுமில்லாம நயன்தாராவை காட்டியிருக்கிற விதமும் சரியில்லை. எதுக்கு நயன்தாரா இந்த மாதிரி வரணும்னு தெரியல. மலையாளத்துல இரண்டே இரண்டு பாட்டுதான் வைச்சேன். மலையாளத்தில் எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு படத்தை தமிழில் இப்படி எடுத்திருப்பதில், ஒருடைரக்டர் என்ற நிலையில் இல்லாமல் ஒரு ரசிகன் என்ற முறையில் எனக்கு வருத்தம்தான்.''


குசேலன்ல உங்களுக்கு எதுவுமே பிடிக்கலையா?
``மலையாளத்தில் சீனிவாசன் சார் செய்த பாத்திரத்தை அச்சு அசலா அப்படியே செய்திருந்தார் பசுபதி. அவருக்கு என்னோட பாராட்டுக்களைச் சொல்லுங்கள். அவரோட நடிப்பு உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. தமிழில் இப்படி ஆபாசங்களைப் புகுத்தியதை ரசிகர்கள் ரசிப்பார்களா என்ன? நான் எடுத்ததை அப்படியே எடுத்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.
அப்புறம் `சின்னம்மா செல்லம்மா' பாடல்காட்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. குடும்பப் பாசத்தைச் சொல்லியதாய் இருந்தது. அந்தப் பாட்டு ஷூட் பண்ணின விதமும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அடடே மலையாளத்திலயும் இப்படி ஒரு பாட்டு வைச்சிருக்கலாம்னு தோணிச்சு. ஆனால் ஏரியில் டால்பின் துள்ளுற மாதிரி சீன் இருந்ததைப்பார்த்து சிரிப்புதான் வந்தது. கடைசி 20 நிமிஷம் ரஜினி சாரோட நடிப்பு உண்மையிலேயே அபாரம். அவரு எளிமையா அட்டகாசமா நடிச்சிருந்தாரு. மலையாளத்தைப்போலவே தமிழிலும் கிளைமாக்ஸ் உருக்கமா இருந்தது. அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.''
மலையாளத்தில் வெற்றி பெற்ற `உதயனானுதாரம்' தமிழில் `வெள்ளித்திரை'ன்னு வந்துச்சி. இப்போது குசேலன். இதுக்கு முன்னாடியும் பல மலையாளப் படங்கள் வந்திருக்கு. ஆனால் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் தமிழில் வரும்போது மலையாளப்படம் தந்த திருப்தி, மலையாளப்படத்தில் இருந்த தரம் இல்லை என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது. இதுபத்தி உங்கள் கருத்து?
``படத்தை ரீமேக் செய்யும்போதே என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறித்தான் உரிமையை படத்தயாரிப்பாளர் விற்கிறார். இதனால் மூலக்கதையிலிருந்து படத்தை ரீமேக் செய்யும்போது நிறைய மாற்றங்கள் செய்கிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. ஏன் இப்படி காட்சி வைத்தீர்கள் என்று டைரக்டரிடம் கேட்கமுடியாது. ஆனால் ரசிகர்கள் ஏமாற்றமடை கிறார்கள் என்பது உண்மைதான். `கத பறயும்போள்' கதையோட கிட்டத்தட்ட ஒரு வருஷம் நானும் சீனிவாசன் சாரும் வாழ்ந்திருக்கோம். கதை எழுதி முடிச்சு அவர் ஸ்கிரிப்டை என்கிட்டே தரும்போது கடைசி பக்கங்கள் கண்ணீரால் நனைந்து போயிருந்தது. ரீமேக் பண்ணுறவங்க என்ன செய்யறாங்க..? அதுல அப்படி வைச்சிருக்காங்க. நாம இப்படி எடுப்போம்னு அவங்க விருப்பத்துக்கு எடுப்பாங்க... அதுலதான் கெட்டுப் போயிடுது. குசேலனைப் பொறுத்தவரை கிளாமரான காட்சிகள் தேவையில்லை என்பதே என்னோட கருத்து. அப்படியே எடுத்திருந்தா படம் நல்ல தரமா இருந்திருக்கும்'' என்கிறார் மோகனன்.
அடுத்த முறையாவது தமிழ் இயக்குநர்கள் இவர் சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.- திருவட்டார் சிந்துகுமார்

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

மாவீரன் நெப்போலியன் போனபர்டே


பிரான்ஸ் நாட்டு சக்ரவர்த்தியின் வழ்கையில் நிகழ்ந்தவைகளை அறிந்து கொள்ளுங்கள்!!.




மாவீரன் நெப்போலியன் போனபர்டே

நெப்போலியன் பொனபார்ட் (15 ஆகஸ்ட் 1769–5 மே 1821)(Napoléon Bonaparte) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது.

இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.

பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான்.

1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.

தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.


1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து மீள்வதற்கு அதற்கு முடியவில்லை.

1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது.

ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.


முழுப்பெயர்
நெப்போலியன் பொனபார்ட்
பிறப்பு
ஆகஸ்ட் 15 1769
கோர்சிக்கா
இறப்பு
மே 5 1821 (அகவை 51)
சென் ஹெலெனா
அடக்கம்
பாரிஸ்
முன்னிருந்தவர்
பிரெஞ்சு கொன்சுலேட்முன்னைய அரசன்: பதினாறாம் லூயி (இ. 1793)
பின்வந்தவர்
நடப்பின் படி பதினெட்டாம் லூயிDe Jure நெப்போலியன் II
அரசி
ஜோசெஃபின் டெ பியூஹார்னைமரீ லூயி
வாரிசு(கள்)
நெப்போலியன் II
அரசு மனை
பொனபார்ட்
தந்தை
கார்லோ பொனபார்ட்
தாய்
லெற்றீசியா ரமூளினூ

சனி, 16 ஆகஸ்ட், 2008




20 வருடங்களாக பென்சனுக்காக போராடும் பெண் தியாகி!வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2008

செங்கோட்டை: 62 வது சுதந்திர தினத்தை இந்தியா இன்று கொண்டாடிக் கொண்டுள்ள உற்சாகமான நாளில், கடந்த 20வருடங்களாக பென்சன் கிடைக்காமல் வறுமையோடு போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார் நாட்டுக்காக போராடிய பெண் தியாகி.திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் தியாகி அழகப்பிள்ளை. இவர் வீரவாஞ்சிநாதனின் நெருங்கிய நண்பர். 1911-ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் வீரவாஞ்சிநாதன் நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த வில்லியம் ராபர்ட் ஆஷ்துரையை சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.இக்கொலை வழக்கு அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லை சதி வழக்கு என பெயரிடப்பட்டு 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் அழகப்பபிள்ளை. இவரது மகள் கோதையம்மாள்.இவர் சிறுவயதிலேயே தனது தந்தையோடு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் போது போலீசின் கெடுபிடி...துன்புறுத்தல் காரணமாக செங்கல்பட்டி வீரராகவபுரத்தின் காட்டு பகுதியில் தலைமறைவு வாழ்க்கை.....வீட்டு சிறை...நெல்லை கொக்கிரகுளம் சிறைச்சாலையில் 1942-ல் நடைபெற்ற பஞ்சாப் சதி வழக்கு, 1931 உப்பு சத்தியாகிரகம், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கால கட்டத்தில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.ஆஷ்துரை கொலை வழக்கில், வழக்கு செலவுக்காக சொத்துகளை இழந்து இன்று வறுமையோடு போராடி வரும் இவர் தனக்கு பென்சன் வழங்க கோரி கடந்த 20 ஆண்டுகாலமாக மனுக்கள் மூலம் அரசின் செவிகளுக்கு தன் நிலையை எடுத்துக் கூறியும் திமுக, அதிமுக என இரு அரசுகளும் எந்த உதவியும் செய்யாமல் வெரும் ரூ.500-ஐ மட்டும் உதவித் தொகையாக வழங்கி வருகிறது.தனக்கு தியாகி பென்சன் ரூ.3,500-ஐ வழங்கக் கோரி பல்வேறு சாத்விக வழியை பின்பற்றியும் இவரது வறிய நிலையை கண்டு 'வாழும் வள்ளுவர்'களோ...'ஜான்சி ராணி'களோ கண்டு கொள்ளவில்லை. உரிய சான்றுகள் வழங்கியும் அதிகாரிகள் ஏனோ சுதந்திரத்திற்காக போராடி வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை புறக்கணித்து வருகின்றனர். ஆட்சி...அதிகாரிகள்... மாறி மாறி வந்து விசாரணை செய்தும் இதுவரை இவரது வறுமை நிலையை எண்ணி யாரும் வருத்தப்பட்டு வழி செய்யாமல் தடையை மட்டுமே உருவாக்கி வருகின்றனர் என்று அவர் கூறுகிறார்.தனது போராட்டம் குறித்து கோதையம்மாள் கூறுகையில், தென்காசி எம்எல்ஏ, எம்பி, சபாநாயகர், அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் வரை மனு அனுப்பியுள்ளேன். ஆனால் எனது கோரிக்கை ஏனோ நிராகரிக்கப்பட்டு வருகிறது.வறுமையில் உள்ளதால்தான் அரசிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வளமான குடும்பத்தில் பிறந்து வறுமையோடு இந்த 85 வயதிலும் போராடி வருகிறேன்.நான் கண் மூடுவதற்கு முன் அரசு எனக்கு உதவி தொகை வழங்க வேண்டும். 61-வது சுதந்திர தினத்தில் எனக்கு ரூ.3500 பென்சன் கிடைக்குமா...என்கிறார் ஏக்கத்தோடு.கண்ணீரும், செந்நீரும் சிந்தி நாட்டுக்காக விடுதலை பெற்றுத் தந்த லட்சோபம் லட்சம் தியாகிகளில் ஒரு துளியான கோதையம்மாளின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கப் போவது யாரோ?அவரது முகவரி:ஈ. கோதையம்மாள்239-141 சேர்வைக்காரன் புதுத் தெரு,செங்கோட்டை-627809.திருநெல்வேலி மாவட்டம்.போன்-04633235517

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

குழந்தைகள் தடுப்பு ஊசி மரணங்கள்

திரு அன்புமணி ராமதாஸ் மத்திய சுகதரதுரை அமைத்ச்சர் அவர்கள் புகையிலை பயன்பாட்டினை தடுப்பதற்கு முன் நாட்டில் பட்சிலம் ஏழை குழந்தைகளின் தடுப்பு ஊசி மரணங்களை தடுக்க வேண்டும் .அதுவே தலையாய பணியாகும்

ஏழை பெற்றோர்களின் கண்ணிற்கு பதில் சொல்லவேண்டிய பனி அவருடையதே !இந்த நவின காலத்தில் நாம் இன்னும் உயிருக்கு உரிய மரியாதையை தருவதில்லை மாற்ற நாடுகளில் இப்படி ஒரு சம்பவங்கள் நிகழ்ந்தால் அது மிக பெரிய அரசியல் மாற்றங்களை கொண்டு வரும் அனல் இந்தியா ஒரு ஜனநாயக நாடல்லவா அதனால் நம் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான் !!!



புகை‌யி‌லை இ‌ல்லாத இ‌ந்‌தியாவாக மா‌ற்ற வே‌ண்டு‌ம்: அ‌ன்புமண‌ி!

செவ்வாய், 22 ஜூலை 2008( 16:45 IST )
''இ‌ந்‌தியாவை புகை இ‌ல்லாத நாடு எ‌ன்று‌ ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் புகை‌யிலை இ‌ல்லாத நாடு எ‌ன்று மா‌ற்ற வே‌ண்டு‌ம்'' எ‌ன்று ம‌‌‌த்‌திய சுகாதார‌த் துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி ‌மீ‌ண்டு‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌நிக‌ழ்‌‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் கல‌ந்துகொ‌ண்ட அவ‌ர், ச‌ண்டிகரை புகை இ‌ல்லாத நகரமாக மா‌ற்ற முடிவெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், வரு‌ம் 2010ஆ‌ம் ஆ‌ண்டு டெ‌ல்‌லி‌யி‌ல் நடைபெற உ‌ள்ள காம‌‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டிகளு‌க்கு மு‌ன்னதாக டெ‌ல்‌லியை புகை இ‌ல்லாத டெ‌ல்‌லியாக மா‌ற்ற முதலமை‌ச்ச‌ர் ‌‌‌‌ஷ‌ீலா ‌தீ‌ட்‌சி‌த் உறு‌‌தி‌‌க் கொ‌ண்டு‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
பொது‌த்துறை, த‌னியா‌ரு‌க்கு சொ‌ந்தமான இட‌ங்க‌ளி‌ல் புகை ‌பிடி‌‌க்க மு‌ற்‌றிலு‌ம் தடை‌வி‌‌தி‌க்க அரசு முடிவு செ‌ய்து‌ள்ளதை மீ‌ண்டு‌ம் ‌நினைவு கூ‌றிய அவ‌ர், புகை‌யி‌லை‌க்கு எ‌திரான ச‌ட்ட‌வி‌திகளை கடுமையாக கடை‌ப்‌‌பிடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.‌‌சி‌னிமாவு‌க்கு நா‌ன் எ‌‌தி‌ரிய‌ல்ல. ஆனா‌ல் போ‌லியோ ஒ‌ழி‌ப்பு போ‌ன்ற ம‌க்களு‌க்கு ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ஏ‌ற்படு‌த்த‌க்கூடிய ‌நிக‌ழ்‌‌ச்‌சிக‌ளி‌ல் நடிக‌ர்க‌ள் வருவதா‌ல் அவ‌ர்க‌ள் ‌சி‌னிமா‌வி‌ல் புகை ‌பிடி‌க்க‌க்கூடாது.சி‌னிமா‌வி‌ல் நடிக‌ர்‌க‌ள் புகை‌ப்‌‌பிடி‌ப்பதை‌ப் பா‌ர்‌த்து 52 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் இ‌ந்த‌ப் புகை‌ப்பழ‌க்க‌த்து‌க்கு அடிமையா‌கி‌ன்றன‌ர்.
புகை‌ப் ‌பிடி‌ப்ப‌த‌ன் காரணமாக இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌ண்டு‌க்கு 10 ல‌ட்ச‌ம் பே‌ர் உ‌யி‌ரிழ‌க்‌கி‌ன்றன‌ர்