வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பசி.....!



உயிர் வாழ்க்கை கொண்ட எல்லா உயிரினமும் உணரும் உடலின் இந்த கூக்குரலை !.தாயின் பாலுக்காக ஏங்கி கத்தும் சிறு குழந்தை தொடங்கி,கோலுன்றி கண்கள் மங்கி தள்ளாடி விழ காத்திருக்கும் முதியவர் வரை பசி யாரையும் விடுவதில்லை,பசி என்ற ஒன்று இல்லை எனில் மனிதன் தெய்வத்திற்கு நிகராகி போவான் ,வறுமையால் தினம் தினம் ஏற்படும் இந்த போராட்டத்தை கோடிகணக்கான மனிதர்கள் சந்திக்கின்றனர்.




அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லை என்று நிலை ஏற்படும் போது மனித மனம் இரு வேறு நிலைகளை எதிர்கொள்கிறது ,ஒன்று தன்னம்பிக்கை கொண்டு எதிர்த்து நேர்வழியில் செல்கிறது, மற்றொண்டு தன்னம்பிக்கை இழந்து செல்லகூடாத வழிகளில் செல்ல தொடங்குகிறது, பசியால் விரட்டப்பட்டு வாழ்கையின் உச்சிக்கு உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர்,தொழில் அதிபர்களாய், விந்ஞாநிகளாய்,கலைஞர் களாய்,நாட்டையே ஆண்ட மா மனிதர்களாய் சரித்திரம் கண்டவர்கள் பலர்.

உண்மையில் செல்வா செழிப்பும், வசதியும் மனித வாழ்க்கையின் உண்மையும்,மனித நேயத்தையும் உணர்த்துவதில்லை!எவன் ஒருவன் பசியின் வேதனை என்னவென்று உணர்ந்தவனாய் உள்ளானோ அவனே மனித நேயம் உணர்ந்தவனாகவும்,வாழ்க்கையின் அர்த்தத்தை முழுதும் உணர்ந்தவனாகவும் இருப்பான்,வறுமை தரும் மிக சிறந்த பாடம் பசி எனலாம்.




இயற்க்கை பேரிடரால், வறட்சியால் தினம் தினம் பல்லாயிரம் உயிர்கள் இந்த கொடிய போரட்டத்தை எதிர்கொள்கின்றன.செல்வ வளம் மிக்க பல நாடுகள் உணவை வீணடிக்கின்றன,குப்பை தொட்டியில் வீசி எறியப்படும் உணவுகள் ஏராளம்.ஆனால் அங்கே ஆப்ரிக்க நாடுகளிலோ ஒரு பருக்கை உணவிற்கு அழுது உயிரை கண்களில் தேக்கி நிற்கும் மனித உயிர்களை நாம் எண்ணி பார்ப்பதில்லை.





ராணுவ தளவாடங்களுக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் நாடுகள்!,செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கின்றதா என்பதை அறிய பல நூறு கோடிகள்! ஆனால் நாம் நன்கு அறிந்த பக்கத்து தேசத்தில் நீரும் உணவும் இன்றி உயிர் விட காத்திருக்கும் மனிதர்கள் இருக்கும் போது செவ்வாய் கிரகத்தில் அடுக்குஅடுக்காய் ஆய்வுகள் ! தேவைதானா?




பசியற்ற நிலை இந்த பாரினில் வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமோ?


வியாழன், 8 ஜூலை, 2010

நாம் எங்கே தொலைந்தோம் ?

நாம் நன்றாக புரிந்துகொண்டதாக நினைக்கின்ற நமது வாழ்க்கை ,உண்மையில் முற்றிலும் அர்த்தம்மற்று,மனம் மருத்துப்போன,சுயம் இழந்து ,எதனை ? எதற்க்காக?ஏன்? பெற நாம் ஓயாது ஓடி கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க கூட விருப்பம் மற்று இந்த வாழ்க்கை அனுதினமும் ஓடி கொண்டிருக்கிறது !

சின்னஞ்சிறு வயதில் நாம் சந்தித்த இனிமையான அற்புதமான மனிதர்களும்,நிகழ்வுகளும் கனவு போல் நமக்கு தோன்றுகிறது.அன்று நாம் பார்த்த தாயும்,தந்தையும் ,பள்ளியும்,தொழர்ர்களும் கூட நமக்கு அந்நியமாய் தோன்றுகிறது,ஏனனில் நாம் மறுத்து போன ஒரு பொருள் பூர்வமான வாழ்கையில் கால் புதைந்து நம்மை தொலைத்து விட்டோம் .



உண்மையில் தொலைந்து போன எத்தனையோ விழயங்களில் அதி முக்கியமான,மனிதர்களின் மீதான அன்பும், விசுவாசமும்,நம்பிக்கையும் மிக முக்கியமானதாகவே எனக்கு தோன்றுகிறது.

பல தேசம் கடந்து,பணம் ஈட்ட சென்றவர்களின் வாழ்கை நிலை மேலும் பரிதாபமானது,இழந்ததும் இழக்க போவதும் ஈடு செய்ய முடியாத ஒன்று எனலாம்.

நம்பிக்கை,வாழ்கையின் மயத்திலிரிந்து விலாகாத ஒரு உறுதி,சுடர் விடும் அறிவு,துன்பம் கண்டு துவளாத தன்மை,போராட்டம் தன வாழ்கை என்று அறிந்தாலும் வாழ்கையின் மயத்திலிரிந்து விலாகாமல்,அதன் அர்த்தம் மாறிடாமல் வாழுகின்ற தன்மை இதுதான் நம்முடைய ஒவொவொரு நாள் சிந்தனயில் இருக்க வேண்டும்!



பணம் மட்டுமே வாழ்கை இல்லை,பணம் இல்லாமலும் இந்த வாழ்கை இல்லை! எனினும் இரண்டின் எல்லைகளையும் உணர்ந்தது வாழ இன்று முதல் சிந்திப்போம்