புதன், 28 ஜனவரி, 2009

நான் சொல்ல மறந்த நிகழ்வுகள் ...



வானம் முழுதும் சிதறி கிடக்கின்ற நட்சத்திரங்கள் பல யுகங்களாய் மாறாமல் இந்த பூமியை பார்த்து சிரித்தப்படி உள்ளன.நான் ஏழு வயதில் பார்த்த அதே வானம் இன்றைய என்னுடைய என்பது வயதிலும் அதே நிர்மல்யத்துடனும் ,தெளிவுடனும் உள்ளது.


ஏனோ விளங்கி கொள்ளமுடியாத ரகசியங்களை வானம் வைத்து கொண்டிருப்பதாக அந்த சின்னஞ்சிறு வயதில் எனக்கு பட்டது. கடந்து செல்கின்ற மேகங்கள் எங்கு செல்கின்றன ? என்பதை அறிந்து கொள்ள வானத்தை அண்ணாந்து பார்த்தபடி வெகு தூரம் நடந்தேன் ,கால் வலித்ததுதான் மிச்சம் !


அந்த நட்சத்திரங்கள் என்னை பார்த்து சிரிப்பது போல் அந்த சிறு வயதில் எனக்கு பட்டது .ஏழு வயது சிறுவனாக நானும் நட்சத்திரங்களை பார்த்து சிரித்தேன்


இன்றைய இந்த முதிய வயதில் மங்கி போன என்னுடைய பார்வையில் அந்த வானம் எப்போதும் போல் அதே நிர்மல்யத்துடனும் ,தெளிவுடனும் உள்ளது.நடுக்கமுறும் என்னுடைய முதிய கரங்களில் என்னுடைய நாட்குறிப்பின் இறுதி பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்கள் தீருமா அல்லது மை தீர்ந்து போகுமா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை





பல கோடையும்,குளிரும் இந்த வயது வரை நான் பார்த்தாகிவிட்டது .தந்தை,தாயின் மடியில் விளையாடிய அந்த இனிய காலங்கள் ...பருவத்தை போல் கடந்து போய் விட்டது .


வாழ்கையின் மேடு பள்ளங்களை கடந்து முச்சிரைக்க நான் ஓடி கொண்டிருந்தபோது .தந்தையும் தாயும் மறைந்து போனார்கள்.இனி என்ன என்று வானத்தை நான் அன்று அண்ணாந்து பார்த்த போது அன்றும் நட்சத்திரங்கள் என்னை பார்த்து சிரித்தன !!.






வாழ்கையின் ஜீவித போராட்டம் தொடர்ந்தது வயிற்று பசியில் உலகின் பொய் தோற்றம் என்னவென்று தெரிந்து போயிற்று ! சுவாசம் முட்டி நீரின் அடியில் அழுத்துவது போல் வாழ்கை என்னை உள்ளிழுக்க தொடங்கியது !நான் மேலே நீந்தி வர போராடினேன். உள்ளே முங்கி விடாமல் இருப்பதற்கு தொடர்ந்து நீந்தினேன் , முச்சிரைதேன் அதுவே வாழ்க்கை என்று அநேகம் பேருக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் அந்த வானத்து நட்சத்திரங்கள் மட்டும் வழக்கம் போல் பூமியை பார்த்து சிரித்தப்படி இருந்தது !
மனைவி பிள்ளைகள் என்று தனியாக இருந்த எனக்கு உறவுகள் ஏற்ப்பட்டன ..மீண்டும் ஜீவித போராட்டம் தொடர்ந்தது..ஒரு மாலை வேளையில் என்னுடைய பிள்ளையை தேடி நான் மாடிமீது வந்தேன் .அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தபடி இருந்தான்.வெகு தூரத்தில் வானம் ,நிர்மல்யமாகவும்,தெளிவுடனும் இருந்தது. "மேகங்கள் எங்கு போகின்றன அப்பா ?" ஏழு வயது சிறுவனாக என்னை பார்த்து அவன் கேட்டான் !
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் வானத்தை அண்ணாந்து பார்த்தேன் வானத்து நட்சத்திரங்கள் எங்கள் இருவரை பார்த்தும் அன்று சிரித்தது.




கோடையும், குளிரும் போல,மழையும்,வெயுலும் போல பருவங்கள் கடந்து போகின்றன பால்யம்,இளமை,முதுமை என வாழ்கையின் பருவங்கள் வந்து நிற்கின்றன





நடுக்கமுறும் என்னுடைய முதிய கரங்களில் என்னுடைய நாட்குறிப்பின் இறுதி பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்கள் தீருமா அல்லது மை தீர்ந்து போகுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.!!



3 கருத்துகள்:

ANU சொன்னது…

Roampa payanulla thohuppu..Valkaiyin eatharthathai kattukerathu..Eraivan padaippil vanam oru ragasiyamana ulaham.nanum athae 7 vayathil nenaithathundu..aendaravthu oru nalla aella natchathirankali aennikaiyai n thozhliku sollivda vendum aendru...

ANU சொன்னது…

Manam marukka mudiyatha yatharthamana unmai ungal intha thoguppu...aeankum n 7 vayathu nenaivuku kondu vantha arupathamana thohupu.kurippitu sollum padiya aentha linesum eillai aella varikalum meha arputhama ha ullathu...valthukal nanbarae..

ராஜ்குமார் சொன்னது…

Thanks Anu...If we Look Nature we will learn so manythings about our Life.All we need is to look more inside andwe find eternal peace and pleasure .

Thanks for your Views again..Keep reading