வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

"சோனியா காந்தி" - தேசம் கடந்த காதலின் கதை !!



இந்தியா நன்கு அறிந்த ஒரு பெயர் சோனியா காந்தி . காதல் என்பது மொழி,இனம்,தேசம்,தகுதி இவைகளை கடந்தது என்பதற்கு சோனியா காந்தியின் வாழ்கை ஒரு நிகழ் கால சான்று என கொள்ளலாம் .காதலின் சக்தி தேசங்களை கடந்தது மனம் ஒன்று சேரும்போது மதங்களும்,இனங்களும்,பின் தள்ளப்பட்டு வாழ்கை சக்கரத்தில் நசிந்து போகின்றன



சோனியா காந்தியின் இயற் பெயர் - எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ என்பதாகும். சோனியா ஒரு ரோமானிய கத்தோலிக்க கிருஸ்தவ குடும்பத்தில் ஆயிரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ஆறாம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தந்தை ஸ்டீபானோ ஒரு கட்டிட ஒப்பந்தகாரர்.




இவருடைய தாயும் ,இரு சகோதரிகளும் தற்போதும் இருப்பது இத்தாலியில் .கல்வி பயில்வதர்க்காக கேம்பிரிட்ஜ் சென்றார் சோனியா அது ஆயிரத்தி தொள்ளயிராத்தி அறுபத்தி நான்காம் வருடம் .அதே வருடம் இந்தியாவில் இருந்து ராஜிவ் காந்தி ட்ரினிட்டி கல்லுரியின் மாணவனாக கேம்பிரிட்ஜ் இல் இருந்தார்.


சோனியா வும் ராஜிவும் மூன்று வருட காதலுக்கு பின் ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ஏட்டில் .திருமணம் செய்து கொண்டனர். தன்னுடைய் தாய் இந்திர காந்தியின் பூரண சம்மதம் இல்லாமல் அந்த திருமணம் அப்போது நடந்ததாக அப்போது ஊடகங்கள் எழுதின, எனினும் தன்னுடைய பிள்ளையான ராஜிவுக்கு இந்திரா பூரண சுதந்திரம் கொடுந்திருந்தார்




இந்திராவுக்கு மிக பிடித்த மருமகளாக சோனியா இருந்தார் என்பது பின்னாளில் இந்திய கண்ட ஒன்று.

சோனியா மற்றும் ராஜிவின் வசந்தகளாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள், முதலாமவர் ராகுல் காந்தி இராண்டாவதாக பிறந்ததவர் பிரியங்கா காந்தி.இருவரும் ராஜிவை நம் கண் முன்னே கொண்டு வர குடிய சிரிப்புக்கு சொந்த காரர்கள்



ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு ஆயிரத்தி தொள்ளயிரத்தி எண்பத்தி நான்கில், இந்திய குடியுரிமை பெற்றார் சோனியா.ராஜிவின் புகழுக்கு களங்கமாக விளங்கிய போபிஒர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் இத்தாலியின் குட்ரோச்சி என்பவர் சோனியாவின் மூலமாகவே ராஜிவுக்கு அறிமுக மானார் என்பதும் ஊடகங்களின் ஆய்வு.



ராஜிவின் மறைவிற்கு பின் சோனியா அரசியலுக்கு வராமல் விலகியே இருந்தார்.ஆயிரத்தி தொள்ளயிரத்தி தொண்ணுற்றி ஏழில் அடிப்படை உறுப்பினாராக இணைந்த சோனியா தொண்ணுற்றி எட்டில் அதன் (காங்கிரஸின் )தலைவர் ஆனார்.





இன்றைய தேதியில் உலகின் அதிகாரம் மிக்க முதல் பத்து பெண்மணிகளில் சோனியா ஒருவராக உள்ளார்.

கடந்த முறை நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்க்றேச்சின் வெற்றி சொநியவல் கிடைத்ததே.





தன்னுடைய காதல், தேசத்தை கடந்து ஒரு உன்னத கலாச்சாரம் நிறைந்த இந்திய திரு நாட்டிற்கு வழி நடத்தி செல்லுகின்ற அளவிற்கு தனக்கு அதிகாரத்தையும்,நம்பிக்கையும் கொடுக்கும் என சோனியா அன்று நினைத்திருக்க மாட்டார் என்பது உண்மை. அதுவே காதலின் பரிசாகவும் வெளிப்பாடகவும் நாம் இன்று காண்கிறோம்


தூய்மையான காதல் வாழ்க பல சரித்திரங்களை அது படைக்கும் .அதற்க்கு சோனியாவின் வாழ்கையும் ஒரு சான்று .