வியாழன், 11 செப்டம்பர், 2008

செல்வி .ஜெ. ஜெயலலிதா -நீங்கள் அறிந்ததும் அறியாததும் !



ஜெயலலிதா ஜெயராம் ஆயிரத்தி தொல்லயிரதி நாற்பத்தி எட்டாம் ஆண்டு ஆம் ஆண்டு மைசூர் இல் பிறந்தார் .தனது இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார் ஜெயலலிதா .தந்தையின் பெயர் ஜெயராம் ,தாய் நடிகை சந்தியா .

குடும்ப வறுமை காராணமாக தாய் சந்தியாவோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார் ,ஜெயலலிதாவின் இயற் பெயர் கோமளவல்லி என்பதாகும் . பிஷப் காட்டன் ஸ்கூல் பெங்களூர் இல் கல்வி பயின்றார். தனது .சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் கல்வி கற்றார் !.தாய் சந்தியாவின் வழிகாட்டுதலோடு சினிமாவில் நடிகையாக நுழைந்தார் !.முதல் தமிழ் படம் வெண்ணிற ஆடை !

சின்னதாகொம்பே என்ற கன்னட படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது,பின்னர் தொள்ளயிரத்தி எழுபத்தி இரண்டில், மனுஷுலு மமதாலு என்கிற தெலுகு படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.தமிழ்நாடு அரசின் மூலம் கலைமாமணி பட்டமும் பெற்றார் .

எம்.ஜி.ஆரோடு கொண்ட நட்புறவின் மூலம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எண்பத்தி ஒன்றாம் ஆண்டில் இணைந்தார்.

எண்பத்தி எட்டாம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜ்யசபை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் செல்வி.ஜெயலலிதா


எம்.ஜி ஆருடைய மறைவ்ரிக்கு பிறகு .காட்சியில் ஏற்ப்பட்ட பிளவின் காரணமாக இவர் ஒதுக்கப்பட்டு. திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் முதல் பெண் முதலமைச்சர் ஆனார் .

பின்னர் தொன்னுத்தி ஓராம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உடன் கொண்ட கூட்டணியின் மூலம் ,ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட சில தினங்களில் நடந்த தேர்தலில் வீசிய அனுதாப அலையின் மூலம் செல்வி.ஜெயலலிதா மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெருமையை தமிழக அரசியலில் பெற்றார்.

மொத்தம் மூண்டு முறை முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா அதிகம் சர்ச்சைகளில் வழக்கில் சிக்கிய முதல்வர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்

* அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா ,வயதில் பெரிய அமைச்சர்களை கூட தனது காலில் விழுந்து வாழ்த்து பெறுவதை பொது மேடைகளில் கூட தமிழ்நாடு காண செய்தார்.


* தோழி சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களோடு பெரும் செல்வங்களை அரசியல் செல்வாக்கின் மூலமாக பெற்று இந்தும் இவருடைய நிழலாக இருப்பது பல்வேறு கண்டனங்களையும் ,எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இவரை பல வழக்குகளில் சிக்க செய்தன


* ஒரு கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணம் மட்டும் ஏறக்குறைய ஐம்பத்து லட்ச ருபாய் மதிப்புடையதாக கணக்கிடப்பட்டுது!.நானுட்ட்ரி அறுபத்தி எட்டு வகையான தங்க ஆபரணங்கள் தேடுதலின் போது கை பற்றப்பட்டது !

*இவர் மீது பல உழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன ,சிலவற்றில் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.


* திருமணம் செய்துகொள்ளாமல் செல்வியாக இருந்து வரும் ஜெயலலிதா, சசிகலா என்கிற சாதாரண வீடியோ லைப்ரரி நடத்தி வந்தவரை தனது ஆத்ம தோழியாக ஏற்று கொண்டார். வேறு யாரும் அவரை நெருங்காதவன்னம் உயிர் தோழிகளாக இன்று வரை உள்ளார்கள்

* ஜோசியம் ,யாகம் என பலவற்றை நடத்தி தன்னை சக்தி மிக்கவராக காட்டி கொண்டவரும் ஜெயலலிதாதான் !


* லாட்டரி களை, சந்தன வீரப்பனை, தனது ஆட்சி காலத்தில் ஒழித்து புகழ் பெற்றார்


*தொட்டில் குழந்தை திட்டம்,மற்றும் மழை நீர் சேமிப்பு என புதிய திட்டங்களால் பாரட்டபெற்றார்


* மதம்மாற்ற தடை சட்டம், அரசு பணியாளர்கள் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் பேரை அதிரடி பனி நீக்கம் செய்தவர் ஜெயலலிதா .இதுவே அவருடைய ஆட்சி இழப்பிற்கு காரணமாக அமைந்தது எனலாம் !


*இந்திய அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்குபவர் ஜெயலலிதா



















4 கருத்துகள்:

Benny சொன்னது…

soniyavai antonio moino enru sollum evarai komalavalli enru koopittal poruthukkolvara?

ராஜ்குமார் சொன்னது…

Poruthukolla maattar Benny avarkale..Thannai vimmasankalukku apparpatta oru uyariyavaaraga ninaithu vazhnthu kondullavar AMMA avarkal

பெயரில்லா சொன்னது…

வறுமையால் நடிக்க வந்தவரிடம் இன்று ஆயிரம் ஏக்கரில் ஊட்டியில் உல்லாச ஆடம்பர மாளிகை மற்றும் பண்ணை. ஒரு சென்ட நிலம் ஊட்டியில் வாங்க தலைகீழாக நிற்க வேண்டிய நிலையில் ஆயிரம் ஏக்கர் பண்ணை வந்ந மர்மம் என்ன? இதைப்பற்றி எல்லாம் யாரும் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? அரசியலில் ஊழல் செய்து சம்பாதித்தில் ஜெயலலிதாவிற்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

வறுமையால் சினிமாவிற்கு நடிக்க வந்த செல்வி.ஜெயலலிதாவிற்கு ஊட்டியில் உல்லாச மாளிகை மற்றும் ஆயிரம் ஏக்கரில் பண்ண. ஊட்டியில் ஒரு சென்ட் நிலம் வாங்கவே தலைகீழாக நின்று ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டிய நிலையில் ஆயிரம் ஏக்கர் பண்ணை ஜெயலலிதாவுக்கு சொந்தமாகியது எப்படி? இவை பற்றி எல்லாம் யாரும் ஏன் கேள்வி கேட்பதில்லை? அரசியலில் ஈடுபட்டு மிகப்பெரிய ஊழல் செய்து அதை பகிரங்கமாக வெளியுலகுக்கு காட்டிய செல்வி.ஜெயலலிதாவுக்கு
ஊழலில் டாக்டர் பட்டம் வழங்கலாம்.