
சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றாதாக கூறப்படும் திருமணங்கள் பின் ஏன் நரகத்தை கொண்டு வந்து விடுகின்றன என்பதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவிப்பதும் ,வழிகாட்டுவதும் இந்த மனதின் கடமையாகும் !!
காலம் காலமாக ஆண் மக்கள் திருமணத்திற்கு பின் முழி பிதுங்கி நிற்கின்ற அவலத்தை என்னவென்று சொல்வது !.
பலி கடாக்களாக தமிழ் காளைகள் மஞ்சள் தெளிக்கப்பட்டு திருமணம் என்ற பந்தத்தில் காலையும் வாலையும் இழந்தவர்கள் எத்தனை பேர் !
சரி விழயத்திற்கு வருவோம் ...
நீங்கள் தற்பொழுது திருமணம் நிச்சயிக்கப்பட்டு ..திருமண கனவில் உள்ளவரா ?
ஐயா நீங்கள் மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளிர்கள் மாப்பிள்ளை அவர்களே !
உங்களுக்கு உதவிட இதோ முத்தான யோசனைகள் இதனை கடைபிடித்தால் தப்பிக்கலாம் நீங்கள்
* கனவுகளில் மயங்கி .... அதிகம் வருங்கால மனைவியிடமோ.. அவர்கள் பெற்றோர்ரிடமோ செல் போனில் உங்கள் பேங்க் BALANCE மற்றும் கருணையும்,மனித நேயமும் மிக்க ஜெகதால பிரதாபராக உளறி கொட்டதிர்கள்
* கூடிய மட்டும் பேச்சினை குறைத்துகொள்ளுங்கள்.உங்களுடைய தாய் தந்தையர் மூலமாக அவர்கள் உங்களை அணுகுவதை போல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் வடிவேலு கிட்னி இழந்த காமெடி போல் ஆகிவிடும் உங்கள் கதை
* எதிர்கால வாக்குறுதிகள் , உங்கள் தகுதிக்கு மீறிய பீத்தல்கள் இவற்றை அறவே விட்டுவிடுங்கள் இல்லை ...பின்னர் சொல்லி சொல்லி வெட்டுவார்கள் சாமி
* மாப்பிள்ளை முறுக்கை விட்டுவிடதிர்கள் ஏனெனில் திருமணத்திற்கு பின் முற்றிலுமாக அது உங்களிடத்தில் இருந்து பறிக்கப்பட்டுவிடும்
* உங்களுக்கு மனிதர்களின் குணாதிசயங்கள் தெரிந்திருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் ஏடா கூடமாக மாட்டி சின்னா பின்னா படுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஆதலால் உஷாராக நடந்து கொண்டால் பிற்கால தொந்தரவுகளிலும்,கொஞ்சம் மரியாதையோடும் வாழ்கை செல்லும்
நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆகி பலி கடாவாக ஆக்கபட்டிருந்தால் திட்டிகொண்டே இந்த தகவலுக்கு வோட்டு போடுங்கள். மற்றவர்களுக்கு உதவும்
இப்பொழுதுதான் மாட்ட தயாராய் இருந்தால் சந்தோழதொடு வோட்டு போடுங்கள்!!. ஏனெனில் நீங்கள் தப்பிக்க வழி கிடைத்துவிட்டது.
தயவு செய்து எனக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்பவர்கள் ..உங்களுடைய போன் எண்ணை தெரிவிக்க தவறாதீர்கள் .எங்களை போன்றவர்களுக்கு உதவும் !!