
உலகத்தில் இப்பொழுது நடந்து வருகின்ற பல யுத்தங்களும் இரண்டு நாடுகளுக்கிடையே மட்டுமே நடந்து வருகிறது ...! ஆனால் ஈழ தமிழ் யுத்தம் மட்டும் ஒரு இனத்திற்கும் ,ஒரு நாட்டிற்கும் இடையே நடந்து வருகிறது.
வீரமும்,கலாசார பெருமையும் நிறைந்த ஈழ தமிழினம் இப்பொழுது மெல்ல மெல்ல சிங்கள ராணுவ பலத்தால் அழிந்து வருகிறது.
தூய்மையான தமிழுக்கு சொந்த காரர்கள்,சிறந்த உழைப்பாளிகள்,சிறந்த இலக்கிய வாதிகள் நம் ஈழ தமிழ் மக்கள் .
துப்பாக்கி தோட்டக்களாலும், பீரங்கி குண்டுகளாலும் ஒரு இயக்கத்தை அழிப்பதாக கூறி ஒரு இனத்தை அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
சுய நல அரசியல்வாதிகளுக்கு ஈழ பிரச்சினை ஒரு போலி முக மூடியாகும்!.அண்ணா வழியில் வந்தவர்கள்,பெரியாரின் பாசறையில் பயின்றவர்கள் என வெறறு வாய் சவடால் வேறு !எம்.பி க்கள் ராஜினாமா,வித விதமான உண்ணாவிரத போராட்டங்கள்,வேற்று நடந்களாக இப்போது தெரிகிறது.
வார்த்தை ஜாலங்களில் மயங்கி நிற்க நேற்று போல் இன்று தமிழர்கள் இல்லை ! .தமிழினத்தின் காவலர்கள் என்று சொல்லி கொள்ள எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை. கோடிகளை சேர்க்க அரசியல் நடத்துபவர்கள் , சுய நல பதவி லாபத்திற்காக நாடகங்களை நடத்தும் கோமாளிகள் இந்த அரசியல் வாதிகள் .இவர்கள் மிக பெரும் கோழைகள்!!

பதுங்கு குழியில் பாடம் பயிலும் எமதருமை தமிழ் மாணவர்கள். நாளைய விடியலில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ள இளம் ரோஜாக்கள்.இவர்களுக்கு வழி காட்டவும் வழி சொல்லவும் எந்த தமிழின காவலர் வர போகிறார்?
இந்த பதிவினை நான் எழுதுவதால் நான் நாளைய முதல்வராகி விட போவதில்லை.ரத்தம் படிந்த ஈழத்து பதுங்கு குழி மண்ணின் புனிதத்திற்கு இந்த எழுத்துக்கள் ஒரு கண்ணிற் துளி அவ்வளவே !

புலம் பெயர்ந்த தமிழினம் , இலங்கையை வளப்படுத்தியது ..சாலைகளை இட்டும்,கட்டடங்களை எழுப்பியும்,தேயிலை தோட்டங்களை செம்மை செய்தும் வியர்வையால் மெருகேற்றி கொடுத்த தமிழர்கள் இன்று வெறறு மார்பில் தோட்டாக்களை தாங்கி மண்ணில் சாய்கிறது .
வான் புகழ் கண்ட வள்ளுவனை தந்த தமிழினம் ,மொழியினால் ஒன்றுப்பட்ட ஒன்று. அந்த மாண்பு என்றும் அழிந்து விட போவதில்லை !!

நாட்டை ஆளுகின்றவர்கள் பகுத்தறிவை வார்த்தைகளில் மட்டுமே பயன் படுத்தாமல் செயல்களில் காட்டவேண்டும் .நாட்டை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்கள் எங்களுக்கு வேண்டாம் கோழைகளே!.காரியங்களை ஆற்றி கொடுங்கள் அதுதான் பகுத்தறிவு !!

உறுதியான முடிவுகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருமித்து எடுக்க வேண்டும் .இளம் தமிழ் குழந்தைகள் செத்து மடிவதை தடுக்க வேண்டும்.
உலக தமிழ் நண்பர்களே அங்கே செத்து மடிபவர்களின் தியாகங்களையும் ,வலிகளையும் ஆளுகின்றவர்கள் தங்களுடைய மந்த புத்தியில் உணராதவரை விடியல் இல்லை என்பதே நிஜம்.!!