திங்கள், 27 ஏப்ரல், 2009
"வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் ..."
இந்த நில உலகில் நம்பிக்கை மட்டுமே மனித வாழ்கையை அர்த்தபடுத்தவல்லதாக இருக்கிறது.கடுமையான சோதனைகளிலும் நிதானம் இழக்காமல் தங்களுடைய இலக்கினை நோக்கி நடந்து , அடைந்தவர்களையே உலகம் முன் மாதிரியாகவும் அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தையும் அளிக்கிறது.
அத்தகைய மனிதர்கள் வாழ்கையை,சாதனைகளை எண்ணும் போதும் ,படிக்கும் போதும் மனம் தளர்ச்சியிளிரிந்து மீண்டு புத்துணர்வை பெறுகிறது.நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வென்ற தருணங்கள் உண்டு.
சென்னை மாநகரத்தின் சேரி பகுதிகளில் இட்லி விற்று ,தன்னுடைய தாய்க்கு ஆதரவாகவும் அதே தருணத்தில் தனது இலக்கினை நோக்கி முன்னேறி சென்று படித்து பட்டம் பெற்று .... பன்னாட்டு நிறுவனங்கள் பல லட்சங்களை சம்பளமாக தர முன்வந்தும் அவற்றை மறுத்து ,தனது உழைப்பால்,திறத்தால் தானே ஒரு நிறுவனத்தை தொடக்கி வெகு குறுகிய காலத்தில் ஏழு கோடி ருபாய் வருமானம் செய்யும் நிறுவனமாக மாற்றி காட்டிய திரு. சரத்பாபு என்கின்ற இளைஞர் இன்றைய தினத்தில் நம்பிக்கையின் அடையாளம்.!!
எண்ணுவது போலே வாழ்க்கை என்பதற்கு பல மனிதர்கள் எடுத்துகாட்டாய் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.மனிதன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பானாயின் அளப்பரிய சாதனைகளை செய்ய இயலும் .!
ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பார்வையற்ற சின்னஞ்சிறுவர்கள் "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கு கின்ற பாடம் ..." என்று குரலெடுத்து பாடி ...மனதை உருக்கி கடந்து சென்ற போது அவர்களுடைய நம்பிக்கை ஒளி பொருந்தியதாகவும் வாழ்கையை எதிர்கொள்ள அவர்கள் தயக்கம் அற்று இருப்பதும் ஒரு முறை எனக்கு விளங்கியது .ஆனால் கண்,செவி,வாக்கு,படிப்பு எல்லாம் இருந்தும் கோழைகளை போல் தோல்விக்கு அஞ்சி நடுங்கும் தன்னம்பிக்கையட்ட்ற மெத்த படித்தவர்கள் நம்மில் பல பேர் இந்த சமுகத்தில் வாழ்ந்துவருவதையும் நாம் காண்கின்றோம்
தகுந்த சீருடை இல்லாமல் பள்ளிக்கு பல மைல்கல் நடந்து சென்று.....
குறிப்பேடுகளும் ,பாட புத்தகங்களையும் வாங்க பணமற்று.......
சத்து உணவிற்கு நண்பகலில் வரிசையில் நின்று....
மின்சார மற்ற மண் குடிசையில் மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து ...
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.
அத்தகைய உங்களில் ஒருவராக பலர் இன்று நம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்கள்.
பல சோதனைகளுக்கு இடையே படித்து,பட்டம் பெற்று..எஞ்சினீயராகவும் ,டாக்டர்களாகவும் இந்த சமுகத்தில் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுக்கின்ற உங்களில் ஒருவர் பாராட்டப்பட மட்டுமில்ல பின்பற்ற படவேண்டியவரும் கூட !!
தன்னம்பிக்கையற்ற வாழ்க்கை சுருதி பிறழ்ந்த பாடலாக இந்த சமுகத்தில் அங்கேயும் இங்கேயும் இடைஇடையே கேட்டாலும்.இவற்றை எல்லாம் மீறி "வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் " என்ற பார்வையற்ற அனால் தன்னம்பிக்கை குறையாத அந்த சின்னஞ்சிருவர்களின் பாடல் நீங்காமல் ஒலித்தபடி உள்ளது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
கண்ணீர் ததும்ப வைத்து விட்டது இந்த வரிகளின் மூலம் பின்னோக்கிய கடந்த காலம்
//ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.//
////ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.////
மனது கண்க்கிறது நண்பா..
நல்ல பதிவு ஆனா மனசு
நல்ல நம்பிக்கையும் உங்க பதிவில் இருக்கிறது
//சரத்பாபு என்கின்ற இளைஞர் இன்றைய தினத்தில் நம்பிக்கையின் அடையாளம்.!!/
மிக சரி என் பதிவுகளில் அவருடய பேட்டி இருக்கு, அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது
நெஞ்சை தொடும் வரிகள்.
அருமை.
எதிரே இருப்பவனின் தேவை அறிந்து செயல்படுபவன் நான்.
என்னக்கும் ஒரு சுயநலம் எல்லோருக்கு நானே உதவ முடிந்தால் .
கருத்துரையிடுக