ஒரு நாட்டின் அரசியலமைப்பின் தன்மையை கொண்டே அந்த நாட்டின் வளர்ச்சி பெருமளவும் சார்ந்திருக்கிறது.லஞ்ச,லவான்யமற்ற ,தொலை நோக்கு பார்வையை கொண்ட அரசு ,நாட்டின் வளர்ச்சியை, மாண்பை உலகின் பிற நாடுகளுக்கு உணர்த்துகிறது.
அரசியல் என்பது மக்களுக்காக, மக்களின் நல் வாழ்வுக்காக என்பதாலேயே அதை பொது வாழ்க்கையாக நாம் கருதுகிறோம்.அன்றைய காமராஜரை மிக சிறந்த அரசியல் தலைவராக நாம் கொண்டாட காரணம் என்ன? மக்களுக்காக ,மக்களின் நல் வாழ்வின் பொருட்டு தன்னுடைய வாழ்கையை மிக வெளிபடையாக அமைத்து கொண்ட அவருடைய பாங்கு..வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றளவும் அவருடைய,எளிமை,கடமையை மட்டுமே கருத்தில் கொண்ட அவருடைய கர்ம சிந்தனை ,மக்களுக்காக அரசியல் என்பதை மிக அழுத்தமாக நிருபித்ததே காரணம்.
இன்றைய அரசியல் தலைவர்களை ,அவர்களின் பொது வாழ்கை முறையை நீங்கள் சற்று ஆராய்ந்து பாருங்கள்....
பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள்...
பல கோடி பெறுமானமுள்ள வணிக வளாகங்கள்....
திராட்சை தோட்டங்கள்....
பல கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள்...
மருத்துவ செலவிற்காக மக்களின் வரிபணம்..மகனும்,மகளும்,வளர்ப்பு மகன்களுக்கும் ,பேரன்களும்,தோழிகளும் சேர்ந்து பதவி குளியல்கள்..
அன்றைய காமரஜார் இறக்கும் பொது வெறும் நூற்றைம்பது ரூபாய் மட்டுமே தன்னுடைய சொத்தாக வைத்திருந்தார்...
இன்றைய அரசியல் வாதிகள் நூற்றைம்பது கோடிகளை சர்வ சாதரணமாக தங்களுக்காக,தங்களின் பிள்ளைகள்,பேரன்களுக்காக கொடுத்து விடுகிறார்கள்.எங்கிருந்து வந்தது இவ்ளவு பணம்,சொத்து?
மக்களின் வரிபணம்...
அதிகார துழ்ப்ரயோகம்...
லஞ்சம்...
அரசியல் பேரங்கள்...
கட்சி பணம்...சொந்த பணமாக மாறிவிடுகிறது..
அரசு அரியணையில் அமர்ந்துவிட்டால் பின்னர் தமிழ்நாடு அவர்குளுடைய நாடாகி விடுகிறது..
எல்லா திட்டங்களிலும் தனிப்பட்ட ஓது கீடுகள் இல்லாமல் நடைபெறுவதில்லை. எல்லா நிலைகளிலும் கமிஷன் விளையாடுகிறது..மிஞ்சி இருப்பதில் திட்டம் பெயரளவிற்கு முழுமை பெறுகிறது !
மக்களை ஸொம்பெரிகலாக்க அரிசியும், துணி மணியும்,தொலை காட்சி பெட்டிகளும்,பணமும் அள்ளி வழங்கப்படுகிறது..ஆரோக்கியாமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களை,உழைக்க திராநியற்றவர்கலக்க மாற்றிவிடுகிறது இன்றைய அரசாங்கங்கள்..
சந்தர்ப்பவாத கூட்டணிகள் ...கொள்கைகள்...
கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் ஒரு சீட்டு கூட கொடுத்தால் பல்லிலிலித்து பரவசம் காட்டும் பச்சோந்தி அரசியல் தலைவர்கள்..
ஜாதியின் பெயரால் ஒரு கூட்டம்..பகுத்தறிவுவாதிகள் என்று கூறி கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒரு பக்கம்..
அரசியல் ஒரு லாபகரமான ..மன்னிக்கவும் கொள்ளை லாபகரமான தொழிலாக நம் கண்ணெதிரே நடக்கிறது..நாமும் ஆதரிக்கவே செய்கிறோம்..பணம் கொடுத்து வோட்டுக்கள் வாங்கப்படுகின்றன..அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள் கொள்ளை அடிக்க நாம் அவர்களுக்கு மலை அணிவித்து வழி அனுப்புகிறோம்..
மக்களுக்காக,மக்களின் பொருட்டு என்று அரசியல் அமையுமோ அன்று இந்தியா ஒளி பெரும்.
3 கருத்துகள்:
நல்ல பதிவு!
காமராஜரை பற்றி எத்தனை பேர் எடுத்து சொன்னாலும், இன்றைய அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவே போவதில்லை.
நிறைய எழுத்துப்பிழைகள், சரி செய்யவும்.
தன்னலமற்ற அரசியல் தலைவர்களுக்கு மக்கள் அளித்த ஆதரவு கடந்தகாலங்களில் நிரூபணம். மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இறந்த நல்ல தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் இங்கு இருத்திருக்கிறார்கள் .அவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு யாருமே முன்வரவில்லை என்பதுதான் உண்மை . எத்தனையோ நேர்மையான அரசியல் தலைவர்களின் மறைவிற்கு பின்னால் அவர்களுடைய மனைவி மக்கள் படும் பாட்டை இந்த மக்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர வேறெதுவும் செய்யவில்லை .அந்தநிலை நமக்கும் வரவேண்டாம் என்று நினைக்கிறார்கள் அந்த நினைப்பை அவர்களுக்கு வரவைத்தது மக்கள்தான்.என்பதை நினைத்து பர்ர்க்க வேண்டும் .
ஏழை எளிய மக்களின் உழைப்பைச்சுரண்டி பல கோடி களில் வீடு கட்டி அதில் முதுகுவலியோடுபடுத்திருப்வன் தான் அரசியல்வாதி....
எது செய்தாலூம் திரும்பக்கிடைக்கும் என்பதை அறியாத மூடர்கள்....
கருத்துரையிடுக