ஞாயிறு, 28 டிசம்பர், 2008

"பாகிஸ்தான்"-ஒரு நண்பன் பகைவனான கதை!


பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் இதயமாக இன்றைய பாகிஸ்தான் முன்பு விளங்கியது. ஆர்யர்களால்,பெர்ஷியர்களால்,அரபியர்களால், மங்க்கொளியர்களால், கிரேக்க மற்றும் ஆங்கிலேய படையெடுப்புகளையும் இப்பொழுதைய பாகிஸ்தான் அப்பொழுது கண்டது. இதன் காரணமாக பல கலாசார பரிமாற்றங்களும் அங்கு நிகழ்ந்தேறின .

இறுதியாக ஆங்கிலேய ஆளுகையில் இருந்தபோது (1858 முதல் 1947 வரை ) முகம்மது அலி ஜின்னா தலைமையில் இருந்த பாகிஸ்தான் இயக்கமும்,முஸ்லீம் லீகும் சேர்ந்த தனி பாகிஸ்தான் நாட்டை பெற்றன !.சிந்து,வட மேற்கு மாகாணங்கள்,மேற்கு பஞ்சாப் ,பலுசிஸ்தான் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகியவற்றை உள்ளடக்கிய நாடாகவும் இஸ்லாமிய குடியரசாக மலரது பாகிஸ்தான் .

பல சமஸ்தானங்களகாவும் ,அரசு பிரிவுகளகாவும் பிரிந்து கிடந்த இந்தியாவை..சர்தார் வல்லபாய் படேல் தனது முழு திறமையால் ஐய்நூற்றி அறுபத்தி ஐந்து சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்தார்.ஆனால் நேருவின் கருத்து மாறுபாட்டால் ஜம்மு காஷ்மிரை அவரால் இணைக்க முடியாமல் போனது.மதத்தின் பெயாரல் அப்பொழுது நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தானாகவும்,இந்தியாவாகவும் அங்கிலேயர்களால் ஒப்படைக்கப்பட்டது

ஆனால் ஜம்மு காஷ்மிரை மயமாக வைத்து மூன்று போர்களை இரு நாடுகளும் சந்தித்தன .பாகிஸ்தான் என்பதற்கு துய்மையின் நிலம் என்று ஒரு ஆர்த்தமும்
பஞ்சாப்.ஆப்கான்,காஷ்மீர்,சிந்து,பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளின் முதல் எழுத்துகளும் இணைந்த புதிய நாடாகவும் அறிவிக்கப்பட்டது !

1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு பாகிஸ்தான். இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.


அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடிப்பு

கார்கில் போர் (Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும்.
இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர்.
இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.

போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது.
பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், இராணுவ புரட்சி செய்து பிரதமர் நவாஸ் செரிப்யை பதவியில் இருந்து அகற்றினார்.
கார்கில் போரில் உலக வரலாற்றில் முதலாம் தடவை இரண்டு அணு ஆயுதங்கள் பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.
பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார்.
இனிவரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . இவர் அமெரிக்கச் சார்ப்புக் கொள்கையை கையாண்டு வருகின்றார்

2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியை பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளை கொன்றார்.[1].
இருந்தாலும் அமெரிக்காவின் சொற்களுக்கு கட்டுப்பட்டும்,உள்நாட்டு கலகங்களை கையாண்டு அவ்வ்போது தனது குள்ளநரி தந்தாலும் தனக்கு எதிரான சதிகளை அடக்குவதில் வெற்றி கண்டார் எனலாம் !

2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.


பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.




வாகா எல்லையில் இரு நாட்டு படைகளின் கோடி ஏற்றும் நிகழ்ட்சி



tதற்பொழுதைய அதிபர் சர்தாரி..பெனஜிரின் கணவர் ஆவார் .இவருடைய ஆளும் திறன் விமர்சனங்களுக்கு உட்ப்பட்டு வருகிறது .
சயத் மக்தூம் யூசஃப் ரசா கிலானி பிறப்பு: ஜூன் 9, 1952, கராச்சி) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான இவர் 2008இல் மார்ச் 22 இல் பிரதமராகப் பரிந்துரைக்கப்பட்டு மார்ச் 25 இல் பாகிஸ்தான் பிரதமரானார்.
பாகிஸ்தான் சட்டமன்ற நடுவண் அரசில் அமைச்சராகவும் இருந்தவர்

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

மதம்,பொருளாதாரம்,எல்லை பிரச்சினைகள்,ஏழ்மை இவை எல்லாம் சேர்ந்து .... முன்பு ஒரு காலத்தில் நண்பர்களாய் இருந்த மக்களை இப்போது எதிரிகளாக நிறுத்தி பார்க்கிறது காலம்.