வியாழன், 2 அக்டோபர், 2008

தஞ்சை பெரிய கோயில் - தமிழனின் அழகு,அற்புதம்,கம்பீரம் !!!

தஞ்சை பெருவுடையார் கோவில் மன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரத்தி இரண்டில் எழுப்பப்பட்டது .பின்னர் வந்த பல்லவ,சாளுக்யர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டாலும். சோழ கட்டிட கலைக்கு பெரும் சான்றாக உள்ளது தஞ்சை பெரிய கோயில்


காவேரி கரையின் ஓரத்தில் கட்டப்பட்ட பெரிய கோயில் ,கோட்டை மதில் போல் பிரகார அமைப்பு கொண்டது.


இருநூற்றி பதினாறு அடி உயரம் கொண்ட மூல கோபுரம் .அதன் உட்சியில் உள்ள விமானம் எண்பத்தி இரண்டு டன் எடை உள்ள ஒரே கல்லால் அமைந்த சிறப்பு பெற்றது.நிழல் சாய கோபுரம் என புகழ பெறுவதும் இக்கோயில்சிறப்பாகும்


இருநூற்றி ஐம்பதிழு நாட்களில் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல் . கோபுர கலசம் இருநூற்றி முப்பத்தி ஐந்து பௌண்டுகள் கொண்டதாகும்



அற்புதமான கலை நயம் மிக்க பிரகார சிலைகள்


பதினெட்டு அடி உயரம் கொண்ட துவார பாலகர்கள்


இந்த கோவிலில் உள்ள சிவலிங்கமே மிக கம்பீரமும் ,உயரமும் கொண்டாதாகும்




தொண்ணுற்றி ஆறு அடி பரப்பளவு கொண்ட மூல கோபுர அடி பரப்பு, பதி நான்கு கோபுர தளங்களை கொண்டதாகும்
பெரிய நந்தி பனிரெண்டு அடி உயரம் கொண்டது,பத்தொம்பது அடி நீளம்மத்ருமpathinettu adi agalam kondathu


கம்பீரமான உலக புகழ் பெற்ற நந்தி






ஒரு தமிழ் மன்னனின் பெருஎண்ணம்,உலகமெலாம் தமிழனின் பெருமை சாற்றும் உன்னத தெய்விக கலை படைப்பு

இரவு நேரத்தில் தஞ்சை பெருவுடையார் கோயில் அழகு


ராஜராஜனால் நிறுவப்பட்ட கல்வெட்டு தகவல்கள் .
தமிழ் கலாச்சாரம் ,தமிழனின் கலைத்திறன்,ஒப்புயர்வற்ற ஆன்மீக தொண்டு இவைகளின் அடையாளமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின் பெருமை உணர்வோம் ,நம்மை உணர்வோம்...!! வாழ்க தமிழ் ,வளர்க மன்னன் ராஜராஜனின் புகழ் !!