செவ்வாய், 20 ஜனவரி, 2009

தருமமிகு சென்னை ...!!



வாழ்க்கையில் கரையேற தவிக்கும் எத்தனையோ பேருக்கு எதிர் நீச்சலிட கற்றுகொடுப்பது சென்னை !. படித்தவன்,படிக்கதாவன்,நகரத்தான்,கிராமத்தான் என வாழ்க்கையின் பலதரப்பட்ட மக்கள் சென்னையை வந்தடைகிறார்கள் .எல்லோர்க்கும் ஒரு தேடுதல் ,ஒரு இலக்கு சென்னையை நம்பி அனுதினமும் ஆயிரகனக்கனோர் படையெடுக்கின்றனர்

"திரை கடல் ஓடி திரவியம் தேடு" ,"கெட்டும் பட்டணம் போ" ! என்பதெல்லாம் முதுமொழி.!தொன்று தொட்டு இடம் பெயர்தல் என்பது மனித வாழ்க்கை போராட்டத்தின் ஒரு அங்கமாகி போனது .


வாழ்க்கையில் பலர் போராடி வரலாற்றில் பெயர் பதிக்க சென்னை அநேகம் பேருக்கு உதவியது!. இன்றும் உதவி வருகிறது.


மிக சாமன்யமானவாராய் சென்னையில் அடியெடுத்து வைத்தவர்கள் ..அரியணை ஏறி அரசாட்சி செய்ததும் ,செய்வதும் இன்றைய நிகழ்கால வரலாறு!


சராசரியான மனிதர்களுக்கு சென்னை அரிதாரம் பூசி...திரை நட்சத்த்திரன்காலக பல கோடிகளையும் ,கோடானகோடி மக்களின் மனதிலும் இடம் பிடிக்க வைப்பதும், வைத்ததும் சென்னைதான் !


இன்று மிக பெரும் ஓட்டல் அதிபர்கள்,துணிக்கடை,நகைகடை முதலாளிகள் எல்லாம் பிழைப்பு தேடி சென்னை வந்தடைந்து சாதாரன வாழ்கையை தொடங்கியவர்கள் தான்.


சென்னை உழைப்பை ஏற்று கொள்கிறது, முயற்சி செய்பவனை தட்டி கொடுக்கிறது !




சென்னையின் பரபரப்பு மனித உழைப்பின் அடையாளம் எனலாம். அனுதினமும் தேடுதல்கள் தொடர்க்கின்றன,இன்றும் கூட தென் தமிழ் நாட்டின் பலருக்கு சென்னை ஒரு நியூயார்க் போலவே தெரிகிறது !


எதிர் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்கால வலிகளை சென்னை வந்தடையும் மக்கள் ஏற்று கொள்கிறார்கள் .




சென்னையின் மற்றொரு முகமாக பலராலும் பேசப்படுவது குறுக்கு புத்தியும்,நயவஞ்சகர்களும் நிறைந்த நகரம் என்பதுதான். எனினும் இவற்ற்றைய்ம் தாங்கி,தகர்த்து மனித உழைப்பிற்கு தனி அங்கிகாரத்தை சென்னை அளிக்க தவறுவதில்லை!.

நீங்கள் மனம் தளர்ந்து ,பாரத்தோடு இருக்கும் பொது சென்னையின் தெருக்களை பாருங்கள்..மனித தன்னம்பிக்கையின் அசைவுகளை நீங்கள் காணலாம்




ஒரு வேலை உணவளித்தால்" தருமம்" என்கிறோம் .ஒரு புதிய வாழ்கையை பலபேருக்கு அளித்து ,உங்களின் நம்பிக்கையை உங்களுக்கு உணர்த்தும் சென்னையை தர்மமிகு சென்னை என்று அழைப்பதில் தவறில்லை தானே ?