மனம் பதைக்க செய்யும் அந்த காட்சியை சன் டிவி யிலும் ஜெயா டிவி யிலும் கண்டபோது சட்டம் பயிலும் மாணவர்களும் ,சட்டத்தை காப்பதாக கூறும் காவல் துறையும் மிக மிக கேவலமாக சமுகத்தின் முன்னாள் தங்களை அடையாளம் காட்டியுள்ளார்கள் .
மாணவர்கள் என்று இவர்களை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் !.சட்டத்தை பாடமாக கொண்டவர்கள் சட்டத்தை மீறுவதை .சட்டம் ஒழுங்கு காக்கின்ற காவல் துறை ஆண்மை அற்று வேடிக்கை பார்ப்பது சமுததிற்கு கேவலம்.அதை அழுகின்ற அரசும் திரநியற்றே உள்ளது உண்மைஎநலம்
நமது நாட்டின் சட்டதிட்டங்கள் அளவற்ற சுதந்திரத்தை அழிப்பது இத்தகைய காட்டுமிராண்டிதனகளுக்கு உதவ கூடியதாகவும் ஊக்கம் அளிக்க கூடியதாகவும் உள்ளது .சட்டத்தை மீருகிறவர்களுக்கு உடனே தண்டனை அளிக்கின்ற நடைமுறைகள் கொண்டுவரப்படவேண்டும்
சவூதி அரேபியா ,சிங்கப்பூர்,மலேய்சியா,சீனா போன்ற நாடுகள் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க ஒரு போதும் தயங்குவதில்லை.இந்தியாவில்தான் மேல் கோர்ட்டு ,கீழ் கோர்ட்டு, பெஞ்சு ,வாய்தா என பல சலுகைகள் !!.
மாணவர்கள் ஒரு தவறான முன்மாதிரியை ஊடகங்களிளிருதும் பெற்று கொள்கிறார்கள் அதில் சினிமாவின் பங்கு மிக அதிகம்.ஹீரோ சட்டத்தை கையிலெடுத்து அதிரடிகளை செய்வதை நமது இளைய சமுதாயமும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சற்றும் முதிர்ச்சியோ,பொருமயையோ,பொறுப்போ இன்றி இந்த நாட்டின் புதிய சமுக நோயை பரவசெய்துள்ளனர் !
இவற்றைஎல்லாம் வேடிக்கை பார்க்கும் காவல்துறையின் மீதும் ,அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்போதொடு மட்டுமின்றி தங்களுடைய வாழ்கை நிலையின் மீதும் நிச்சய்யமற்ற தன்மையில் உறைந்துபோய் உள்ளார்கள் .