வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பசி.....!



உயிர் வாழ்க்கை கொண்ட எல்லா உயிரினமும் உணரும் உடலின் இந்த கூக்குரலை !.தாயின் பாலுக்காக ஏங்கி கத்தும் சிறு குழந்தை தொடங்கி,கோலுன்றி கண்கள் மங்கி தள்ளாடி விழ காத்திருக்கும் முதியவர் வரை பசி யாரையும் விடுவதில்லை,பசி என்ற ஒன்று இல்லை எனில் மனிதன் தெய்வத்திற்கு நிகராகி போவான் ,வறுமையால் தினம் தினம் ஏற்படும் இந்த போராட்டத்தை கோடிகணக்கான மனிதர்கள் சந்திக்கின்றனர்.




அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லை என்று நிலை ஏற்படும் போது மனித மனம் இரு வேறு நிலைகளை எதிர்கொள்கிறது ,ஒன்று தன்னம்பிக்கை கொண்டு எதிர்த்து நேர்வழியில் செல்கிறது, மற்றொண்டு தன்னம்பிக்கை இழந்து செல்லகூடாத வழிகளில் செல்ல தொடங்குகிறது, பசியால் விரட்டப்பட்டு வாழ்கையின் உச்சிக்கு உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர்,தொழில் அதிபர்களாய், விந்ஞாநிகளாய்,கலைஞர் களாய்,நாட்டையே ஆண்ட மா மனிதர்களாய் சரித்திரம் கண்டவர்கள் பலர்.

உண்மையில் செல்வா செழிப்பும், வசதியும் மனித வாழ்க்கையின் உண்மையும்,மனித நேயத்தையும் உணர்த்துவதில்லை!எவன் ஒருவன் பசியின் வேதனை என்னவென்று உணர்ந்தவனாய் உள்ளானோ அவனே மனித நேயம் உணர்ந்தவனாகவும்,வாழ்க்கையின் அர்த்தத்தை முழுதும் உணர்ந்தவனாகவும் இருப்பான்,வறுமை தரும் மிக சிறந்த பாடம் பசி எனலாம்.




இயற்க்கை பேரிடரால், வறட்சியால் தினம் தினம் பல்லாயிரம் உயிர்கள் இந்த கொடிய போரட்டத்தை எதிர்கொள்கின்றன.செல்வ வளம் மிக்க பல நாடுகள் உணவை வீணடிக்கின்றன,குப்பை தொட்டியில் வீசி எறியப்படும் உணவுகள் ஏராளம்.ஆனால் அங்கே ஆப்ரிக்க நாடுகளிலோ ஒரு பருக்கை உணவிற்கு அழுது உயிரை கண்களில் தேக்கி நிற்கும் மனித உயிர்களை நாம் எண்ணி பார்ப்பதில்லை.





ராணுவ தளவாடங்களுக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் நாடுகள்!,செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கின்றதா என்பதை அறிய பல நூறு கோடிகள்! ஆனால் நாம் நன்கு அறிந்த பக்கத்து தேசத்தில் நீரும் உணவும் இன்றி உயிர் விட காத்திருக்கும் மனிதர்கள் இருக்கும் போது செவ்வாய் கிரகத்தில் அடுக்குஅடுக்காய் ஆய்வுகள் ! தேவைதானா?




பசியற்ற நிலை இந்த பாரினில் வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமோ?


1 கருத்து:

Unknown சொன்னது…

Ovvoru manitanum itai unnara aramital than pasi yennum koteya noi intha ulagai vitu sellum.atu varai porateah aga vendum thola......