செவ்வாய், 2 டிசம்பர், 2008

குறட்டை விட்டு தூங்கும் ..இந்திய ஜனநாயகம்!!



ஒரு இந்தியனாய் இருந்துகொண்டு இந்திய சட்டத்தையும் ,ஜனநாயகத்தையும் விமர்சனம் செய்வதற்கு நான் வெட்கப்படவே செய்கிறேன் .

கடுமையான சட்ட வரையரைகளை கொண்ட அமெரிக்கா ,இங்க்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளே தீவிரவாத தாக்குதல்களில் நிலைகுலையும் போது..எந்த சட்ட வரையறைகளும் இல்லாத இந்திய வெட்கம் கெட்டு ஆண்டாண்டுகளாய் குறட்டை விட்டு உறங்கி கொண்டிருப்பதில் விந்தை ஏதும் இல்லை என்றாலும், இந்த உறக்கம் களைவது எப்போது என்பதுதான் ஒவொரு இந்தியனுடைய மனதில் எழுகின்ற கேள்வி!!.

மிக சிறந்த ராணுவ அமைப்பு இருக்கின்றபோதிலும் .உள்கட்டமைப்போ தாக்குதல்களை virainthu சமாளிக்கக்கூடிய தளவாட வசதிகளையோ இன்னும் இந்திய பாதுக்கப்பு அமைப்புகள் பெறவில்லை என்பது மிக மிக வெட்கக்கேடான விழயம்.

அன்டர்வேர் அணிந்த அரசியல்வாதிகளுக்கு கமாண்டோ பாதுக்கப்பு!!.

பலகோடி நிதி ஒதுக்கிடு பெறும் இராணுவம் ..மும்பை தாக்குதலை சமாளிக்க மும்பை வந்துசேரவே பத்து மணி நேரம் ஆனது !.

மிக சிறந்த காவல் துறை அதிகாரிகளை இந்த தாக்குதல்களில் இழந்த காரணம் என்ன?.அவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்தது அராசாங்கத்தின் மெத்தனதினாலே!!

அரசியல்வாதிகள் எங்கள் eதிரில் வந்தால் அவர்களை கொன்று போடுவோம் என்று பொதுமக்கள் குமுரியத்தையும், அடுத்த ஒரு ஆண்டிற்கு யாரும் வரிகளை ஆரசங்கதிற்கு கட்டாமல் இர்ருக்கவேண்டும் என்று மும்பை பொதுமக்கள் கொத்திதை நாம் டிவி இயில் பார்க்க நேர்ந்தது.இவை நியாயமான கோபமே !.

ஜனநாயகம் ,இறையாண்மை,அரசியலைமைப்பு சட்டம் என அர்த்தம் இல்லாத அல்லது உண்மையான அர்த்தம் உணராத வார்த்தைகளை இந்தியா என்று உணரும் என்பதே நாம் எழுப்பும் கேள்வி

பாகிஸ்தான் சொல்வதை சொரனையற்று கெட்டு கொண்டிராமல்...சர்வதேச சமுகத்தின் முன்னால் தீவிரவாத அமைப்புகளை ஆதாரங்களோடு அடாயளம் காட்டி ,நமது உள்நாட்டு உளவு மாற்றும் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்

அடுத்து தீவிரவாதிகளின் தோட்டாக்கள் சத்தம் எழுப்பும் முன்னே இந்திய அரசு தனது கும்ப கர்ண தூக்கதிலிருந்து விழிக்கவேண்டும்!!