அரச மரம் சுற்றி,நெய் தீபம் ஏற்றி , மண் சோறு உண்று,பல மருத்துவமனைகள் படியேறி பல செய்யல்கள் செய்தும் மனமிரங்காமல் என்னை வஞ்சிக்கும் தெய்வமே ...நீ என்று மனம் இறங்குவாய் ??
தூக்கம் வற்றிய எனது கண்களும்..
கண்ணீரில் நனைந்த என் தலையணையும் எந்த விடியலில் மாறும்..?
நீ சிரிக்கும் போது நானும் சிரித்து..நீ அழும் போது நானும் அழுது உன்னை கையில் ஏந்தி கொஞ்சி மகிழ என்று நான் உன்னை பெறுவேன் என் செல்லமே ???
குரலெடுத்து அழுகின்ற பக்கத்து வீட்டு குழந்தையின் அழு குரல் கேட்கும் போதும் , சிரித்து விளையாடும் ஒலி கேட்கும் போதும் இனம் புரியாத இரக்கமும் மகிழ்வும் தோன்று எனது தன்மைக்கு மலடி என்றொரு மற்றொரு பெயரா?
இருவரில் யாரிடத்தில் குறைகள் இருப்பினும் மலடி என்று பட்டம் பெறுவது பெண்கள் மட்டும் தானே ?
பிச்சை எடுத்து செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகளை பெற்று நடு வீதியில் விட்டு சென்றவள் தாயா??
அந்த பிச்சை எடுத்து செல்லும் பிள்ளைகளை கண்டு மனம் வாடும் நான் மலடியா..?
பிள்ளைகளை வளர்க்க வழி இன்றி தெருவில் விடும் பேதைகளை தாயென்று கொண்டாடும் உலகம் என்னை மலடி என்று கூறி மகிழ்வது என்ன நியாயம்?
பெற்றால் மட்டுமே தாயா ?
கண்களில் தூசு விழுந்தால் கண்கள் கலங்கும்..தாயவள் கண்கள் போன்றவள்!
கலங்கும் போதும்,மகிழ்வின் போதும் குணங்களை வெளிப்படுத்தும் கண்களை போன்றே தாய் அன்பினை வெளிபடுத்துவாள்..
பிள்ளை பெறாவிட்டாலும் நானும் தாய்தான்..!
கண்ணீரில் நனைத்த எனது தலையனை மட்டுமே அறியும் நானும் தாயென்று !
நீங்கள் இப்போது சொல்லுங்கள்...
நானா மலடி... ?
1 கருத்து:
\\தாய் என்பவள் கருணை நிறைந்தவள்...இரக்கம கொண்டு தியாகம் செய்பவள்!
கண்களில் தூசு விழுந்தால் கண்கள் கலங்கும்..தாயவள் கண்கள் போன்றவள்!
கலங்கும் போதும்,மகிழ்வின் போதும் குணங்களை வெளிப்படுத்தும் கண்களை போன்றே தாய் அன்பினை வெளிபடுத்துவாள்..
பிள்ளை பெறாவிட்டாலும் நானும் தாய்தான்..!
கண்ணீரில் நனைத்த எனது தலையனை மட்டுமே அறியும் நானும் தாயென்று !
நீங்கள் இப்போது சொல்லுங்கள்...
நானா மலடி... ?\\
எனது உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை
மிக அருமையாக இருக்கு.
கருத்துரையிடுக