வெள்ளி, 29 மே, 2009

காலம் கலிகாலம் - தேய்ந்து போகும் வாழ்க்கை !!




உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறது அப்போதெல்லாம் மனிதர்கள் உரக்க சொல்லி கொள்வது "கலிகாலம் முத்திபோய் விட்டது "என்பதுதான்.மனித வாழ்க்கை முற்றிலுமாய் தேய்ந்து போய் அதனுடைய அழகிய வடிவம் மறைந்து குருரமம் , அருவருப்பும் வெளிப்படுத்தும் ஒரு இருள் நிறைந்த காலத்தில் நாம் இருக்கிறோம் அதைத்தான் கலிகாலம் என்று கிராமத்து பெரியவர்களும் ,படித்தவனும்,படிக்காதவனும் புலம்பி நிற்க செய்கிறது எனலாம்



அகோர வெளிப்பாடுகள் இந்த நில உலகில் மனித பிறவிகளால் அரங்கேற்றப்படுகிறது.இனபடுகொலை ஒரு பக்கம் மலரும் மொட்டுக்கலலேல்லாம் அழிக்கப்படுகிறது,பதுங்கு குழியில் வாழ்கையின் பாடம் கற்று கொடுக்க படுகிறது.வாழ்க்கை இன்னதென்று விளங்கி கொள்ள இயலாத ஒரு பருவத்தில்,கனவெல்லாம் தோட்டாக்களின் சத்தமும்,ரத்த வாடையும்,அலறல் ஒலிகளும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை மனதளவில் ஊனமாக்கி வந்ததை சர்வதேச உலகம் வேடிக்கை பார்த்தது .



உறவுகள் இன்றி அனாதைகள் ஆன எத்தனையோ மனித ஜீவன்கள் ஊமையாய் கதறும் ஒலிகளுக்கு இடையே உலகம் கள் குடித்த குரங்காய் கும்மாளித்து கூத்தாடுவதை கலிகாலம் என்று சொல்லாமால் வேறு என்ன சொல்வது !!

ஒரு ஜனநாயக நாட்டை அதன் பிரஜைகளை எங்கிரோந்தோ வந்து சர்வசாதரணமாக ஒரு தீவீரவாத கும்பல் சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளுகிறது. அதை அரசாங்கம் முன்கூட்டியே தடுக்க திராணியில்லாமல் வேடிக்கை பார்த்து கொள்கிறது.கொலை செய்தவனோடு கொஞ்சி கொண்டு வழக்கு விசாரணையில் காலத்தை கடத்துகிறது




நண்பர்கள் ,நட்பு போன்ற வார்த்தைகள் அர்த்தம் அற்று துரோகமும்,வஞ்சகமும் வெளிப்படும் காலம் கலிகாலமாகி விட்டது.

ஊடகங்களால் சிதைக்கப்படுகிறது இளையவர்களின் மனம்,வாழ்கையை தொடங்கும் வயதில் சகல அழுக்கிலும் கறைபட்டு போகிறது அவர்களின் மனம்

தந்தை மகளை கற்பழிக்கிறான் !!,


பெற்ற தாயையும் தந்தையையும் சொத்துக்காக கொன்று போடும் பிள்ளைகள்,!!


கணவன் உறங்கும் பொது மனைவி கொன்று போடுகிறாள்,!!


எல்லாவற்றிலும் லஞ்சம் ,!!

பணத்திற்காக எதையும் செய்ய துணியும் குருர புத்தி !!

கற்பு ,பெண்மை ஒழுக்கம் இவையெல்லாம் இரவு நடன ,மது கேளிக்கையில் ஒழித்து போடும் இளைஞர் கூட்டம்,!!
எல்லைகளை தாண்டி படிக்கும் வயதில் பிள்ளை பெற்றெடுக்கும் சிறுமிகள்,!!
தர்மத்தை அதர்மம் வெல்லும் என்று மாற்றி எழுத இதனால் முடியுமோ ? என்று அச்சம் கொள்ளக்கூடிய காலம் இந்த கலிகாலம் !!

வெள்ளி, 22 மே, 2009

வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!


கேவலம் வெறும் வார்த்தை ஜாலங்களில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு தமிழ்,தமிழினத்திற்காக நான் உயிரை கொடுக்கவும் தயார் என பேசும் !! கோழை நம் தம் தமிழ் அரசியல் தலைவர்களை இந்த உலகம் இன்னும் மதித்து மரியாதை கொடுக்குமானால் அது மிக கேவலமான ஒரு விழயம் எனலாம்!



ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகள் தமிழினம் அடக்குமுறைக்கு உட்படுதபடுவதை பொறுக்க சகியாமல் ஈழத்தில் மரணத்தை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய ஒரு சுத்தமான தமிழனைத்தான் இன்றைய இலங்கை அரசு வேட்டையாடி சாய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துகொள்கிறது.



உண்மையில் பிரபாகரன் அவர்கள் பதவிக்காக ஆசைப்பட்டு அந்த இயக்கத்தை முன்னிறுத்தவில்லை,!!பணத்திற்காக ஆசைப்பட்டு புலிகள் இயக்கத்தை வழிநடத்தவில்லை! .ஆயுதங்கள் மட்டுமே ஈழத்தை கொண்டு வரும் என்ற கனவில் வழி நடத்தியவர்தான் மாவிரன் பிரபாகரன் எனலாம்.



தமிழ் ,தமிழ் என்று முழங்கும் நம் அரசியல் தலைவர்கள் சுயநல பேய்கள் ,அவர்களுடைய பதவியை பாதுகாத்து கொள்ளவும்,பெறவும்,பணத்தை பெருக்கவும் தமிழ் ஒரு வியாபார சொல் எனலாம்


கொண்ட கொள்கையில் உறுதி,அதற்காக தனது உயிரை பணயம் வைப்பவனே ஒரு போராளி.அவ்வகையில் பிரபாகரன் அவர்கள் ஒரு மிக சிறந்த போராளி எனலாம்.பெற்ற மகனை போருக்கு அனுப்பிய செய்திகள் சங்ககால பாடல்களில் காணலாம் அதனை உண்மையில் நிகழ்த்தி காட்டியவர் பிரபாகரன்.
ராஜிவ் காந்தி படுகொலையால் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு கரை படிந்தது என்பது உண்மை ..எனினும் அது நிகழ பின்புல காரணமாக இருந்த நிகழ்வுகள் அரசியல் ஆய்விற்கு உட்பட்டது.தான் அடையக்கூடிய லட்சியத்திற்கு குறுக்கே வரும் எதனையும் அழித்து போடுவதைத்தான் கண்ணன் குருஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு கூறினான்.
வீரர்கள் என்றும் வீழ்வதில்லை..வீழ்ந்ததாக கருதினால் அது மடமை.மீண்டும் அத்தகைய வீரம் இந்த மண்ணில் பல உருவில் தோன்றி உயிர்தரிக்கும் ,வரலாறு படைக்கும்

ஒரு தனி இயக்கம் அதனை முற்றிலுமாக அழிக்க ஒரு நாட்டின் மொத்த ராணுவமே வேட்டை நாயாய் அலைகிறது.சர்வதேச நெருக்குதல்கள்,தொப்புள்கொடி உறவு என பெருமை பேசும் நாட்டின் பாராமுகம்..இவை எல்லாவற்றையும் மீறி இந்த இயக்கத்தை வழி நடத்தி காட்டிய மாவிரனாக பிரபாகரன் இந்த நில உலகில் அறியபடுவார்.
வீரத்தின் மறுபெயராக சரித்திரம் ஒரு பெயரை சொல்லுமானால் அது பிரபாகரனகவே இருக்கும்.தமிழினத்திற்காக உண்மையாய் உயிரினை தந்ததாக ஒரு போராளியை,ஒரு வீரனை சரித்திரம் பிரபாகரன் என்றே சொல்லும்!
எத்தனையோ பிஞ்சு பிள்ளைகள் மண்ணோடு மண்ணாகி போனார்கள்,கனவுகளை கொன்று ஒரு இனம் வேட்டையாடப்பட்டது எனில் அது தமிழினம்..ஈழ தமிழினம் மட்டுமே..!! அவர்களுடைய வலியை,இழப்பை,தவிப்பை வார்த்தைகளில் சொல்லுவது இயலாது

வீரம் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை வாழ்த்தாகவே சரித்திரம் உண்டு.!!

வெள்ளி, 8 மே, 2009

விடை தெரியா கேள்விகள்...!


மனிதன் சிந்திக்க தெரிந்த ,பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.



பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.


இருப்பினும் மனித அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!


மனித மூளையின் முதல் தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்" விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.


மனிதனால் ஏன் மரணத்தை தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.


மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன் மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது...யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது. எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!



பிரம்மனை uஇரகளை படைக்கும் கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.


ஆனால் மரணம் என்று வரும் போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?


நாகரிகத்தில் முன்னோடி என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன் ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல் வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன் தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??


பூமியின் ஒரு பகுதி வறுமையாலும்...மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?


வாழ்க்கையில் விதி என்றும் ..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?


மரணத்தின் முன்னாள் மண்டியிட்டு நிற்க செய்வது எது ?


கனவு போல் கழிந்து செல்லும் செல்லும் வாழ்கை உண்மைதான?



இன்னும் பல கேள்விகள் மகா அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில் மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை



உங்களில் யாருக்கேனும் இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!







வெள்ளி, 1 மே, 2009

பகவத் கீதையும் - பகவான் கிருஷ்ணனும் !!



குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது.  இறைவனின் கானம் என பொருள்படும் கீதை உலகம் போற்றும் வேத நூல்களில் ஒன்று!




சாரதியாக இருப்பவனே அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவனாகவும் தன்னை வெளிபடுத்துகிறான் கிருஷ்ணன்.!!





சராசரியான மானிட மன நிலையில் பந்த பாசங்களுக்கு ,உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தயங்கி நிற்கும் மனிதனாக அர்ஜுனனை யுத்த களத்தில் கீதையில் நாம் காண முடிகிறது.அதே தருணத்தில் தேரோட்டியோ எல்லையில்லா ஞானம் கொண்ட அனைத்தையும் கடந்து நிற்கும் மிக வல்லமை கொண்ட ஞான குருவாய்,என்னையே சரணடை என மந்தகாச மாய புன்னகையில் க்ரிஷனனையும் நாம் காண முடிகிறது.




ஏசுபிரானின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கீதை இந்த மண்ணில் தோன்றியிருந்தும்,அதனை தொகுத்து வழங்கிய ஆசிரியர் யார் என்பதும் தெளிவற்றதாகவே வரலாற்று ஆய்வியளாலர்கள் முன்வைக்கப்படுகிறது.



கீதையில் கிருஷ்ணன் பல சத்தியங்களை,உண்மைகளை அர்ஜுனனுக்கு கூறுகிறான்.அந்த உபதேசங்கள் யோகங்களாக பிரிக்கப்பட்டு கீதையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.!!.கர்ம யோகம் , ராஜா யோகம்,பக்தி யோகத்தின் தன்மைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது,மேலும் 

இறைவன்............


மனிதன்.............


கர்மம்...............


காலம்................


தர்மம் .............


என்று பல விழயங்களை ஞானத்தின் முத்துகளாக கிருஷ்ணன் யுத்த களத்தில் உதிர்துள்ளதை கீதை வெளிப்படுத்துகிறது .இந்து சமயத்தின் தத்துவ சித்தாந்தத்தை கீதை வெளிப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது.


கீதையின் உந்து சக்தியாக பலராலும் அறியப்படுவது "கடமையை செய் பலன்களை எதிபாராதே  " என்கின்றன முழக்கமே!!



வினை வாழ்வை வகைபடுத்த வல்லது என்பதால் வினை ஆற்றுவதிளிரிந்து மனிதன் ஒதுங்கக்கூடாது என கண்ணன் மிக தெளிவாக அறிவுறுத்துகிறான்.







சம்சார வாழக்கை என்கின்ற யுத்த களத்தில் மனிதன் திறத்துஇடன் வினையாற்றிட வேண்டும் கடமையை செய்வதிலும்,தண்ணிரில் இருக்கும் தாமரை இல்லை எப்படி நீரில் இருந்தும் பந்த படாமல் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனும் பந்த படமால் வினையாற்றிடவேண்டும் என்பது கீதையின் பல பொருட்களில் ஒன்று.



கீதையில் கண்ணனின் உபதேசம் கால நிலைகளை கடந்த ஒன்று..எந்த தருணத்திலும்,எந்த தேசத்தவருக்கும் பொதுவான ஒரு உபதேசம் என்பது அதன் தலையாய சிறப்பு !