பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்படி ஒரு அற்புத அவதரிப்பு நிகழ்ந்தது ,தில்லை எனும் சிதம்பரத்திற்கு அருகே மருதூர் என்னும் கிராமத்தில் ஆயிரத்தி எட்நூற்றி இருபத்தி மூன்றாம் ஆண்டு ராமையா பிள்ளைக்கும் ,சின்னம்மைக்கும் ஐந்தாவது மகவாக அவதரித்தார் ராமலிங்கம் எனும் வள்ளல் பெருமான்.
பசியென கூறி படி அருகே வந்து நின்ற சிவனடியார் ஒருவர்க்கு அமுதளித்த சின்னமையை ,வாழ்த்தி அந்த சிவனடியார்" என் பசியினை போக்கினை அம்மையே இந்த உலகமெலாம் பசியாற வள்ளல் ஒருவன் உன் மணி வயிற்றில் தோன்றுவான் "என்று" கூறி மறைந்தார்.அந்த வாழ்த்துதலை மெய்ப்படுத்தி அவதறித்தவரே வள்ளல் பெருமான்.
இளைய வயது முதலே யாரிடத்திலும் கல்வி பயிலாமலே அற்புத ஞானம் உள்ளவராக விளங்கினர் வள்ளலார் .மிக எளிமையாக மனிதன் தன்னுடைய வாழ்கையை எங்கனம் அமைத்தால் தெய்வ நிலையையும் அடைய கூடும் என்பதனை அற்புதமாக எடுத்துரைத்தவர் வள்ளல் பெருமான் அவர்களே !
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் ",என வாடியவர் வள்ளலார். இதன் மூலம் அவருடைய பிற உயிர்களின் மீது கொண்டிரிந்த இரக்கம் ,கருணையை நன்கு அறியலாம்.
இறைவன் ஒருவரே...!
அவன் ஒளி வடிவானவன் அவ்விதமே பூஜிக்க ....!
மாமிசம் உண்ணுதல் பாவம்...!
மிருகங்களை பலியிட்டு படைக்கும் வழிபாட்டு முறைகள் தவறானவை..!!
சாதிகளும் , மதங்களும் உண்மையாய் உணர பயன் படா..!
கருணையும்,பசித்த உயிரின் பிணி போக்குதல் தலையாய கடமையாகும்...!
எல்லாவற்றிலும் தெளிந்த பார்வையும்,கருத்தும் வேண்டும்
புராணங்களும்சாஸ்திரங்களும் உண்மை உனார பயன் படாது ..!
என வெகு எளிமையான மார்க்கத்தை உபதேசித்தார் வள்ளலார்.அவருடைய திரு அருட்பா அற்புத போதனைகளை,பல சூட்சுமங்களை உள்ளடக்கிய ஒன்றாகவே உள்ளது.அற்புத சந்தங்களையும்,பொருட்கருத்தையும் தாங்கி தமிழுக்கும் பெருமை சேர்த்து அழியா புகழ் கொண்டுள்ளது .
பசி பிணி போக்க வள்ளால் பெருமான் தொடங்கி வைத்த தரம் சாலையை நீங்கள்மேலே பார்க்கிறீர்கள் .ஏறக்குறைய இருநூற்றி ஐம்பதாண்டுகளாக அணையா அடுப்பாக பாதுகாக்க பட்டு வரும் தர்ம சாலை இன்றளவும் வள்ளலாரின் கருணையை வையகத்துக்கு தெரிவித்தபடி உள்ளது.
வள்ளலார் சத்ய ஞான சபையை தோற்றுவித்து "தனது மார்கத்துக்கு ஒரு கொடியையும் உண்டாக்கினார்.
ஆயிரத்தி எட்நூற்றி எழுபத்தி நான்காம் ஆண்டு வள்ளலார் பலரறிய ,மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு உள் சென்று தாழிட்டு தன்னை தானே திரு காப்பிட்டு கொண்டார்.யாரும் தன்னை தேட வேண்டாம் என்றும்,அறையை திறந்து நோக்கின் வெற்றிடமே மிஞ்சும் என கூறி உட் புகுந்தார் வள்ளலார் .
பின்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திறந்து பார்கபட்டபோது அறை வெற்றிடமாகவே இருந்தது
கடை விரித்தேன் கொள்வாரில்லை என அன்றைய சமுக சூழலில் தன்னுடைய போதனைகளை பின்பற்ற தவறியவர்களை குறித்து ஆதங்கம் கொண்டார் .
தண்ணிரில் விளக்கேற்றியது,
மாயமாய் மறைந்து பின் தோன்றுவது..
மண்ணை தங்கம்மாக்கி காட்டியது ...
இவரை ஒன்பது மூறை புகை படம் எடுத்தும் அது உருவத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் நூற்கள் கூறும் தகவல்.
ஒரே இரவில் அருட் பெருஞ்சோதி அகவல் இயற்றினார் வள்ளலார் ..
புலால் உண்ணுதல் மிக கொடிய மாச்சரியம் என்றும் பாவம் என்றும் போதித்தார் .
மனிதர்கள் ஒழுக்கத்தின் மூலம் தெய்வ நிலயை அடைய இயலும் என வழி காட்டியவர் வள்ளல் பெருமான்
அருட் பெருஞ்சோதி !அருட் பெருஞ்சோதி !
தனி பெருங்கருணை
அருட் பெருஞ்சோதி !
6 கருத்துகள்:
போதனைகள் அடங்கிய நல்ல குறிப்பு
நன்றி டாக்டர்.திரு.முருகானந்தன் அவர்களே ...உங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி
அருட்பெருஞ்சோதிஅருடபெருஞ்சோதி!
தனிபெருங்கருணைஅருட்பெருஞ்சோதி!
வல்லலார்கருணை
வையகம்எங்கும்பரவட்டும்.
அனைவர் உள்ளத்திலும்
அருட்ஜோதி ஒளிரட்டும்.
ஜோதி ரூபமாகிய எல்லாம் வல்ல இறைவனை நாம் உணர முடியாதவர்களாக மாயையிலே சிக்கி உழலுகின்றோம். அருமையான ஒரு சீவன் முத்தரைப்பற்றிய பதிவுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்!!!
வள்ளலாரை பற்றிய அருமையான தொகுப்பு.
Thanks For all the readers who voted for Vallalar article.May the blessings be with You
கருத்துரையிடுக