செவ்வாய், 6 ஜனவரி, 2009

நேற்று! இன்று! நாளை!


இன்றைய தேதியில் இந்த உலகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையான மாற்றங்களை வெளிப்படுத்தி வருகிறது!.நேற்று போல் இன்று இல்லை ,இன்று போல் நாளை இராது என்பதே இன்றைய நிலவரம்.
இயற்கையின் நிலைபாடகட்டும்,குடும்ப வழ்கையாகட்டும்,பொருளாதாரமாகட்டும் எல்லாமே மாறிவருகிறது.இயற்கையின் சீற்றம் சுனாமி போல்..பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.நவின தீவிரவாதம் மனித உயிர்களை கில்லுகீரையாகி விட்டு போன நேற்றைய மும்பை தீவிரவாத தாக்குதல்கள்..சிந்தனைக்குரியது !
மிக பணகார நாடான அமெரிக்காவில் வீடும் இழந்து, Oட்டான்டியாக ,வேலையற்று அலைந்து திரியும் மக்கள் ஒரு பக்கம்.சீட்டு கட்டுக்கள் சரிவது போல் பணகார தொழிலதிபர்கள் இன்று கடனாளியாகி,தற்கொலை செய்து கொண்டவர்களும் பலர்.
பெட்ரோல்,ரியல் aஸ்டேட் எனப்படும் கட்டுமான தொழில் சகலமும் சடுதியில் நிலைகுலைந்து நிரந்தரமட்ட்ற ஒரு வெற்றிடத்தை வெளிகாட்டி மக்களை விரக்தியில் தள்ளியுள்ளது
நேற்று இப்படி சடுதியான மாற்றங்களை வரலாறு வெளிபடுத்தவில்லை..ஒரு இரவில் நிலைகுலையும் தேசங்களை நாம் காணவில்லை..இது இத்துடன் முடியாமல் நாளைய விடியலை சந்தேகத்தோடு நோக்க கூடிய தன்மையை நமக்கு ஏற்படுத்திவிட்டது .