சனி, 6 செப்டம்பர், 2008

பகீர் பெத்தாபுரம் !!-சிகப்பு விளக்கு பகுதி !!

பெத்தாபுரம்' பெயரைச் சொன்னாலே விவரம் தெரிந்த பெரிசு களுக்கு பிபி எகிறும்; சில்மிஷமான சிறுசுகளுக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும்! ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள இந்த சின்ன ஊருக்கு அப்படியொரு மவுசு!

திருநெல்வேலிக்கு அல்வா, திருப்பாச்சிக்கு அருவா மாதிரி பெருமையாகச் சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றுமே இல்லாத இந்த ஊருக்கு அப்படி என்ன ஒரு மவுசு?

எல்லாம் முருங்கைக்காய் சமாச்சாரம்தான். வெளியில சொல்ல முடியாத அந்த விஷயத்துக்கு ஆந்திராவுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்குமே தலைநகரம் பெத்தாபுரம் என்பதுதான் மவுசின் மர்மம்!

அந்த மர்மத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ள, ஒரு வீக் எண்டில், வீட்டில் சொல்லாமலேயே பெத்தாபுரத்திற்கு ரயிலேறினோம்...

இரவு முழுக்கப் பயணம்... அதிகாலை ஐந்து மணிக்கு ரயில் ராஜமுந்திரி அடைந்தபோது அலுப்புடன் இறங்கி பெத்தாபுரத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று நாம் விசாரித்தோம். அப்போதே ஏரியாக்காரர்கள் நம்மை ஒரு மாதிரியாக ஏற இறங்கப் பார்த்தனர்.

`மண்டபெட்டா போய் அங்கிருந்து பெத்தாபுரம் போகலாம். இரண்டு மணிநேரம் ஆகும்!' என்று தெலுங்கில் ஒரு ஏளனப் புன்னகையுடன் ஒரு பெட்டிக்கடைக்காரர் சொன்னதுமே பெத்தாபுரத்தின் பெருமை கொஞ்சம் பிடிபட்டது...

மண்டபெட்டா போய் இறங்கியதுதான் தாமதம், நாம் ஊருக்குப் புதுசு என்பதை உணர்ந்து கொண்ட ரிக்ஷாக்காரர்கள் முதல், பொதுவாக விசாரிக்கும் தோரணையில் புரோக்கர்கள் வரை பலரும் நம்மைச் சூழ்ந்து கொண்டனர்.
நாம் பெத்தாபுரத்தைப் பற்றி விசாரித்ததுமே ஒரு புரோக்கர், ``சார் எங்க போகணும்? கம்பெனியா, வீடா? சரஸ்வதி கம்பெனி, பத்மா கம்பெனி, ரீனா கம்பெனிக்கெல்லாம் நான்தான் சார்... இல்ல வீடுன்னாலும் சொல்லுங்க...?'' என்று ஏதேதோ சொல்ல நமக்கு ஒண்ணும் புரியவில்லை...
முதல்ல ஒரு லாட்ஜுக்கு போகணும் என்றதும், ``பெத்தாபுரத்துல லாட்ஜ் இருக்காது. மண்ட பெட்டாவிலயே தங்கிக்கங்க!''என்று ஒரு ரிக்ஷாக்காரர் சொல்ல, அவருடனேயே லாட்ஜுக்குக் கிளம்பினோம்...

`அதென்ன, கம்பெனி, வீடு'ன்னு நாம் அவரிடம் கேட்க, பெத்தாபுரத்தின் ஹிஸ்ட்ரியையே எடுத்து விட்டார் அவர்...
``வீடுன்னா. அந்தக் குடும்பத்துல உள்ள பெண்கள் தொழில்ல இருப்பாங்க. அண்ணன், தம்பி, அப்பான்னு எல்லாரும் அவங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க... அம்மாவுல இருந்து பொண்ணு வரைக்கும் அவங்களோட வயசுக்கேத்தமாதிரி ரேட்... நீங்க யாரைத் தேர்ந்தெடுக்குறீங்களோ அவங்ககூட மட்டும் உல்லாசமா இருக்கலாம்... மற்றவங்க உங்களுக்கு கைகால் அமுக்கிவிட்டு, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி ஒத்தாசையா இருப்பாங்க... ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பணம்... எத்தனை நாள் தங்கினாலும் உங்களை ஒரு விருந்தாளி மாதிரி பார்த்துக்குவாங்க... யாருமே ஏமாத்தமாட்டாங்க. பொய் சொல்ல மாட்டாங்க... நீங்க பயப்படாம இருக்கலாம்...
பெரும்பாலான வீடுகள் காலங்காலமா இதே தொழில்ல இருக்கறவங்களுதுதான். முன்னாடியெல்லாம் வீட்ல ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா உடனே அக்கம் பக்கத்து ஊருக்கெல்லாம் புரோக்கர் மூலம் சொல்லிவிட்டு பொது எடத்துல வச்சு ஏலம் விட்டுடுவாங்க. இப்ப அப்படியில்ல... புரோக்கர் மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டு சில பணக்காரங்க வருவாங்க... மஞ்சள் நீராட்டு விழாவை அமர்க்களமா அவங்களே நடத்தி தொழிலுக்கு முதன் முதலா அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்துவாங்க...
இதமாதிரி நிறையப் பெண்களுக்கு ஒருத்தரே மஞ்சள் நீராட்டு விழா நடத்துனார்னா அவர் அந்த ஏரியாவுல ஒரு பெரிய புள்ளி ஆயிடுவார்... இன்னொரு விஷயம்... குடும்பத்துல ஒரு பொண்ணுக்கு ஒரு விலை வச்சாங்கன்னா யாருபோனாலும் அதான் காசு... ஆளைப் பார்த்து கூட்டி குறைச்சு கேட்கமாட்டாங்க... புரோக்கருக்கு 30% கமிஷன். நிறைய வீடுகள்ல ஆம்பளைங்களே வெளியில் சென்று ஆள் பிடிப்பாங்க. கமிஷன் மிச்சம். இந்த மாதிரி ஏகப்பட்ட குடும்பம் இருக்கு...
கம்பெனின்னா, பல ஊர் பொண்ணுக இருப்பாங்களாம் நடத்துறவங்க அப்பப்ப ஆட்கள மாத்திகிட்டே இருப்பாங்க.
பெத்தாபுரத்துல மட்டும் பத்துப்பன்னிரண்டு கம்பெனி இருக்கு... இதுல சரஸ்வதி கம்பெனி ரொம்ப ஃபேமஸ்'' என்று மொத்த விஷயத்தையும் ரிக்ஷாக்காரர் சொல்லி முடிக்க, நாமும் லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம்.
அன்று முழுவதும் லாட்ஜிலேயே ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுநாள் ஒரு வாடகைக் காரில் பெத்தாபுரத்திற்கு கிளம்பினோம்.
ஊர் எல்லையில் அழகான ஆஞ்சநேயர் கோயில்... அத்துடன் மார்க்கெட், பள்ளிக்கூடம் என ஊரில் ஒரு குறையும் இல்லை. அரசின் விழிப்புணர்ச்சி பிரச்சாரத் தால் பெரும்பாலான குடும்பங்கள் கௌவரவமான வாழ்க்கையையே நடத்துகின்றன. மற்றபடி ஊரில் இதுக்கென்று சிலச்சில வீடுகள்...
தமிழும் தெலுங்கும் தெரிந்த பல புரோக்கர்கள்... நாம் பத்திரிகைக்காரர்கள் என்று தெரிந்ததும் பெரும்பாலானவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். ஒரேயொருவர் மட்டும், ``நான் சில வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்... பேசுங்க, ஆனா காமிராவை வெளியில எடுத்தீங்கன்னா பிரச்னையாயிடும். ஒத்துக்கிட்டா வாங்க''ன்னு சொல்ல, நாமும் சம்மதித்தோம்.
போகிற வழியிலேயே அவர் அப்படிப்பட்ட பல வீடுகளைக் காட்ட, தெருவிலும், திண்ணையிலும் அமர்ந்து சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்களைப் பார்த்தால் நமக்குத் தப்பாகவே தோணலை!
கடைசியா ஒரு வீட்டு முன் போய் கார் நிற்க, இறங்கினோம். புரோக்கர் கதவைத் தட்ட திறந்த கதவு சிறிது நேரத்தில் மூடிக்கொண்டது. திரும்ப வந்த புரோக்கர் நம்மை பக்கவாட்டில் உள்ள சின்ன வழி மூலம் வீட்டின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றார்.
சமையலறையின் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதில் வந்த ஒரு பெண் போட்டிருந்த நைட்டியை முழங்காலுக்கு மேல் தூக்கி, தொடை இடுக்கில் சொருகிக் கொண்டு வாசல்படியில் உட்கார்ந்து கொண்டார். பெயரைக் கேட்டதும், ``தேவி!'' என்றவர். நமது ஐ.டி. கார்டை வாங்கிப் பார்த்தபின்தான் பேசவே ஆரம்பித்தார். அதற்காக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று அடம்பிடித்தவர் காமிராவைத் தொடக்கூடாது என்றார்.
``எனக்கு 22 வயசாகுது. ஏழு வருஷமா தொழில்ல இருக்கேன். எந்தப் பிரச்னையும் இல்ல... ஆரம்பத்துல எனக்கு காசும் அதிகம்; கஸ்டமர்களும் அதிகம். இப்ப குறைஞ்சு போச்சு!'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பைக்கில் வந்த பையன் ஒருவன் அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தான்...
``என் தம்பிதான் இவன். கஸ்டமர் வந்திருக்காங்களாம். பார்க்கணுமாம்!'' என்று சொல்லிவிட்டு, ``அதுவரை எங்க அக்காகூட பேசிக்கிட்டிருங்க!''ன்னு சொல்லிட்டுப் போனார்.
அவர் அக்கா என்று சொன்ன நாகலட்சுமியும், ``எங்களுக்கு இந்தத் தொழில்ல வருத்தமோ, வெட்கமோ இல்ல.... கஸ்டமர் தேடி வர்றவரைக்கும் தொழில்ல இருப்போம். அப்புறம் கல்யாணம். இல்லாட்டி யாருக்காவது வைப்பாட்டியா காலத்தை ஓட்டிருவோம். எங்க குடும்பத்துல பெண் குழந்தை பிறந்தா அவ்வளவு சந்தோஷமா கொண்டாடுவோம். கல்யாண மாகாட்டாகூட பிடிச்சவங்க யாரு கூடவாவது பிள்ளை பெத்துக்கறதும் உண்டு. பிரச்னைன்னு பார்த்தா எப்பவாவது போலீஸ் தொந்தரவு இருக்கும். வழக்கமா நாங்க மாமூல் கொடுக்கறதால அடிக்கடி தொந்தரவு பண்ண மாட்டாங்க. போலீஸ்காரங்க இந்த ஊருக்கு போஸ்டிங் வாங்கறதுக்கு அம்பது லட்சம் வரைக்கும் லஞ்சம் கொடுக்கறாங்களாம். அப்படீன்னா இங்க பிஸினஸ் எப்படின்னு பார்த்துக்கங்க.
தமிழ்நாட்டு கஸ்டமர்களை இங்கு உள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ரப்சர் இல்லாத ஆளுங்க.''
என்று சொன்னவர், ஒரு மணி நேர பேச்சுக்குப்பின் உள்ளே அழைத்துச் சென்றார்.
கிச்சனில் கேஸ் ஸ்டவ்கூட தரையில்தான் இருந்தது. வெகு சாதாரணமான அந்த வீட்டில் பெட்ரூம் மட்டும் பெரிய அலங்காரத்துடன் இருந்தது. அடுத்து புரோக்கர் அழைத்துச் சென்ற வீடுகளிலும் பெட்ரூம் படுஆடம்பரம்தான். சில வீடுகளில் அண்டர்கிரவுண்ட் அறைகள் வேறு.
ஒரு நாளைக்கு வீட்டில் தங்க ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை வாங்கினாலும் மாமூல், கமிஷன் எல்லாம் போக சராசரி ஒரு நாளைக்கு இரண்டாயிரம் மூவாயிரம்தான் இவர்களுக்கு மிஞ்சுமாம். வர வர வருமானம் குறைய, இப்பொழுது ஒரு சிலர் திருவிழா நேரங்களில் நடக்கும் நடு இரவு நிர்வாண நடனங்களுக்குச் செல்கின்றனராம். நாம் சென்றபோதும் அப்படியொரு திருவிழா...
வக்கிரத்தின் உச்சம் என்றாலும் பிழைப்புக்காகச் செய்யும் அந்தப் பெண்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது.
நம்மூரில் தங்கை மகள் வயதுக்கு வந்தால் தாய்மாமன் சீர் வாசலுக்கு வரும். இங்கோ பிள்ளை சடங்கானால் தரகருக்கு முதல் சேதி... ஊர் அறிய முதல் இரவு! நமக்கு உறுத்தியது. பாவம் அவர்களுக்கு மரத்துவிட்டது. மொத்தத்தில் வெளியில் பேசப்படும் அளவிற்கு பெத்தாபுரம் ஒன்றும் உல்லாசபுரியாக நமக்குத் தோன்றவில்லை. உயிர் குடிக்கும் நோய், எய்ட்ஸை அறியாமையால், விலை பேசி வாங்கும் அப்பாவிகளின் மரண தேசமாகத்தான் தெரிந்தது..