வியாழன், 1 ஜனவரி, 2009

கிருபானந்த வாரியார்- நினைவில் நிற்கும் பெரியோர்கள்!!

எண்ணற்ற ஆன்றோர்களை ,சான்றோர்களை தமிழ் நாடு இந்த உலகிற்கு தந்துள்ளது எனினும் அவர்களில் வெகு சிலரே பாமரரும் ,சாமான்யரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தொண்டாற்றியாவர்கள் . அவர்களில் முதன்மையானவாராக சென்ற நூற்றாண்டில் தொண்டாற்றிய திரு முருக கிருபானந்த வாரியார் விளங்குகிறார்.

உடலெல்லாம் திரு நீறு பூசி ,மலர்ந்த முகத்தில் மந்தகாச புன்னகையோடு,மடை திறந்த வெள்ளம் போல் தமிழென்னும் அமுதத்தை எல்லோருக்கும் அள்ளி வழங்கும் ஒப்பற்ற திறனை வாரியார் சுவாமிகள் இளம் பருவத்திலிருந்தே பெற்றிருந்தார் .

வாரியார் சுவாமிகள் எந்த பள்ளியிலும் பயிலாதவார் .தன்னுடைய தந்தையிடத்திளிருதே அவர் அடிப்படை கல்வி மற்றும் , உபதேசங்களையும், இசை பயிற்சியையும் பெற்றார்.வாரியார் சுவாமிகள் வாழ்கை தனி மனித ஒழுக்கத்தையும்,தமிழ் கடவுளாம் முருக பெருமானின் மீது கொண்ட அளப்பரிய பக்தியையும்,தமிழ் மீது கொண்ட ஒப்பட்ட்ற நேசத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது .அண்ணலின் வாழ்க்கையையும் தொண்டுகளையும் இந்த சிறிய படைப்பு உங்களின் பார்வைக்கு ,கருத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) பாலாற்றின் கரையல் உள்ள காங்கேயநல்லூர் என்னும் ஊரில் அவதரித்தார்,
அவருடைய பெற்றோர் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர்.
ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார்.

கிருபானந்த வாரி என்பது முருக பெருமானின் பெயர்களில் ஒன்று !.அதனையே மல்லயதாஸர் தன்னுடைய பிள்ளைக்கு சூட்டினார் .தீவிர முருக பக்தரான வாரியார் அனுதினமும் முருக வழிபாட்டில் ஈடுப்பட்டு பிரகாசித்தார் .
இவர் காலையில் எதுவும் உண்ணாமல் இரவில் கொஞ்சம் பால்கலந்த கோதுமைக் கஞ்சியை அருந்தி வந்தார். இறுதிவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.

தமிழ் வருடங்கள் அறுபதினையும் அடிமாறாமல் உணர்ச்சியோடு ஒரே மூச்சில் அழகுறச் சொல்லும் திறன் பெற்றிருந்தார்.


அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழை பாட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்த பெருமை வாரியார் சுவாமிகளையே சேரும்.தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களை புனரமைத்து கும்பாபிழேகம் செய்து வைத்த பெருமையும் வாரியார் சாமிகளுக்கே உரியது

வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாளில் பற்பல விரதங்களை கடைப்பிடித்தவர். விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள்!

திருப்புகழின் மீது கொண்ட அளவட்ட்ற ஆர்வத்தால் வாரியார் சுவாமிகள் அவற்றை விளக்கும் திறன் மற்ற சான்றோர்களை காட்டிலும் மாருப்படிருந்தது.
அருணகிரி நாதர் பெண்ணாசையால் பாதை தவறி ,தொழு நோயால் பீடிக்கப்பட்டு மனம் நொந்து தன்னுடைய உயிரை மைத்துகொள்ள துணிந்த போது, முருக பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார்.
அதுவரை சாதரண பெண் பித்தனாக இருந்த அருணகிரி திருப்புகழை இயற்றி கவி பாடும் வல்லமை பெற்றார்.(பார்க்க மேலே உள்ள சித்திரம் )

சர்க்கரை இல்லையானால் அங்கு எறும்பு வராது. ஆசையான சர்க்கரை இருந்தால் துன்பங்களான எறும்புகள் வந்து சேரும் என்றார் வாரியார் சுவாமிகள் .பல நல்லுபதேசங்களையும் ,தனி மனித ஒழுக்கத்தையும் எடுத்துரைத்த வாரியார் சுவாமிகள் அதன் படி வாழ்ந்தும் காட்டினார்!.தன்னுடைய enbatthi ezhaam vayathil iraivanodu irandara vimamna payanatthil irukkum pothe kalanthaar
கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம்(உண்ணா நோன்பு) இருப்பார். இவ்விரதத்தை கடைப்பிடிக்குமாறு தன்னை சார்ந்தவர்களுக்கும் அறிவுறுத்துவார்.
இந்திய அரசு அவருடைய பிறந்த நூற்றாண்டு நினைவாக இராண்டாயிரதி ஆறாம் ஆண்டு சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமை padutthiyathu