வெள்ளி, 20 மார்ச், 2009

கேப்டன் விஜயகாந்தும் - தே.மு.தி.க வும் !!


தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றி பின் சுவடே இல்லாமால் போன வரலாறுகள் உண்டு.அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டத்திற்கு ஒப்பிட்டு வழி வழியாக சொல்ல படுவதுண்டு.


நேர்மையான அரசியலும்,அரசியல்வாதிகளும் இன்றைய கால கட்டத்தில் அறவே இல்லாமல் பொய் விட்டார்களோ என்று நாம் அவநம்பிக்கை கொள்ளுகின்ற தருணத்தில் இன்றைய அரசியல் தூர் வாரப்பட வேண்டும் என்பதே இன்றைய அத்தியவாசிய உண்மை !!



திட்டங்களை வகுப்பதோடு மட்டுமில்லாமல் ,நெருக்கடியான கால கட்டத்தில் மிக சரியான தீர்வை,முடிவை எடுப்பது ஒரு சிறந்த தலைவனின் இயல்பாக இருக்கவேண்டும். அப்படி பட்ட தலைவர்களே மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க தகுதியானவர்கள்.!!


மலிந்துவிட்ட பச்சோந்தி தனமான அரசியலில் யாரேனும் ஒருவர் மாற்றத்தை கொண்டு வர இயலுமெனில் அதனை ஆதரிக்க முயல்வது ஆரோக்கியமான ஒன்றே !!. அவன் சினிமாகாரானாய் இருந்தாலும், செருப்பு தைப்பவனாய் இருந்தாலும் தவறேதும் இல்லை !!.ஒரு அரசியல் தலைவனுக்கு பின் வரும் தகுதிகள் இருந்தால் அதுவே போதும் .


உண்மையில் திறன் படைத்தவன்.....

துணிவோடு முடிவுகளை எடுக்க கூடியவன் ......

உண்மையில் மக்களுக்கு நல்லதை செய்ய விழைபவன் ......

பணத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவன் .....

இப்படி அடிப்படை குணங்களும் தகுதிகளும் இல்லாத சுய நல அரசியல்வாதிகளால் நாடு குட்டி சுவராய் போனதே மிச்சம் எனலாம்!!.


திரு.விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய தருணத்தில் குழப்பம் எதையும் அவர் தன்னுடைய முடிவுகளில் காண்பிக்கவில்லை. மாறாக தனக்கு சவால் விட்ட பச்சோந்தி அரசியல் கட்சிக்கு எதிரே தானும்,தன்னுடைய வேட்பாலார்களையும் நிறுத்தினார்..நின்றார் .தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தனது கட்சியை உயர்த்தி காட்டினார்.


மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றிருந்த ,கருப்பு சால்வை அணிந்து மிக மிடுக்காக தமிழ் பேசி வந்த மறுமலர்ச்சி தலைவர் ,'சகோதரியே ' என்று எடுத்த நிலைபாட்டின் காரணத்தால் இன்றைய தேதியில் அவருடைய கட்சியில் உள்ளவர்களுக்கும் அவருக்கும் செல்லும் வழி ஏதும் தெரியவில்லை எனலாம்!


சூது நிறைந்த அரசியல் களத்தில் ,ஒருவனை வீழ்த்தி,ஒருவன் முன்னேற நினைப்பது யாருக்காக ?? மக்களுக்காகவா??.

அத்தகைய அரசியல் வாதிகள் தங்களின்சுயனலத்திற்கென்றே இதனை செய்கிறார்கள் என்பதே உண்மை.!!

திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல முடிவினை எடுக்கும்பட்சத்தில் இன்றில்லாவிட்டாலும் நாளைய மாற்றாக இருப்பார் என்பதில் உண்மை உண்டு. அதனாலேயே பெரிய கட்சிகள் அவருக்கு வலை வீசி பார்க்கின்றன
திரு.விஜயகாந்த் அவர்கள் இதுவரை வேறு மொழி படங்களில் நடிக்காதவர் ,தமிழில் மட்டுமே நடித்தவர்.!!
அய்யா என்றோ..! சகோதரியே என்றோ இவர் செல்லும்பட்சத்தில்மக்களின் நன்மதிப்பு இவருக்கு இல்லாமல் போய் விடும். எனினும் கட்சி நடத்த பணம் வேண்டும் கொள்கை வேண்டாம் என்று நினைத்தால் இவரும் பல கோடிகளை பார்க்கலாம்.!!


ஜாதியின் பெயரால் கட்சி நடத்துவோரை...
பச்சோந்தி அரசியல் வாதிகளை, எனக்கு இவளவு சீட்டு கொடு எனக்கு கொள்கைகள்,கோட் பாடுகள் தேவை இல்லை என்போரை...
மொழி,உணர்வு,திராவிடம்,கொள்கை,கோட்பாடு என்று நாவன்மையால் பேசி மக்களை மனநலம் குன்றிய மறதி வாதிகள் என நினைபோரை ..
தயவு செய்து வாக்களித்து மீண்டும் நாம் ellorum வெற்றி பெற செய்ய வேண்டாம் !!


தள்ளாத வயதிலும் பதவியை கெட்டியாக பிடித்து கொண்டு உலா வரும் அரசியல் வாதிகள் இல்லாத புதிய இந்தியா நாளைய விடியலில் உருவாகட்டும்!!
சுய நல அரசியலை இனம் காணுங்கள்..!

ஜாதியின் பெயரால் அரசியல் நடத்துவோரை இனம் காணுங்கள்..

மரம் விட்டு மரம் தாண்டும் குரங்கு போல் கொள்கை ஏதும் இல்லாமல் கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல் வாதிகளை இனம் காணுங்கள்..!
பச்சோந்தி அரசியல் வாதிகளை,நாவன்மையால் பேசி சுய நல அரசியல் வாதிகளை தயவு செய்து வாக்களித்து மீண்டும் நாம் வெற்றி பெற செய்ய வேண்டாம் !!

கருத்துகள் இல்லை: