இந்த பிரபஞ்சத்தில் ஓயாமல் சுத்துகின்ற கோள்களும்,பூமிக்கு ஒளியாய் விளங்கும் சந்திரனும்,சூரியனும் ,பல கோடி நட்சத்திரங்களும் .அடர்ந்த காடுகளில் ,ஆழ் கடலில் உயிர் வாழும் ஜீவராசிகளையும், நிலம் ,காற்று,நீர்,ஆகாயம்,நெருப்பு என பஞ்ச பூதங்களின் சமநிலைகளையும் ஆட்கொண்டு..ஆண், பெண் என்று எனது சாயலில் உங்களை படைத்திட்ட ஆண்டவனாகிய நான்.... இந்த கணம் உங்களிடத்தில் பேசுகிறேன் .!!
உங்களை சுற்றி நான் படைத்திட்ட சகலத்திலுமிரிந்து மனிதர்களாகிய நீங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்!.
சிந்திக்கின்ற சக்தியை நான் உங்களுக்கு அளித்தாதால் நீங்கள் இந்த பூமியையும் தாண்டி பிரபஞ்சத்தை ஆராய்கிறீர்கள் ,நிலவுக்கும்,செவ்வாய்க்கும் வந்து போக ஆராய்கிறீர்கள் !
நான் உங்களுக்கு சிந்திக்கின்ற சக்தியை அளித்தேன் நீங்கள் என்னட்ட்ற விழயங்களை உண்டாக்கி கொண்டீர்கள் . வாய்மை ,தர்மம்,அஞ்சாமை,ஆண்மை,பெண்மை,அன்பு,பாசம்,கருணை,உதவி தாய்மை,காதல்,கனிமை என்று எனது பல ரூபங்களை நீங்கள் உணரவும் ,வெளிபடுத்தவும் செய்கிறீகள் !.
உள் முகமாய் தேடி என்னை நோக்கி வருகின்றவனுக்கு எனது ரூபத்தின் கீற்றை வெளிபடுதுகிறேன்.சகலத்திலும் படிந்து நிற்கின்ற என்னை நீங்கள் பிரித்துணர முடியாது!.என்னை உருவங்களில் காணுகின்றவனுக்கு உருவமாகவும் !எல்லயட்ட்ற பிரபஞ்சத்தின் ஒலி நிறைந்த வெற்றிடமாக கருதுபவர்களுக்கு வெற்றிடமாகவும் நான் காட்சி தருகிறேன்.
உங்கள் மனதில் ஒலிக்கின்ற எனது குரல் ஒலித்த படி உள்ளது ,எனினும் புற சத்தத்தில் நீங்கள் மெய் மறந்து உள்ள படியால் என்னுடைய குரல் மிக சன்னமாகி போகிறது.!!
என்னை நீங்கள் கருணை மிக்கவனாக கருதுகின்ற அதே நேரத்தில்...உங்களில் ஒரு சாராருக்கு இறக்க மற்ற அநியாய காரனாக நான் தூற்ற படுகிறேன்.செல்வமும்,செழிப்பும்,வேண்டுவதெல்லாம் நீங்கள் பெரும் போது என்னை நீங்கள் புகழ்கிறீர்கள்!
வறுமை,நோய்,இயற்க்கை சீற்றம் ,மரணம் இவைகள் உங்கள் முன் வரும் போது என்னை கடுமையாக நிந்திகிறீர்கள்.!!
உண்மையில் உங்களிடத்தில் இருந்து எதனையும் நான் பறிக்கவில்லை,பறித்ததாக இந்த தருணத்தில் நீங்கள் உணர்ந்ததெல்லாம் ,மீண்டும் உங்கள் வாசல் தேடி வரும்!.அப்போது நீங்கள் வேறு ரூபத்தின் கீற்றாக இருப்பிர்கள்.!! அவ்வளவே.
இந்த பிறவியில் சொல்லேன துயரம் உங்களை துரத்தும் போது நான் இறக்கமட்ட்ற கல் நெஞ்சகாரனாக உங்களால் தூழிக்க பட்டாலும் ...வழி,வழியாக முன்பும்,பின்பும் நான் மிக கருணை மிக்கவனாக உங்களால் புகழபட்டுள்ளேன் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
என்னுடைய சாயலில் நீங்கள் இருப்பதால், என்னுடைய எல்லயட்ட்ற சக்திகளின் சாயலையும் உங்களால் வெளிபடுத்த இயலும் என்பதை நீங்கள் பல முறை வெளிப்படுத்தி விட்டிர்கள்.!!
அறிவு,நம்பிக்கை,முயற்சி என சிந்தனையின் அடிப்படை தூண்டுதல் கலீல் பல ஆய்வுகளை நீங்கள் மேற்கொண்டு உள்ளிர்கள்.அவற்றில் நான் இருகிறேனா இல்லையா என்பதும் ஒன்று!
என்றேனும் உங்களுக்கு வழங்கப்பட்ட இந்த தருணத்தை உணர்ந்திருக்கிறீர்களா?? உடை உடுத்தி இருக்கிறீர்கள்,உங்களை அழகு படுத்தி கொள்கிறீர்கள்,ஹாஸ்யம் கேட்டு சிரிக்கீரிர்கள் ,ஆலயம் சென்று வழிபடுகிறீர்கள்....இன்னும் பல .
உண்மையில் யோசித்து பாருங்கள் காட்டில் உலாவும் மிருகங்களை காட்டிலும் ..அபுதமான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்தது எது?
சம நிலை தவறும் போது நான் இறக்க மற்றவனாக உங்களால் தூற்றபடுகின்ற நான்.விபத்துக்களில், இயற்கை சீற்றங்களில் உங்களுடைய உறவுகளை,உடமைகளை இழக்கும் போது கண்னற்றவனாக,கல் நெஞ்சகாரனாக
என்னை நீங்கள் சபிக்கும் போது உங்களின் அறியாமை என்னை வருத்துகிறது.ஏனெனில் நீங்கள் என்னுடைய ரூப கீற்றுகளை தாங்கி உள்ளிர்கள்!
வறுமையில் உதவி தேடி வரும் போது..நீடித்த நோயிலிரிந்து சுக மடையும் போது,என்னுடைய இருப்பை நீங்கள் உணர்கிறீர்கள்.
உண்மையில் நான் எல்லா தருணத்திலும் உங்களோடு இருக்கிறேன்..என்னுடைய குரல் உங்களுக்குள் ஒலித்த படி உள்ளது, மரணமும்,பிறப்பும் ஒன்றென கருதும் என்னுடைய குரல் உங்களுக்குள் ஒலிக்கிறது,செல்வமும்,வறுமையும் கால நிலை போல் நிலையற்றது என்னும் என்னுடய விளக்கம் காட்சிகளாக உங்கள் முன் விரிகிறது.
அன்பினால் என்னை காணுங்கள்!
ஞானத்தினால் என்னை காணுங்கள்!
கருணையினால் என்னை காணுங்கள்!
தாய்மையில் என்னை காணுங்கள்!
கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பில் என்னை காணுங்கள்!
கடமையினால் என்னை காணுங்கள்!
வாய்மை,தர்மம்,அஞ்சாமை இவற்றில் என்னை காணுங்கள்!
சகலத்தையும் உள்ளடக்கி உங்கள் மனதின் ஆழ்வெளியில் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்.உள் நோக்கி வாருங்கள் உங்களை நீங்கள் காணும் போது நான் யார் என்று உங்களுக்கு தெரியும் !!
சகலத்தையும் உள்ளடக்கி உங்கள் மனதின் ஆழ்வெளியில் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்.உள் நோக்கி வாருங்கள் உங்களை நீங்கள் காணும் போது நான் யார் என்று உங்களுக்கு தெரியும் !!
2 கருத்துகள்:
nan ungalai vanangugiran. neengal azuyhiulla ivai yavum unmai. andavan unmayil neril vandal yenna solvaro adahi appadiya solliyullirgal. mikka nanri.
kadavul kuriyathupol irundathu. nanri
கருத்துரையிடுக