
முடிவற்ற ஒரு நீண்ட பயணத்தின் இடையில் நீங்கள் யார் என்றும் ,நான் யார் என்றும் உங்களுக்கு இப்பொழுது தெரிந்து விடும் !.நான் பலமுறை இறந்திருக்கிறேன் ..ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் கொண்டுவரபட்டிருகிறேன் , நீங்களும் அவ்வாறே பலமுறை இறந்திருக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும் கொண்டு வரபட்டிருக்கிறீர்கள் !
நீங்கள் பிறப்பதற்கு முன் எங்கிருந்தீர்கள் ? தாயிடமா? தந்தையிடமா? உண்மையில் நீங்களும் , நானும் மட்டற்று பரவி நிற்கிறோம் . தந்தையும் தாயும் நம்முடைய பௌதிக உடலுக்கு வடிவம் கொடுத்தார்கள் !.தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்து நாதமும் நம்மை பௌதிக உடலுக்கு வடிவத்தை மட்டுமே நல்கியது.
அதிகாலையில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களை காணும் போதும் ,கோயில் குளக்கரை படிகளிலும், தீண்டி செல்லும் குளிர் தென்றலை உணரும் போதும், மழைக்கு பின் எழும் மண் வாசனையிலும் இவற்றையெல்லாம் நீங்கள் கண்டும், கேட்டும் உணரும் பொழுது என்றோ இவற்றை எல்லாம் நீங்கள் முன்பே கடந்து வந்திருப்பதாக உங்கள் உள் மனது சொல்லும்.
பல நூற்றாண்டுகளாக இவற்றை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள் என்பது உண்மை . ஒவ்வொரு முறை நீங்கள் கொண்டுவரப்ப்படும்போதும் இந்த நினைவுகளும், ஆசைகளும் உங்களுக்குள் தேங்கி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள் !
இன்னும் சற்று உற்று நோக்கினால் நீங்கள் இதுவன்று என்பதை உணர்வீர்கள் ..உங்களுடைய உண்மையான இயல்பு என்னவென்று உங்களுக்கு விளங்கி விடும் .உண்மையில் நீங்கள் இயற்கை எனும் மட்டற்ற சக்தியில் கலந்தே இருக்கிறீர்கள் !

பிறந்து சில மணி நேரங்களில் உங்களுக்கு சிரிக்க யார் கற்று கொடுத்தது ? அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது ? சற்றே சிந்தித்து பாருங்கள் !.கால்களை பின்னி கொண்டு தூங்குகிறீர்கள் உங்கள் தந்தையை போன்றோ,தாத்தனை போன்றோ !,இது எப்படி நிகழ்கிறது ?
உண்மையில் நீங்களும்,நானும் ,இன்னும் பிறரும் வழி வழியாக கொண்டு வரபடுகிறோம் என்பதே உண்மை .
பௌதிகமான இந்த உடலுக்கு பால்யம்,இளமை, முதுமை என பல வேடங்கள் புனயபடுகிறது. பின்பு அது கலைந்தும் போகிறது ,பின்பு வேறொரு பயணம்,வேறொரு வேடம் ...! நீங்கள் பலமுறை உலகத்தின் பார்வையில் இறந்து போகிறீர்கள் ...மீண்டும் மீண்டும் ஒவொரு முறையும் கொண்டு வரபடுகிறீர்கள் .

வானிலிரிந்து பல கோடி மழை தாரைகள் துளிகளாக பூமியை வந்தடைகிறது...மீண்டும் கடலில் கலந்து ..வான் வெளியை அடைகிறது , மீண்டு மழை துளிகளாக பூமியை அடைகின்றது, இந்த சுழற்சி பல யுகங்களாக நடந்து வருகின்றன!
உண்மையில் நீங்களும் நானும் அந்த மழைத்துளி போன்றவர்கள் தாம் மீண்டும் , மீண்டும் நாம் கொண்டு வரப்பட்டோம் ,கொண்டு வர படுவோம் !!.

முடிவற்ற இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் யார் என்றும், naan யார் என்றும் இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள் .அப்படி உணரும் போது உங்களுக்குள் மெல்லிய அமைதி படரும்..அதுவே உங்களுடைய உண்மையான இயல்பு,வடிவம்,ஆழ்ந்த அறிவு எல்லாம்..!
இந்த பயணம் தொடரும்..தொடர்ந்து நாம் பேசுவோம் !!