திங்கள், 12 அக்டோபர், 2009

மரணம் என்றொரு போதி மரம் !!!


பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என்றொரு மிக அர்த்தம் பொதிந்த வார்த்தையால் நாம் அடக்கிவிடுகிறோம் .மண்ணில் முளைத்ததெல்லாம் மீண்டும் மண்ணுக்கே சென்று ஒன்றென கலந்து விடுகிற விந்தையை,ஒரு சுழற்சியை பெரும்பாலோர் யாரும் வாழுகின்ற காலத்தில் அவ்வளாவை நுணுகி ஆராய்ந்து பார்த்ததில்லை எனலாம் !.



போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் முச்சு முட்ட நாம் ஓடி கொண்டே இருக்கின்றோம் ! கல்வி,திருமணம்,பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால திட்டங்கள் என பல வித தேடல்களில் நாம் பிறழ்ந்து பொய் எதையோ தேடி கொண்டிருக்கிறோம்,


நிறைந்த பணம் சேர்தவனும், அழுக்கு ஆடை தரித்த பிச்சை காரனும் இறுதியில் ஒரே இடத்திற்கே இறுதியில் சென்று சேர்கிறார்கள் .நிலம்,தோப்பு,வீடுகள்,தொழில் என பலதரப்பட்ட செல்வத்தை குவித்து விட்டு உப்பில்லாத உணவும்,நோயுற்று படுக்கையில்,உணர்வற்று அடங்கி கிடப்போர் இறுதியில் கொண்டு செல்வது எதனை?


மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம் !!.மரணத்தை குறித்து நன்கு அறிந்தவன்,அதை எதிர் கொள்ள தயங்காதவன் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவனாகி விடுகிறான்.






இருபத்தி ஆறு வயதில் ஐ.எ.எஸ் கனவுகளோடு இருந்த ஒரு இளைஞ்சன் காய்ச்சல் என்று சோதனைக்கு சென்ற போது ,புற்று நோய் இருப்பதாக அறிந்து அந்த நொடியில் அவனுடைய வாழ்க்கை எதை உணர்த்தி இருக்கும்?
ஒரு மாத கை குழந்தையை தவிக்க விட்டு மரணம் ஒரு தாய்க்கு எதனை சொன்னது?
மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம்! அதை நன்கு உணர்ந்தவனும்,சிந்திதவனும் என்றும் வாழ்ந்தபடி உள்ளான்

6 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

இதன் அர்த்தம் புரியாமல் ஆடுபவர்கள் பலர். அருமையான கட்டுரை! வாழ்த்துக்கள்!

உங்கள் ராட் மாதவ் சொன்னது…

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

பெயரில்லா சொன்னது…

итак: превосходно.. а82ч

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

vazhgaganesan சொன்னது…

maranatthai nesi

பெயரில்லா சொன்னது…

maranatthai nesi