வியாழன், 15 ஜனவரி, 2009

அம்மாவ வாங்க முடியுமா..??


இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களும் தாய் என்கின்றன ஒப்பற்ற உறவினாலே உயிர்பிக்கபடுகின்றன. ஒருவேளை உங்களுக்கு தங்கை என்கின்ற உறவு இல்லாமல் இருக்ககூடும்,அக்கா,அண்ணன்,தம்பி,மாமா என்று உறவுகள் கூட அமையாமல் இருக்ககூடும் ..ஆனால் தாய் என்கின்ற உறவு இல்லாமல் இந்த உலகில் உயிர்கள் பிறப்பதும் இல்லை..இறப்பதும் இல்லை!!

கரு வயிற்றில் தங்கி மெல்ல மெல்ல வளர்ந்து வரும்போதே உடல் அளவிலும் மனதளவிலும் அதிகமான சுமையை ஒரு தாய் தன்னோடு சேர்த்து வளர்த்து கொள்கிறாள் .

நம்முடைய முதல் உணவு அவளுடைய ரத்ததிளிரிந்து பாலெனும் அமுதமாக,நம்முடைய அடிப்படை உடல் சக்தியாக,அவளுடைய மட்டற்ற கருணையாக நம்மை வளப்படுத்துகிறது .


காலங்கள் பல மாறினாலும் தாய் எப்போதும் தன்னுடைய பிள்ளையை ஒரே மாதிரியே பார்க்கிறாள்.ஒவ்வொரு குழந்தையும் யசோதையின் கண்ணனாக சீராட்டிதான் வளர்க்கபடுகின்றனர்.

மேலே உள்ள படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றுதான்.இளமை தொலைந்து முதுமை வந்தாலும் தாய்க்கு தன்னுடைய பிள்ளை அதே பால்ய கண்ணன் தான்!.
அவளுடைய உதிரத்திளிரிந்து நாம் வளர்கிறோம்,அவளுடைய கைகளால் செய்த உணவு நீங்கள் இறக்கும் வரை நிகரற்றதாகவே இருக்கும். பனிக்குடம் உடைந்து உடைந்து இந்த மண்ணில் குழந்தை தோன்றும்போது தாயின் கண்கள் உடைபெடுக்கின்றன,அது வலியினால் ,ஆனந்தத்தினால் ,புதிய பொறுப்பிற்கான மகிழ்ச்சியினால் பிரித்தறிய முடியாத கண்ணிற் துளியது !!
உங்களுடைய ஒவ்வொரு பருவத்தையும் அவள் இரண்டாம் முறை கடக்கிறாள்!. நீங்கள் சிறு வயதில் காய்ச்சலால் கண்ணிற் விடும்போது அவளும் சேர்ந்து கண்ணிற் சுரக்கிறாள்.ஆனால் அவளிடதிரிந்தே நம்பிக்கையையும் ,தாய்மையின் கருணையையும் நாம் பெறுகிறோம் ,வளர்கிறோம் .
காலங்கள் மாறுகிறது நம்முடைய ,உடலும்,உணர்வுகளும் மிக சுதந்திரம் பெறுகின்றன ..நம்மால் நிற்க இயலும் என்று முழுதுமாக நினைக்கும் போது நாம் நம்முடைய ஆதி அந்தத்தை மறந்தே போகிறோம் .
வார்த்தைகளால்,செயல்களால் நாம் அதி அற்புத மேதாவிகளாக நாம் கற்று கொண்ட பாடத்தை வேறு மாதிரியாக நம்முடைய தாய்க்கு தெரிய படுத்துகிறோம் . நமக்கென்று ஒரு குடும்பம் அமையும்போது அவள் முற்றிலுமாக மறக்கபடுகிறாள் ,மறுக்கவும் படுகிறாள்.
பல முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவிட்டன ,நமது இன்றைய கற்றறிந்த சமுதாயம் வேர்களை உணராமல் கனிகளுக்காக வானத்தை அண்ணாந்து பார்க்கின்றன.இந்த உலகில் எதை வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி விடலாம்..ஆனால் தாய் என்ற உயிர்ப்பு நிறைந்த உறவை வாங்க இயலுமா?
நீங்கள் மிகப்பெரிய சாப்ட்வேர் பொறியாளராக இருக்கலாம்,பல லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவராக,பல நாடுகளை அனயாசாமாக கடந்து அறிவு மிக்க வல்லுனாரக இருக்கலாம்!...ஆனால் ஒருகணம் நீங்கள் தவழ்ந்த அந்த மடியை நினைத்து பாருங்கள் ,உங்களுடைய முதல் உலகம்,முதல் படிப்பு அங்கிருத்து வந்தது தானே ??.

நாளைய நம்முடைய சமுதாயம் நன்றி மிக்கதாக, செயல் அளவில், ஆத்மர்த்துவமாய் நம்மை பெற்றவளை மறந்து போகாமல் இருக்கவும் நம்முடைய விழுதுகள் தவறாமல் இருக்கவும் காத்து கடமையை செய்வோம் !!

சந்தனகட்டை வீரப்பன் !!- சில தகவல்கள்


கூஸ் முனிசாமி வீரப்ப கொவுன்டேர் என்பது வீரப்பனின் இயற்பெயர் .கோபினதத்தில் முனிசாமி கொவேண்டேருக்கும் ,புனியத்தம்மாவிக்கும் கோபிநத்தத்தில் பிறந்தார் வீரப்பன் (1952 - 2004) தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.
இரண்டாயிரம் யானைகளை சுவாக செய்தார் வீரப்பன்,நூற்றி இருபத்து பேரை போட்டு தள்ளி,பத்தாயிரம் ton சந்தன கட்டைகளை கடத்திய மாமனிதர் வீரப்பன்
தன்னுடைய பத்து வயதில் முதன் முதலாக ஒரு யானை கொன்று பாராட்டுதல்களை பெற்றார் வீரப்பன் .ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ரெண்டு மற்றும்,எண்பத்தி ஆறில் போலீசாரால் பிடிக்கப்பட்டும் தப்பித்தவர் வீரப்பன்


நக்கீரன் கோபால் அவர்கள் தூதுவரை அரசு சார்பில் சில முறை பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தி சிம்ம சொப்பனமாக விளங்கினான் வீரப்பன்


2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், சாவில் மர்மம் நீடிக்கிறது


வீரப்பன் மனைவி முத்துலக்ஷ்மியுடன் வீரப்பன் மகள்கள்


நெற்றியில் குண்டடிபட்டு வீரப்பன் சடலமாக