கனவுகள் மெய்பட வாழ்க்கையில் பணம் மிக முக்கியமான ஒன்றாகி விடுகிறது.ஒவ்வொரு மனிதனும் செல்வந்தானாக வேண்டும் என்று விழைகிறான்.குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஒரே ஒரு நேர்வழியாக அயல் நாட்டு வாழ்கையை அவன் தேர்ந்தெடுக்கிறான். பாரின் வாழ்க்கையில் அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?.இவற்றை யதார்த்தமாய் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.
சிறு வயதில் வானத்தை அண்ணாந்து பார்த்து சிறு குருவி போல் கடந்து செல்லும் விமானங்களை அதிசயமாக நாம் பார்த்ததுண்டு. அப்போதைக்கு அது எங்கு செல்கிறது ? ஏன் செல்கிறது நாம் யோசிப்பதில்லை,சிறு வயதில் நாம் அதனை வியப்போடு பார்க்க மட்டுமே செய்கிறோம்.
நாம் வளர்கிறோம் ,படிக்கிறோம்,கனவுகளும் நம்மோடு சேர்ந்து வளர்கிறது.வாழ்கையின் அடிப்படை தேவைகளுக்கு கூட கடின படும் எண்ணிலடங்காத குடும்பங்கள் இருக்கின்றன.செய்து முடிக்கவேண்டிய கடமைகள் கனவுகளை காட்டிலும் அதிகமாகி போகிறது.!
தங்கையின் திருமணம்...
படிக்க வாங்கிய கடன்...
விளையாத பூமி....
அப்பாவின் மருத்துவ செலவு...
ஏழ்மையில் உதாசின படுத்தும் சுற்றம்....
கட்டி முடிக்க வேண்டிய வீடு.....
இன்னும் இப்படி பல அயல் நாடு நோக்கி படை எடுப்போரின் பின்புல காரணங்கள் நீண்டு போகிறது.
அற்புதமான தனது தாய் நாட்டை ,அதன் கலாச்சாரத்தை கடந்து ,சொந்தம் ,பந்த பாசங்கள் மறந்து ,அடைய வேண்டிய உலக பூர்வமான இலக்குகளுக்காக ஒரு பயணம் ஆரம்பிக்கிறது.
படித்தவன், படிக்காதவன் எல்லோரும் இந்த எதிர் நீச்சலுக்கு தயாராகிறார்கள்.மிக சாதாரன கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட தங்களுடைய உடல் உழைப்பை நம்பி வளைகுடா நாடுகளில் பணம் ஈட்ட செல்கிறார்கள்.
உண்மையான போராட்டம் அவர்களுடயதாகவே தெரிகிறது..பாஸ்போர்ட் எடுப்பது தொடங்கி..ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்கையை இழந்து திரும்பியவர்களும் , திரும்பாமல் அயல் மண்ணில் மறைந்து போனவர்களும் உண்டு.
மிக கடுமையான சீதோழன நிலைகள் வெயிலும் ,குளிரும் மிக உச்சத்தில் ...வயிற்றை நிரப்ப ஏதோ உணவு..மூர்க்க மான பல மனிதர்களை முதல் முறையாக காணுகின்ற எவரும் புதுமையான அந்த கற்றல் தேவைதானா? என எண்ணுவதில் வியப்பேதுமில்லை!
பறந்து விரிந்த பாலைவனங்களில்,ஓயாமல் இயங்கும் தொழிற்சாலைகளில்,சமையல் கூடங்களில், ஓட்டுனர் இருக்கையில்,மருத்துவ மனையில்,பெட்ரோல் பங்குகளில்,அலுவலகங்களில்,வணிக வளாகங்களில்,சாலையோர கடைகளில்......இப்படி எல்லா இடங்களிலும் கனவுகளை நெஞ்சில் சுமந்த படி ஒவ்வொரு மனிதனும், நெஞ்சில் நினைவுகளை அசை போட்டு கடமைகளுக்காக வாழ்கையை அடகு வைக்கிறார்கள்.
மாதா மாதம் அவரவருடைய சம்பள பணம் இந்தியா வந்தடைகிறது. காயும் செடிகளுக்கு தன்னிற் போல குடும்பம் தழைக்கிறது. அங்கு சுட்டெரிக்கும் வெயிலில் அவன் வாடும் போது அவனுடைய குடும்பம் குளுமையை உணர்கிறது.
பணம் சேர ,சேர ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் மனிதன் மனதளவிலும், உடல் அளவிலும் மாற்றங்களை பெறுகிறான்.நீடித்த தனிமை அவனை ஆரோக்கிய சிந்தனைகளிளிரிந்து தள்ளி வைக்கிறது. கடுமையான கால நிலைகள் அவனுடைய உடலில் நீரிழிவாகவும்,ரத்த அழுத்தமாகவும் மாறி உள்ளுக்குள் அமர்ந்து கொள்கிறது.
மனிதனுக்கு ஆசைகள் கட்டுக்குள் நிற்பதில்லை காலம் கூடினாலும் அவனுடைய புதிது புதிதான ஆசைகளும் கூடி போகிறது. வாழ்கை நீடித்த அடமானமாக அவன் வைத்து விடுகிறான்..அல்லது வைக்க நிர்பந்திக்க படுகிறான்.
பாளை வனமாக இருந்தாலும் பரவாயில்லை பாரின் வாழ்கையே சிறந்தது என அறை மனதோடு ஏற்க காரணம்? விடைகளை சராசரியான மனித மனதிற்கே விடுகிறேன் !
தாய் நாட்டில் சுற்றமும்,சொந்தமும் இவனுடைய வியர்வையின் முக்கியம் உணராமல் ,தங்களுக்கு என்ன கிடைக்கும் என நோட்டம் விடதொடன்குகிறார்கள்.காலம் கடந்து அதனை உணர்ந்து கொள்பவர்களே அதிகம்.
நல்லதும் கெட்டதும் அவனை விலக்கி....
நாக்கின் சுவை இழந்து, ....
இளமை கடந்து....
உள்ளுக்குள் நோய் கண்டு...
ரசனை மிக்க மனம் இழந்து...
இன்னும் எத்தனையோ விழயங்களை வாழ்க்கையில் இழந்து கடல் கடந்து வாழும் பல கோடி மனிதர்களின் நிஜ முகத்தின் ஒரு தோற்றம் இது.
அவர்கள் கற்றதும்,பெற்றதும்,இழந்ததும் வெகு நிறைய.இந்த பதிவு அத்தகைய மனிதர்களுக்கு சமர்ப்பணம் !
17 கருத்துகள்:
Nalla pathivu, NRI enbathu inru sumai thaankikalin sorkka logam. nanraaga solliyirukkinreergal. Vaalththukkal.
அன்பு தோழருக்கு வணக்கம்... ஒரு முறை இங்கு சென்று இதை படிக்கவும்...
இதோ உங்களுக்காக...
http://maharajarasigan.blogspot.com/2007/11/blog-post_17.html
உங்களின் இந்த கட்டுரையும் மிக அருமை....
நல்ல கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் .
//மிக சாதாரன கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட தங்களுடைய உடல் உழைப்பை நம்பி வளைகுடா நாடுகளில் பணம் ஈட்ட செல்கிறார்கள்.//
நன்றாக சொன்னீர்கள்.
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்..
இவை எல்லாம் நாம் கண்கூடாக இங்கு காணும் தினசரி நிகழ்வுகள். இன்றைய சூழ்நிலையில் தினக்கூலி வெளி நாடுகளை விட நம் நாட்டில் தான் அதிகம். இங்கு தொழிலாளர்கள் வாங்கும் ஊதியம் இன்று அவர்களது உணவு, தங்குமிடம் மற்றும் அவசிய செலவுகளுக்கு கூட போதாது.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது புதிய புதிய அவசியங்கள் எதிர்பார்ப்பை மீறி வந்து கொண்டே இருக்கும். பட்ஜெட் போட்டு ரெண்டு வருடம் வேலை செய்து பணம் சம்பாதித்து ஊரில் செட்டில் ஆகலாம் என்று நினைப்பவர்கள் பத்து, பதினைந்து வருடங்கள் கழிந்தும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில். என்றாலும் இறுதியில் கடன் மட்டும் பாக்கி.
இங்கு வருவதற்காக வாங்கிய கடனை அடைக்கவே இவர்களுக்கு இரண்டு வருடம் வேலை செய்ய வேண்டி வரும்.
முக்கிய காரணம், விடுமுறைக்கு செல்பவர்கள் யாரும் தாம் படும் கஷ்டங்களை யாரிடமும் சொல்லாமல், கற்பனை பொய்களை அவிழ்த்து விடுவதுதான். இது மற்றவர்களுக்கும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை தூண்டி விடும்.
ஆம் நம் இந்திய தமிழர்கள் ஏஜன்டுகளிடம் இழந்ததும் அயல்நாட்டில் இளமையை இழந்ததும் ஏராளம்... என்ன செய்வது.. நம் நாட்டில் சுரண்டித்திங்கும் அரசியல்வாதி... அதிகாரஷ்பிரயோக அதிகாரிகள் வானம் பாத்த பூமின்ன புலம்பிக்கொண்டு மாண்டுபோகவேண்டியதுதான்...
சிந்திக்கவேண்டிய கட்டுரை..
வாழ்வில் எதைப்பெருவதற்காக எதை இழக்கிறோம் என்பதிங்கே முக்கியம்..
ஆனால் பெறுவது எதை..
இழப்பது எதை என ஏதும் அறியும் முன்பே வாழ்வு கரைந்து போய்விடுவதும் உண்டு..
உங்கள் தொடர் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கிறது
வாழ்க.. வளர்க..
அருமையான ஆய்வுக்கட்டுரை
நன்றி மாதவ் ..நீங்கள் தொடர்ந்து வாசிப்பதற்கு எனது நன்றி!
நண்பர் மஹாராஜா அவர்களே தொடர்ந்து நல்ல பதிவுகளை தருவதற்கு உங்களை போன்ற்ரின் விமர்சனங்கள் போதுமான ஒன்று ! நன்றி தங்களுக்கு
நண்பர் வாசவன் அவர்களே மிக விளக்கமான கருத்துரையை வழங்கியுள்ளிர்கள் .மிக்க மகிழ்ச்சி. நாம் நம்முடைய கழ்டங்களை சொன்னாலும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு அது விளங்காது. இங்கிருந்து விடுமுறையில் செல்பவர்கள் ஒரு வகையில் மற்றவர்களை சந்தோழ படுத்திவிட்டு வழிகளை மறைத்துவிடுகின்றனர்.அது வெட்டி தனமாகவும் இருக்கலாம் அல்லது பரந்தமனபான்மையாகவும் இருக்கலாம்..
விளக்கமான உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் வாசவன்
நன்றி நண்பர் தமிழ் சரவணன் அவர்களே..பணம் புலம்ப செய்யும் என்பது உண்மைதானே...தங்களின் வருகைக்கும் ,கருத்துரைக்கும் நன்றிகள் பல
தென்றல் அவர்களே //'உங்கள் தொடர் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கிறது
வாழ்க.. வளர்க..''//
உங்களின் இந்த வரிகள் என்னுடைய சிந்தனைகளுக்கு கிடைத்த வெகுமதியாகவே கருதுகிறேன் .நன்றி தங்களுக்கும்
Thanks very much GOMA.
Thanks For all Readers to made this article and blog to appear in www.youthfulvikadan.com on 04/03/2009
வளைகுடா நாட்டில் வாழும் லட்சக்கணக்கான வெளிநாட்டு இதயங்களின் வலிகளை எழுதியுள்ளீர்கள். புரிகிறது. இது சொந்த நாட்டை விட்டு வருமானத்திற்காக வெளியேறிய யாவருக்கும் பொருந்தும். கடன் எனும் புதைமணலில் முதலில் கால் வைத்து பின் அதிலிருந்து வெளியேற சில வருடங்கள் போராடி பின் அந்த போராட்டமே பழகிப் போகிறது.
ஓரு காலத்தில் அங்கிருந்தவன் என்கிற உரிமையில் கேட்கிறேன். அந்த மாயமானை துறத்துவதை நாம் ஏன் நிறுத்த மறுக்கிறோம். அது நம் தவறல்லவா? வரண்ட பாலையில் வந்து சேர்ந்தவுடனே நமக்கு தெரிந்து விடுகிறது நம் வாழக்கை. சரி. கடனுக்காக சில நாள் இருந்தோம் என்று இருந்துவிட்டு நம்மை அழைக்கும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டியதுதானே.? எத்தனை பேர் அதை செய்தார்கள்? அங்கு இடும் அதே உழைப்பை சொந்த மண்ணில் இட முடியாதா? முடிய்ம். வருமானமும் அதே அளவுக்கு இங்கும் கிடைக்கும். பின் என்ன? என்ன..ஓரே ஒரு கஷ்டம். நம்மை அறிந்தவர்கள் மத்தியில் நமக்கு இன்று கிடைக்கும் மரியாதை உள்ளூரிலேயே உழைத்தால் கிடைக்காது. நாமே அடுத்தவனை பார்த்துதானெ வாழத்துடிக்கிறோம். பின் இன்று அழுது என்ன..பின் புலம்பி என்ன? இதில் மற்றவறை குறை என்ன சொல்ல!!! தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்பது துபாய்க்கு மட்டுமல்ல தூத்துகுடிக்கும் பொருந்தும்.
நன்றி.
ரவி.- இங்கிலாந்து
நன்றி திரு ரவி அவர்களே..
உங்களுடைய பதில் சிந்தனைக்குரியது.
//அந்த மாயமானை துறத்துவதை நாம் ஏன் நிறுத்த மறுக்கிறோம். அது நம் தவறல்லவா?//
அதற்கான பதிலையும் நீங்கள் தந்துள்ளிர்கள்
//நாமே அடுத்தவனை பார்த்துதானெ வாழத்துடிக்கிறோம்.//
அயல் நாடு என்பதற்கு ஒரு தனி மதிப்புதான். நீங்கள் கூட இங்கிலாந்தில் இருந்து இந்த கருத்தை கூறும் போது .தூத்துகூடியில் உள்ளவர்களும் உங்களை மிக மதிப்பார்கள் காரணம் நீங்கள் பாரினில் இருக்கிரீகர்கள் .அந்த மதிப்பு போதையை நீடித்து தருகிறது.
somehow we people think alike. but we continue doing things against what we want. It is all money in current days' world.
read my posts here:
அயல்நாட்டு வாசம் - http://enparvai.blogspot.com/2008/07/blog-post_16.html
கரைதேடும் நினைவுகள் - http://enparvai.blogspot.com/2008/10/blog-post_22.html
கருத்துரையிடுக