திங்கள், 26 ஜனவரி, 2009

புத்தனாய் மாறிய சித்தார்த்தன்...!


இன்றைய நேபாளில் சுத்தோதன மகா ராஜாவிற்கும் ,அரசி மாய தேவிக்கும் ஒரு முழு பௌர்ணமி நாளில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தது.சித்தார்த்தன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் தந்தை சுதோதனர் . கிறிஸ்து பிறப்பதற்கு ஐய்நூட்ட்ரி எண்பத்தி ஆறு ஆண்டுக்களுக்கு முன் புத்தர் சித்தார்தானாய் இந்த மண்ணில் தோன்றினார்



புத்தருடைய பிறப்பும்,ஞானம் அடைந்தது மற்றும முக்தி அடைந்த மூன்றும் முழு பௌர்ணமி நாளிலேயே நடைபெற்றது அதையே புத்த பூர்னிமாவக உலகம் கொண்டாடுகிறது


புத்தன் என்றால் விழிப்பு நிலையை அடைந்தவன் என்று அர்த்தம் !.இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேலும் புத்தருடைய போதனைகளும்,கோட்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டு அவர் வணங்கபடுகிறார்.



பண்டிதர்கள் சித்தார்த்தன் உலக வாழ்கையை துறந்து ஒரு ஞானவானாகி விடுவார் என்று உரைத்ததை சுத்தோதன ராஜா பொய்யாக்க விரும்பினார் . அன்றிளிரிந்து உலக வாழ்கையின் நிகழ்வுகள் எதுவும் சித்தார்த்தனுக்கு தெரியாதவண்ணம் சுக போகமாக வாழ சித்தார்த்தன் ஆட்படுத்தப்பட்டான்






பதினாறு வயதில் அழகு மிக்க யசோதரையை திருமணம் செய்துவிக்கப்பட்டார் புத்தர் .பத்தி மூன்று ஆண்டுகள் இன்பமான இல்லற வாழ்கையும் ..ஒரு பிள்ளையும் பெற்றெடுத்தார் சித்தார்த்தன் .ஆனால் விதி ஒரு நாள் அவரை இந்த உலகை காண அரண்மனை வாயிலை தாண்டி வர செய்தது ..அன்றுதான் உண்மையில் சித்தார்த்தன் புத்தனாய் மாறி ஞான பாதையில் பயணிக்க .தொடங்கினான்


முதுமை அவன் கண்ணெதிரே கண்டபோது திடுக்குற்றான் சித்தார்த்தன்,ஒரு சவ ஊர்வலம்,ஒரு ஊனமுற்றவன், இவையெல்லாம் சித்தார்த்தனை புத்தனாக ..ஒரு விழிப்பு நிலை அடைந்தவனாக மாற செய்தது.


நாம் ஏன் அல்லல் படுகின்றோம் ? இந்த கேள்விக்கு ஆசையே எல்லா துன்பத்திற்கும் மூல காரணம் என்று உணர்த்தினார் புத்தர்





ஒரு நள்ளிரவில் மஞ்சத்தில் உடன் படுத்திருந்த மனைவி மற்றும் பிள்ளையை விட்டு அரண்மனை வாயிலை தாண்டி காட்டை நோக்கி நடந்தான் சித்தார்த்தன் ..கடுமையான ஆத்மா விசாரத்தில் மனதிலிருந்தே உண்மைகளை கண்டான் புத்தன்.பின்னாளில் போதி மரத்தின் அடியில் பூரண ஞானம் அடயபெற்றார் புத்தர் .


ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் உண்மையை கண்டும் ,உண்மையை போதித்தும் வந்த புத்தர் தன்னுடைய என்பதாவது வயதில் தன்னுடைய உடலை நீத்தார்.


புத்தனாய் மாருவதுர்க்கு சித்தார்த்தனுக்கு மூன்று உலக நிகழ்வுகள் போது மானாதாக இருந்தது.


இன்றைய ராமலிங்க ராஜுவும் கூட சிறைக்கு பின்னால் புத்தரின் வாழ்கை கோட்பாடுகளை படித்து கொண்டு இருக்கிறார்.ஆசையே அழிவுக்கு வழி என புத்தர் சொன்னது இப்போது ராஜுவிற்கு நன்கு விளங்கும்!!