உலகம் கண்ட மிக கொடுர மனம் படைத்த சர்வாதிகாரிகள் பலர், எனினும் அவர்களில் மிக கோமாளித்தனமும் கொடுர மனது படைத்த உகாண்டாவின் இடி அமின் தாதா குறிப்பிடத்தக்கவன் .
இடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார்.
இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும்.
இடி அமின் ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு விவசாயின் மகனாக 1924 அல்லது 1925 இல் பிறந்தார்.தொடக்க கல்வி மட்டுமே பயின்ற இடி அமின் ,தாயால் வளர்க்கப்பட்டார் .
ஆயிரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ஆறில் ஒரு சாதரண உதவி சமையல் கரானாக ராணுவ பிரிவில் சேர்ந்த இடி அமின் ,பின்னர் படிப்படியாக் leftinant
ஆக பதவி பெற்றார் .
ஆக பதவி பெற்றார் .
ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ரெண்டில் உகாண்டா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது .பின்னர் நடந்த சம்பவங்கள் உலக வரலாற்றில் ரத்தத்தில் எழுதப்பட்டன !
ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ஆறில் மேஜர் ஜெனரல் ஆக
ஒபோடே அராசால் நியமிக்கப்பட்டார் இடி அமின் .பின்னர் இருவரும் சேர்ந்து உகாண்டாவை அழிவின் பாதையில் கொண்டு செல்ல தொடங்கினர்
ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ஒன்றில் ஒபோடே அரசை தனது ராணுவ பலத்தால் முற்றுகையிட்டு ,இடி அமின் சர்வதிகாரியாக உகண்டாவின் ஆயுட்கால அதிபராக தன்னை அறிவித்து கொண்டார்!!
வெள்ளையர்களை தனது பல்லக்கு சிப்பந்திகலகவும்,குடை பிடிக்க வைத்த இடி அமின் தனது ஹீரோ இமேஜ் ஐ கறுப்பின மக்களிடையே தக்க வைத்து கொண்டான்.(பார்க்க மேலே உள்ள படம்.)
ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ரெண்டில் தனது கனவில் கடவுள் தோன்றியதாகவும்.."உகாண்டா ஒரு கறுப்பர் நாடு எனவும் அதில் உள்ள ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்களும் ,பாகிஸ்தானியர்களும் உடனே நாட்டை விட்டு ஓட வேண்டும்" என்று கூறினார் .தொண்ணூறு நாட்கள் கெடுவிதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்
ஈவு இரக்கமற்று ஒபோடே வின் ஆதரவாளர்களையும் தன்னை எதிர்க்கும் எல்லா கறுப்பின பிரிவையும் கொன்று குவிக்க தொடங்கினான் இடி அமின் .
அந்த ஆண்டு மட்டும் அவன் கொன்றவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திகும் அதிக மானவர்கள்!
அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டு..பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்து போட வேலை ஆட்கள் நியமிக்கப்பட்டனர் !
ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி எட்டில் உள்நாட்டு கலகங்களும், பொருளாதார பிரச்சினைகளும் உகாண்டாவில் தலைவிரித்து ஆட தொடங்கியது..அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியா மீது போர் தொடுத்தான் இடி அமின்
தான்சானியா மற்றும் உள் நாட்டு கலக படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல்...இடி அமின் லிபியாவில் தஞ்சம் புகுதான்..பின்னர் அங்கேயும் எதிர்ப்பு வலுக்கவே சில காலம் இராக்கில் வாழ்ந்தான் .
அவனுக்கு ஏறக்குறைய நாற்பது பிள்ளைகளும் நான்கு மனைவிமார்களும் இருந்த்தாதாக தகவல்
அதே ஆண்டு சவூதி அரசு அவனுக்கு அடைகலம் அளித்து இந்திய மதிப்பில் மாதம் நாற்பது ஆயிரம் உதவிதொகையும்,வீடும்,கார்,மற்றும் பணியாட்களையும் கொடுத்துது !
பதினைந்து ஆண்டுகள் சவூதி அரேபியாவில் இடி அமின் வாழ்ந்தான்..தான் மிகவும் சந்தோழமாக இருப்பதாகவும்..தான் எதற்கும் வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்றும் கூறிய இடி அமின்.. தனக்கு மீன் பிடிப்பதும்,ஆர்மோனியம் வாசிப்பதிலும், குரான் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் என்றும்..தான் அதிபாராக இருந்த பொது பெற்ற சந்தொழத்தை விட சவுதியில் மிகுந்த மகிழ்ட்சியோடு இருப்பதாக உகாண்டாவின் பத்தரிக்கைக்கு பேட்டி கொடுத்தான் இடி அமின்
2003 இல் சவூதி அரேபியாவில் கோமா நிலையில் இருந்து ரத்த அழுத்தலும், சிறு நீரக கோளாறாலும் பாதிக்கப்பட்டு இடி அமின் இறந்தார்.
அவர் உயிரோடு வந்தால் சிறையில் அடைக்கபடுவார் என்று உகாண்டாவின் அப்போதைய அதிபர் அறிவித்தார்..இறந்த உடல் வந்தால் ஒரு சாதரன உகாண்டா மனிதனை போல அடக்கம் செய்ய அனுமதிக்க படுவர் என்றும் தெரிவித்தார்.
ஆயினும் அவர் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டார் இடி அமின்!