புதன், 25 பிப்ரவரி, 2009

உலகில் வாழ்ந்து காட்டியவர்கள் ..!-- அறிந்து கொள்ளுங்கள் !!


தங்களுக்கு அளிக்கப்பட்ட மனித வாழ்கையை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி தங்களுடைய வாழ்கையை உலக சரித்திரத்தில் பதித்தவர்கள் பலர்.


நாட்டின் சரித்திரத்தை மாற்றி,பல அறிவியல் கண்டு பிடிப்புகளை உலகுக்கு வழங்கி . துணிவோடு முன்னின்று வழி நடத்திய அந்த மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் .


சோதனைகளை கண்டு மனம் தளர்ந்து பின் வாங்கும் இன்றைய இளைஞர்களுக்கு அவர்களை வாழ்கை ஒரு பாடம்.!!


நம் எல்லோருடைய வாழ்கையிலும் விளக்கேற்றி வைத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் , தன்னுடைய சிறு வயதிலேயே காது கேட்கும் தன்மையை இழந்தவர், முறையான கல்வி அறிவு பெறாதவர்.அனால் எடிசன் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் ஆயிரத்தி தொனூற்றி மூன்று.!! .தளராத உழைப்பிற்கு பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!



இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் ,தன்னுடைய தனி திறமையால் பல பிரிவுகளாக பிரிந்து கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒன்றினைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்
பிரிவு பட்ட இந்தியாவால் பயன் ஏதும் இல்லை என்பதை நன்கு உணர்ந்து இரும்பு கரம் கொண்டு ஐநூற்றி அறுபத்தி இரண்டு சமஸ்தானங்களை ஒன்றினைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.அதனாலேயே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கபட்டார்.

வங்காளத்தை சேர்ந்த நேதஜி சுபாஷ் சந்த்ர போஸ் வெகு வெளிப்படையாக இந்திய தேசிய படையை அமைத்து ,அன்றைய பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு பெரும் சவாலை உண்டாக்கினார் சுபாஷ்.அன்றைய இளைஞர்களுக்கு சுபாஷ் ஒரு எழுச்சி தீபமாக விளங்கினர்.
ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு அறிய வாய்ப்பாகவே வழங்கப்படுகிறது வெகு சிலரே அதன் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு தங்களுடைய வாழ்கையை உண்மையில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

ஒழுக்கம்,ஞானம்,துணிவு என மூன்றின் உருவமாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர் .சரித்திரத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் .உனது இலக்கை அடையும் வரை ஓயாதே என்று முழங்கியவர்.

மிக பின் தங்கிய நாடாக அறிய பட்ட இந்தியாவில் இருந்து சிகாகோ சர்வ மத மாநாட்டில் ஒரு ஞான சுடராய் பலரை தன்னுடைய ஞானத்தால் இழுத்தவர் சுவாமி விவேகானந்தர்.



மிக சாதாரன குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் மிக சிறந்த விஞ்ஞானியாக ,நாட்டின் ஜனாதிபதியாக ,பதவி வந்த போதும் எளிமை மாறாத உள்ளம் கொண்டவராக மக்களின் ஜனாதிபதியாக விளங்கியது மற்றுமொரு உதாரணம்
பொருள் சம்பாதிப்பது,பிள்ளைகள் பெற்று அவர்களுடைய வாழ்கையின் பொருட்டு வாழ்வது இவை ஒரு சாதாரன வாழ்கையாகும், இவற்றிலிரிந்து மாறுபட்டு தன்னை சார்ந்த சமுகத்திற்கு,நாட்டிற்கு,உலகிற்கு என வாழ நினைக்கும் போது மனிதன் தன்னுடைய வாழ்கையின் முழு பேற்றினை பெறுகிறான்.
நூறாண்டுகள் வாழ்வது சாதனையாகாது! வாழ்ந்த காலங்களை காட்டிலும் வாழுகின்ற செயல்களின் தன்மை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.


சிறுவயதிலேயே தந்தையை இழந்து தன்னுடைய இசை ஆர்வத்தால் ,படைப்பால்,ஒரு இந்தியானாய்,தமிழனாய் ஆஸ்கார் மேடையில் நின்று பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் இன்றைய வாழும் சரித்திரம் .
நாளைய உங்களுடைய கல்லறை வாசகத்தை இன்று நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்! அது உங்களின் வாழ்கையின் அர்த்தத்தை சொல்லட்டும்,கால இடை வெளிகளை சொல்வது வாழ்வாகாது.காலத்தை கடந்து நிற்கும் வாழ்வே வாழ்வு
வாழ்வோம் ! வாழ செய்வோம் !!