உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறது அப்போதெல்லாம் மனிதர்கள் உரக்க சொல்லி கொள்வது "கலிகாலம் முத்திபோய் விட்டது "என்பதுதான்.மனித வாழ்க்கை முற்றிலுமாய் தேய்ந்து போய் அதனுடைய அழகிய வடிவம் மறைந்து குருரமம் , அருவருப்பும் வெளிப்படுத்தும் ஒரு இருள் நிறைந்த காலத்தில் நாம் இருக்கிறோம் அதைத்தான் கலிகாலம் என்று கிராமத்து பெரியவர்களும் ,படித்தவனும்,படிக்காதவனும் புலம்பி நிற்க செய்கிறது எனலாம்
அகோர வெளிப்பாடுகள் இந்த நில உலகில் மனித பிறவிகளால் அரங்கேற்றப்படுகிறது.இனபடுகொலை ஒரு பக்கம் மலரும் மொட்டுக்கலலேல்லாம் அழிக்கப்படுகிறது,பதுங்கு குழியில் வாழ்கையின் பாடம் கற்று கொடுக்க படுகிறது.வாழ்க்கை இன்னதென்று விளங்கி கொள்ள இயலாத ஒரு பருவத்தில்,கனவெல்லாம் தோட்டாக்களின் சத்தமும்,ரத்த வாடையும்,அலறல் ஒலிகளும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை மனதளவில் ஊனமாக்கி வந்ததை சர்வதேச உலகம் வேடிக்கை பார்த்தது .
உறவுகள் இன்றி அனாதைகள் ஆன எத்தனையோ மனித ஜீவன்கள் ஊமையாய் கதறும் ஒலிகளுக்கு இடையே உலகம் கள் குடித்த குரங்காய் கும்மாளித்து கூத்தாடுவதை கலிகாலம் என்று சொல்லாமால் வேறு என்ன சொல்வது !!
ஒரு ஜனநாயக நாட்டை அதன் பிரஜைகளை எங்கிரோந்தோ வந்து சர்வசாதரணமாக ஒரு தீவீரவாத கும்பல் சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளுகிறது. அதை அரசாங்கம் முன்கூட்டியே தடுக்க திராணியில்லாமல் வேடிக்கை பார்த்து கொள்கிறது.கொலை செய்தவனோடு கொஞ்சி கொண்டு வழக்கு விசாரணையில் காலத்தை கடத்துகிறது
நண்பர்கள் ,நட்பு போன்ற வார்த்தைகள் அர்த்தம் அற்று துரோகமும்,வஞ்சகமும் வெளிப்படும் காலம் கலிகாலமாகி விட்டது.
ஊடகங்களால் சிதைக்கப்படுகிறது இளையவர்களின் மனம்,வாழ்கையை தொடங்கும் வயதில் சகல அழுக்கிலும் கறைபட்டு போகிறது அவர்களின் மனம்
பெற்ற தாயையும் தந்தையையும் சொத்துக்காக கொன்று போடும் பிள்ளைகள்,!!
கணவன் உறங்கும் பொது மனைவி கொன்று போடுகிறாள்,!!
எல்லாவற்றிலும் லஞ்சம் ,!!
பணத்திற்காக எதையும் செய்ய துணியும் குருர புத்தி !!
கற்பு ,பெண்மை ஒழுக்கம் இவையெல்லாம் இரவு நடன ,மது கேளிக்கையில் ஒழித்து போடும் இளைஞர் கூட்டம்,!!

தந்தை மகளை கற்பழிக்கிறான் !!,
பெற்ற தாயையும் தந்தையையும் சொத்துக்காக கொன்று போடும் பிள்ளைகள்,!!
கணவன் உறங்கும் பொது மனைவி கொன்று போடுகிறாள்,!!
எல்லாவற்றிலும் லஞ்சம் ,!!
பணத்திற்காக எதையும் செய்ய துணியும் குருர புத்தி !!
கற்பு ,பெண்மை ஒழுக்கம் இவையெல்லாம் இரவு நடன ,மது கேளிக்கையில் ஒழித்து போடும் இளைஞர் கூட்டம்,!!
எல்லைகளை தாண்டி படிக்கும் வயதில் பிள்ளை பெற்றெடுக்கும் சிறுமிகள்,!!
தர்மத்தை அதர்மம் வெல்லும் என்று மாற்றி எழுத இதனால் முடியுமோ ? என்று அச்சம் கொள்ளக்கூடிய காலம் இந்த கலிகாலம் !!
4 கருத்துகள்:
கணவன் உறங்கும் பொது மனைவி கொன்று போடுகிறாள்,!!
உங்கள் கருத்து உண்மை... காலம் கலிகாலம் ஆகிவிட்டது!
கணவனை கொன்று போட்டாலூம் பரவாயில்லை 498ஏ என்னும் வரதட்சணை வழக்கைப்போட்டு அப்பாவி தாய்தந்தையர்களை சிறையில் அடைத்து கொடுமைசெய்து அவர்களை கோம நிலையில் அலையவிடும் கெடுமதிப்பெண்கள் கூட்டம் நாட்டில் பெருகி வருகின்றது...
தங்களது கருத்துக்கள் மிகவும் உண்மையானது...
இப்போதே இப்படி என்றால், இனிக் காலம் செல்லச் செல்ல என்ன நடைபெறும்?
நினைக்கும் போதே கவலையாக உள்ளது
Singapore Mouthayen MATHIVOLI, "Eppadi iruntha manushan ippadi aayittan" Ennatha solla.
நம்மள மாதிரி சில பேர் தான் இப்படி பேசி பேசி பைத்தியமாய் திரியனும் .
கருத்துரையிடுக