வெள்ளி, 9 ஜனவரி, 2009

இந்தியா என்றொரு ஏழை நாடு !!

நம்மில் பல பேர் இப்படித்தான் பேசுவோம் " இந்தியர்கள் சாப்பிட மட்டுமே லாயக்கு ". உலகில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆங்கிலேயர்களும்,இதாலியெர்கலும்,கிரேக்கர்களும் கண்டுபிடித்து உலகுக்கு
சொன்னபோது...இந்தியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? .மரணத்தை எதிர் நோக்கி காத்து கொண்டிருந்தார்கள் மேலே உள்ள புகை படம் அதற்கு ஒரு சான்று.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வறுமையும் ,அறியாமையும்,அடிமைத்தனமும் பற்றி கிடந்தது .ஒரு வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் இருந்தபோது ...புத்தியும் அறிவும் உயிரை காத்து கொள்ளவும் அடிப்படை தேவைகளை பற்றி என்னவுமே அன்றைய நமது தாத்தனுக்கும் பாட்டனுக்கும் போதுமானதாக இருந்தது !!

ஒரு பக்கம் மாட மாளிகைகளும் ,பணத்தை ஆடம்பரமாய் செலவு செய்யும் ஒரு கூட்டம் இருந்தாலும் சாமானியர்கள் இன்னும் தெரு முனையில் கையில் தட்டேந்தி நிற்கின்ற அவல நிலைமை நாளைய வல்லரசாகும் இந்தியாவின் இன்றைய நிஜம்.
தங்கம் வேய்ந்த கோபுரங்கள், வைரம் பதித்த கவசங்கள்,பளிங்கு மண்டபங்கள் ,இப்படி ஒரு பக்கம் பட்டியலிட்டாலும் ..முரண்பாடுகளும் சம்நிலயட்ட்ற வாழ்கையின் ஒத்த உருவாய் நமது இந்தியா நம் கண் முன்னே உள்ளது


உலகின் தலை சிறந்த தத்துவங்களும்,தென் கிழக்கு ஆசிய முழுதும் பரவி நிற்கின்ற புத்த மதமும் இந்த அஹிம்சை பூமியிலிரிந்து சென்றது தான் !.கீதையும்,வேதங்களும் இன்னும் பிற கலாசார முத்திரைகளையும் இந்தியா இந்த உலகிற்கு கொடுத்தாலும் அவற்றின் அடிப்படை வறுமையின் வேர்களில் விளைந்த kaநிகலாகவே அறியப்படுகிறது.
செல்வ செழிப்பு மிக்கவனுக்கு உள்முகமாய் மரணத்தை,குறித்தும் ஆத்மாவை குறித்து தீர விசாரிக்கின்ற இயல்பு இல்லாமல் போனதில் வியப்பில்லை.ஆனால் நாம் வாழ்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை கண்டு பிடிக்க வறுமையும் ஒரு காரணமாகவே போனது

படிப்படியாய் பொழுது புலர்ந்து இன்றைய விடியலிலும் நேற்றைய சாயலும் பதிவும் நம்மிடையே தேங்கி கிடக்கிறது.வறுமை இன்னும் இந்த பூமியை விட்டு நீங்கிடவில்லை.
இந்தியர்கள் அறிவு சார்ந்த சமுகத்தை சேர்ந்தவர்கள்.தங்களுடைய அறிவாட்ட்ராளால் பல தேசங்களில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்து காட்டுகிறார்கள்
இன்றைய உலகின் தலை சிறந்த பல துறைகளில் இந்தியர்களின் பங்கு குறிப்பிடகுடிய வகையில் உள்ளது

நாட்டின் வறுமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் புரையோடி போன அரசியலும், இந்திய சட்ட அமைப்புகளுமே முக்கிய காரணம் .சுய நல அரசியல் ஒரு பணம் கொழிக்கும் தொழிலாக இந்தியாவில் உள்ளது.சமையலறையில் வேலை பார்க்கும் மனைவியை முதலமைச்சராக மாற்றி காட்டும் சட்டமும்,அரசியலும் இன்றைய நிதர்சனம்


புகை வண்டியில் செல்லும் போதும்,பேருந்தில் செல்லும்போதும் நீங்கள் நிஜமான இந்தியாவை காணலாம். பிச்சை எடுக்கும் சிறார்கள், வீதியின் இருமருங்கிலும் வாழ்கை நடத்தும் ஆயிரகணக்கானோர் , வறுமையின் வாட்டத்தை வெளிப்படுத்தும் உருக்கமான பாடல்கள் ,சில்லறை தட்டில் விழும் ஓசை ,அன்ன தானம் பெற்றுக்கொள்ள நீண்ட கூட்டம் இப்படி நிஜ இந்தியாவின் தரிசனம் ....!
உனக்கு இலவச அரிசியும், கட்டிக்கொள்ள வேட்டியும் சட்டையையும் தருகிறேன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வருமையோடே இரு என்று சொல்லும் இந்திய அரசியல் தலைவர்கள் உள்ளவரை நமது விடியல்கள் தள்ளி போடப்படும் என்பதே யதார்த்தம் !!












6 கருத்துகள்:

Felix Raj சொன்னது…

அருமையான கட்டுரை , மிக ஆழமான கருத்துக்கள் இந்தமாதிரி கட்டுரைகள் இன்டர்நெட் இல்லாதவர்களும் படிக்கும் மாறு செய்யவேண்டும் , விழிப்புணர்வு கிடைக்கும் , நன்றி
பெலிக்ஸ்

ers சொன்னது…

விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே...
சோதனை திரட்டியில் உங்கள் இடுகையை பதிய...
http://india.nellaitamil.com/

ராஜ்குமார் சொன்னது…

நன்றி திரு பெலிக்ஸ் ராஜ் அவர்களே..உங்களை போன்றோரின் கருத்துக்கள் அந்த பணியை செம்மை படுத்தும்.நன்றி

ராஜ்குமார் சொன்னது…

நன்றி நெல்லைத்தமிழ் நண்பரே திரட்டியில் இணைவதில் தடையேதும் இல்லை கருத்துக்களுக்கு மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

படத்தைபாக்கவே றம்ப கவலையா இருக்கு.அருமையாக எழுதி இருக்கிறீங்க.தொடர்ந்து எழுதுங்க
nallurran-nallur.blogspot.com

ராஜ்குமார் சொன்னது…

ஹஜென் அவர்களே ...உண்மையில் அந்த புகைப்படங்கள் யதார்த்தங்களையும் நிஜ இந்தியாவின் தன்மையையும் நமக்கு காட்டுகிறது.இடுகையில் கருத்துக்களை பதித்தமைக்கு மிக்க நன்றி..