தமிழகம் தங்களுடைய தொழிற் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக உள்ளதாகவும் , வேறெந்த மாநிலத்திலேயும் இல்லாத அளவிற்கு தடையில்லா மின்வெட்டு மிக நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் விளங்குவாதகவும் அகில இந்திய திருடர்கள் சங்கம் ( AITS ) நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தை புகழ்ந்துள்ளது .அறிக்கையின் முழு விபரம் வருமாறு ....
இந்திய அளவில் வேறெந்த மாநிலத்திலேயும் இப்படி ஒரு சாதகமான சூழல் நிலவவில்லை , தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. முன்பெல்லாம் நமது தொழிலாளிகள் இரவில் தொழில் செய்ய கிளம்பினால் எங்கு பார்த்தெல்லாம் மின்னொளி தொந்தரவு இருக்கும்
ஆனால் இப்போது ஆரசாங்கமே தடையில்லா மின்வெட்டை அமுல் படுத்தி இருப்பதால் ,எந்த ஒரு தடங்களும் இல்லை .நம்முடைய தொழிலுக்கு இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் என்ற மின்தடயானது இப்போது ஆறரை மணி நேரம் வரை உயர்தப்பட்டுலதால் நம்முடைய மனம் கனிந்த வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் ,தமிழக மின் துறை அமைச்சருக்கு தெரிவிப்பதி மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்
நம்முடைய இரவு நேர தொழில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் மிக பாதுகாப்பாக இயங்கி கொண்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் தி .நகர் ரங்கநாதன் தெருவில் நமது தொழிலாளிகள் இடைவிடாது உழைப்பது சங்கத்திற்கு மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
காற்று உள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும் என்பத நமது தொழிலாளிகள் நன்கு உணர்ந்து .தற்பொழுதைய மின்வெட்டு சூழலை நன்கு பயன்படுத்தி எவ்வளவு லவ்வட்டமுடியமோ அவ்வளவு ஆட்டையை போட்டு சங்கத்திற்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுகொள்கிறது.
மீண்டும் நமது தமிழக மின்துறைக்கு நம்முடைய மனம் கனிந்த வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்!!