செவ்வாய், 23 டிசம்பர், 2008

"மைக்கல் ஜாக்சன்" - ஒரு வழிதவறிய கலைஞன்


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை.


11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவை சேர்ந்து புகழுக்கு வந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும்.

1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத்தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.
1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழான பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்கு பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழுக்கு வந்தது.



இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.


இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெறிவித்துள்ளது, தொண்ணுறு மில்லியன் அமெரிக்கர்கள் தொலைகாட்சியில் அவருடைய தொண்ணுறு நிமிட பேட்டியை கண்டது ஒரு சரித்திரம்.
அந்த பேட்டியில் தன்னுடைய சிறுவயது ஏக்கத்தை ,தான் தோல் வியாதியால் பாதிக்கபட்டுள்ளதை ஜாக்சன் tதெரிவித்தார்.




புகழின் ஊட்சியில் இருந்த ஜாக்சன்,போதை,மற்றும் ஓரின சேர்க்கை அதுவும் சிறார்களுடன் இடுபட்டதும் அவருடைய புகழை மறைத்து நிற்கும் புகையாக உள்ளது



சிறு வயதில் தான் இழந்தவைகளே இதற்க்கு காரணம் என ஜாக்சன் தெரிவித்துள்ளார்