வியாழன், 18 செப்டம்பர், 2008

ஒசாமா பின் லேடன்- வாழ்கை குறிப்பு !!

ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957[1])

பொதுவாக ஒசாமா பின் லேடன் அல்லது உசாமா பின் லேடன் என் அறியப்படும் இவர் சவூதி அரேபியாவில் பிறந்த இசுலாமிய போராளியாவர். இவர் அல் கைடாவை தொடக்கியவராக கருதப்படுகிறார்.
இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை வாபஸ் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் இராணுவத்தினரையும் கொலை செய்யுமாறு முஸ்லிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.
ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என் கூறப்படுகிறது.

அவர் மொத்த 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா இவரது 10 வது மனைவி அமிதியா அல் அட்டாஸ் என்பவருக்கு ஒரே மகனாக பிறந்த்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்

இவரது படிப்பை குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன .இவர் வணிக மேலாண்மை மற்றும் கட்டிடவியல் படித்தவர் என்றும் கூறப்படுகிறது.

தன்னுடைய பதினேழாவது வயதில் நஜ்வா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.மேலும் நான்கு பெண்களை திருமணம் செய்து இருவரை விவாகரத்தும் செய்தார் . ஏறக்குறைய பனிரெண்டு முதல் இருபத்தி நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாக இவர் இருக்ககூடும் என தகவல் .

ஷரியத் சட்ட திட்டங்களை மீண்டும் இஸ்லாமிய மதத்தில் கொண்டுவருவதை தீவிரமாக ஆதரித்தார் !

ஆப்கான் மட்டுமே உலகத்தில் முழுமையான முஸ்லீம் நாடு என்று அறிவித்தார் !

அமெரிக்காவும் ,இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என்றும் அவர்களை அழிப்பதே இஸ்லாத்திற்கு செய்யும் தொண்டு என்றும் கருதியேஅல்கைதா இயக்கத்தை தொடங்கினார்சூடான்,எகிப்து, ஆப்கான் என அல்கைதா இயக்கத்தின் வேர்கள் பரவி உள்ளன.

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்து .அல்கைதாவின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்தினர்

இவரை பிடிக்க அமெரிக்கா பலவாராக முயற்சித்து கொண்டிருக்கிறது.....