வாழ்க்கை வரலாறு
ஹொனலுலுவில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதலாக சந்தித்த கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமா சீனியர், கேன்சஸ் மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன ஆன் டன்ஹமுக்கு பிறந்தார் பராக் ஒபாமா[1].
இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்[2]. பின்னர் ஆன் டன்ஹம் இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ சுட்டோரோவை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை ஜகார்த்தாவில் வசித்தார்.
ஐந்தாவது படிப்பதற்கு முன்பு 1971இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து 1982இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார்.
தாயார் ஆன் டன்ஹம் 1995இல் சூலகப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2008இல் நவம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்.
உயர்பள்ளியில் பட்டம் பெற்று லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு நகர்ந்து ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி 1983இல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
நியூயார்க் நகரிலேயே இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து வணிக பன்னாட்டு நிறுவனம், நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்
நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன
1988இல் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார்[6].
இதனால் 1991இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார்[7]
இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001)
குடும்பமும் வாழக்கையும்
1989இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர். அவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார்[
இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார்[49]. ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் கென்யர்கள், இந்தோனேசியர்கள், வெள்ளை இன அமெரிக்கர்கள், மற்றும் சீனர்கள் உள்ளனர்[50]. தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர்.
இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை டோனி ரெஸ்கோ என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார்[52]. 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது[53].
உயர்பள்ளியில் கூடைப்பந்தாட்டம் விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்[54]. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு சிகரெட்டு பிடிப்பதை நிறுத்தியுள்ளார்
ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் முஸ்லிமாக வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே நாத்திகர்களாக நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார் என்று கூறுகிறார்