வியாழன், 8 ஜனவரி, 2009

சதாம் உசைன் - ஒரு சிங்கம் ஆடான கதை!!


சதாம் உசைன் மிக சாதாரண ஆடு மேய்க்கும் குடும்பத்தில் பிறந்தவர் .தன்னுடைய இளைய வயதிலேயே வாழ்கையில் வறுமையையும்,சோதனைகளையும் கொடுமைகளையும் கண்டவர்.தான் பிறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே அவருடைய தந்தை குடும்பத்தை நிராதாரவாக தவிக்க விட்டு தலை மறைவாகி விட்டார் !.

இறுதி வரை தன்னுடைய தந்தையின் முகத்தை சதாம் உசைன் கண்டதில்லை.அவருடைய தந்தையின் தலை மறைவிற்கு பிறகு அதே ஆண்டில் தன்னுடைய சகோதரனை புற்று நோயில் இழந்தார் சதாம்.
சதாம் உசைன் ஏப்ரல் 28, ஆயிரத்தி தொள்ளயிரதி முப்பத்தி ஏழில் பிறந்தார் .சதாம் என்பதற்கு சோதனைகளை வெல்ல குடியவன் என்று அரபு மொழி அர்த்தம் .

பச்சிளம் குழந்தையாக தன்னுடைய மாமாவிடம் வளர்க்க அனுப்பப்பட்டார் சதாம்.சதாமின் தாய் மீண்டும் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார்.அதன் மூலம் மூன்று சகோதரர்களை சதாம் பெற்றார்.எனினும் மாற்று தந்தை சதாமை மிக கடுமையாக நடத்தினார். அதனால் மீண்டும் தனது மாமாவிடம் அடைக்கலம் புகுந்தார் சதாம். அப்போது சதாமிற்கு வயது பத்து

சதாம் பாக்தாதில் கல்வி பயின்றார்.பின்னர் சட்ட கல்வியையும் தன்னுடைய மாமாவின் துணையால் படித்து முடித்தார்.ஒரு ஆசிரியாராக தன்னுடைய இருபதாம் வயதில் பாக்தாதில் வாழ்கையை தொடங்கினார் சதாம்.ஆயிரத்தி தொள்ளயிரத்தி ஐய்ம்பத்தி ஏழில் சதாம் பாத் காட்சியில் சேர்ந்தார்.இதன் மூலம் தன்னுடைய வாழ்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு முன்னுரை எழுதினார் என்றே சொல்ல வேண்டும்!
ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் பாத் காட்சியில் உயரிய பொருபிர்க்கு உயர்ந்தார் சதாம் .வெகு தொடக்கத்தில் அமெரிக்காவின் உளவு அமைபிற்கு உதவியாக அப்போதைய இராக்கிய பிரதமர் அப்துல் கரிமை பதவியில் இருந்து இரக்க சதாம் அமெரிக்காவிற்கு உதவினார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபதுகளின் தொடக்கத்தில் சதாம் மிக போற்றக்கூடிய அரசியல் சக்தியாக உருவெடுத்தார்.இராக்கை ஒரு நவின இஸ்லாம் நாடாகவும்,கல்வி மற்று பாத் கட்சியை வலிமை படுதிடவம் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
யுனெஸ்கோ இவருடைய கல்வி மேம்பாடு திட்டங்களுக்காக இவரை ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி மூன்றில் கொவ்ரவித்தது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஒன்பதில் சதாம் அப்போதைய இராக்கிய அதிபரை நெருக்கதலுக்கு உள்ளாகி அதிபராக பதவிக்கு வந்தார்.அதிலிருந்து பதவி மற்றும் ஆட்சி அதிகாரங்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்து கொள்ள சதாம் ஒரு சர்வாதிகாரியாக செயல் பட தொடங்கினார்.
பதவி ஏற்கும் போது பாத் கட்சியின் துரோகிகள் என அறுபத்தி எட்டு பேரை பட்டியலிட்டு படித்தார்.அவர்களை ஒருவர் பின் ஒருவராக கைது செய்து அதில் இருபத்தி இரண்டு பேரை தூக்கிட்டார் சதாம்.பொது மக்களும்,எதிர்கின்ற எவரும் அஞ்ச கூடிய வகையில் சட்டங்களை தன்னுடைய கையில் எடுத்துகொண்டார் சதாம்.
இரான் -இராக் போர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதுகளில் தொடக்கி எட்டு ஆண்டுகள் நிகழ்ந்தது.ஷியா பிரிவை கொண்ட இரானிய கொள்கைகள் தன்னுடைய நாட்டிற்குள் புரட்சியை உண்டாகிவிடும் என்று அஞ்சியே இந்த போரை தொடுத்தார் சதாம்.இதன் முலம் ஒரு ஹீரோ இமேஜை அவர் பெற்றார்.
போர் தொடுக்க பட்ட முதல் இரண்டாண்டுகளில் அதில் இருந்து விடுபட சதாம் நினைத்தார் அதற்காக அப்போதைய நலவாழ்வு அமைச்சர் ரியாத் இப்ராஹீம் இடம் ஆலோசனை கேட்டார் சதாம். தற்காலிகமாக சதாம் பதவி இறங்கினால் அமைதி ஏற்படும் என ரியாத் சொல்ல.ரியாதின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அவருடைய மனைவியிடம் அளிக்கப்பட்டது.இது சசாமின் நிஜ முகத்தை வெளிகாட்டியது
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூறில் தனது அண்டை நாடான குவைத்துடன் எல்லை தகராறில் சதாம் மற்றும் ஒரு போருக்கு வழி வகுத்தார்.முந்தய போரில் அவருக்கு உதவிய அமெரிக்கா இந்த முறை அவருக்கு எதிர்ப்பினை காட்டியது .அதுமட்டுமில்லாமல் இராக்கிய படைகளை தாக்கி ஓடவும் செய்தது.
அமெரிக்காவை தனது தீவிர எதிரியாக சதாம் கருதுவதற்கு இது மேலும் வழி வகுத்தது.இரான் போரில் முதன் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன் படுத்தினார் சதாம்.இதன் முலம் பல உயிர் இழப்புக்களை இரான் கண்டது

நாட்டின் பொருளாதாரம் மிக சீர் கேடடைந்த நிலையில்,அமெரிக்கா பொருளாதார தடைகளால் மேலும் இராக் சீர் குலைந்தது.மிக அதிகமான எண்ணை வளமிருந்தும் நாட்டு மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சதாமின் ஆடம்பரம்,முரட்டுத்தனமான கொள்கைகள்,சர்வதிகார போக்கு இராக்கிய மக்களை அவர் மீது வெறுப்படைய செய்தது.
இராண்டாயிரதி மூன்றாம் ஆண்டு அமெரிக்கா இராக் ஒரு அச்சுறுத்தும் பயங்கரவாத நாடு என்று கூறி ,சதாமை வெளியேற்ற வளைகுடா போரை தொடங்கியது.
ஒரு சர்வதிகாரியாக,ராஜ போகங்களை அனுபவித்த சதாம் உயிரை காப்பற்றி கொள்ள தலை மறைவானார் ,ஆறு மாத தேடுதலுக்கு பிறகு ஒரு பதுங்கு குழியில் பிடிபட்டார்.ஒரு பிட்சை காரனை போல முகமெல்லாம் முடியோடு ஒரு பரதேசியாக அமெரிக்காவினால் வெளியுலகுக்கு காட்டப்பட்டார் சதாம்.

இராண்டாயிரதி ஆறின் இறுதியில் சதாம் தூக்கிலிடப்பட்டார் .இளமையில் பல சோதனைகளை கடந்த சதாம்.ஒரு தேசத்தை வழி நடத்தி செல்ல கிடைத்த வாய்ப்பை தவறாக பயன் படுத்தி பல உயிர்களை அழித்தார்.பல அரண்மனைகள்,சொத்துக்கள் எல்லாம் இழந்து இரண்டடி குழியில் பரதேசியாக வாழ்கையின் அத்தியாயத்தை முடித்து கொண்டார்!