சனி, 28 பிப்ரவரி, 2009

மனைவி..! - உயிரின் உயிராய்....!!


ஒரு மனிதனை மனிதனாக வாழ செய்யவும் ,மன நோயாளியாக மாற்ற செய்யவும் மனைவி என்கின்றன ஒப்பற்ற உறவால் இயலும்!.நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டே மனைவிக்கு இலக்கணங்கள் வகுக்கப்பட்டு வழி வழியாக சுட்டி காட்டப்படுகின்றன. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் அது ஆயிரம் மடங்கு அர்த்தம் பொதிந்த வாக்கியம் .!.


இந்த அனுபவ பதிவு ஒரு சிலருக்கு வாய்த்திருக்கும்! வாய்க்கவில்லை எனில் உங்களுடைய மனைவிக்கு இதை அஞ்சல் செய்யுங்கள்.




உடம்பு சில்லிட தொடங்கியது ,சுவாசிப்பது சிரமமாக இருக்க என்னை சுற்றிலும் மருத்துவர்கள் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தார்கள் .எனது மங்கி போன பார்வையில் தெளிவற்ற அந்த மருத்துவமனையின் அறை தெரிந்தது . என்னுடைய பிள்ளைகளிடத்தில் மருத்துவர் ஒருவர் ஏதோ சொல்லி கொண்டிருக்கிறார்.




என்னுடைய இறுதி நிமிடங்களா இது ? என்னால் அனுமானிக்க முடியவில்லை !நான் கிளம்ப வேண்டிய தருணம் வந்து விட்டதா ? சிரமப்பட்டு என்னுடைய விழிகள் சுழல்கின்றன .என்னுடைய பாதத்தின் அருகில் என்னுடைய மனைவி அமர்ந்திருக்கிறாள்.






முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக எனக்கு பரிச்சயமான அந்த மங்கலமான முகம் ..இப்போது ஆழ்ந்த மௌனத்தை வெளிப்படுத்துகிறது .அவளுடைய உதடுகள் திரும்ப திரும்ப எதையோ உச்சரித்தபடி இருக்கிறது.நிச்சயமாக அது தெய்வத்தின் பெயராகத்தான் இருக்கும்.
செயலற்று கிடக்கும் எனது கால்களும் கரங்களும் மிக கனமாய் தெரிகின்றன எனது பழைய நினைவுகள் போல.
அந்த பசுமையான நாட்கள் ஞாபகத்தில் உள்ளது..கல்யாணமான புதிதில் ஒரு மழை கால நான் பகலில் ...மழையில் நனைந்த படி நானும் ,அவளும் வீடு வந்து சேர்கிறோம் வீட்டின் வாசற் படி அருகில் மழையில் நனைந்த படி பச்சிளம் ஆட்டு குட்டி நின்று கொண்டிருக்கிறது .நான் உள்ளே சென்று விட்டேன் சற்று நேரம் கழித்து நான் தாழ்வாரம் வந்தபோது என்னுடைய மனைவி ஒரு துவாலையால் அந்த ஆட்டு குட்டியை தொடைத்து கொடுத்து கொண்டிருந்தாள் !
அந்த நிகழ்வில் அவளுடைய தாய்மை அந்த மழை நாளின் ஈரத்தை காட்டிலும் இன்னும் என்னுடைய நினைவிலும் நெஞ்சத்திலும் காயாமல் இருக்கிறது.
என்னையே நம்பி வந்து ..என்னுடைய கோப தாபங்களை,என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து , என்னுடைய சிறு வயது முகத்தை என்னுடைய பிள்ளை களிடத்தில் காண செய்து ..அவர்களை தாலாட்டி, சீராட்டி ஆளாக்கி இன்று வரை ஒரு ஆயாசத்தையும் வெளிபடுதமால் இருக்கும் அவளை..எனது மனைவியை என்றோ என்னுடைய சிறுவயது பள்ளி பருவத்தில் கனவில் வரும் தேவதையை போன்று என்னுடைய நிஜ வாழ்க்கையில் வந்து சேர்ந்து என்னுடைய வாழ்கையை வசந்தமாக்கினாள் .!




சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் குடும்ப வாழ்கை என்கின்றன கட்டுமர பயணத்தை அலைகளின் ஊடே துடுப்பிட்டு கரை சேர்த்த பெருமை அவளை மட்டுமே சேரும்.
என்னுடைய இந்த பிறவியில் பரிச்சயமான எனது தாயின் கருவறையும்,மடியும் பிறிதொரு பிறவிக்கான வாய்ப்பு வழங்க படுமெனில் என்னுடைய மனைவியின் வயிற்றிலே நான் பிறக்க வேண்டும் என்றே விரும்புவேன்,அது ஒரு நன்றியின் அடையாளமாக இருக்கட்டும்.
சுரனயட்ற்ற எனது புலன்களில் அவளுடைய தாய்மை நிறைந்த முகமும்,கனிவு நிறைந்த பார்வையும் என்னக்குள் மெல்லிய அசைவுகளை உண்டு பண்ணுகின்றன..என்னுடைய சுவாசம் சீராகி ..உடலில் மெல்ல உயிர்ப்பு நிறைவதை நான் உணர்கிறேன்.
ஏனெனில் உயிரின் உயிராய் அவள் என்றும் என்னருகில் ..!!





3 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

கடைசி வரி அசத்தல் ...

ராஜ்குமார் சொன்னது…

Mikka Nandri Nanbar Jamaal...!

தமிழ். சரவணன் சொன்னது…

//ஒரு மனிதனை மனிதனாக வாழ செய்யவும் ,மன நோயாளியாக மாற்ற செய்யவும் மனைவி என்கின்றன ஒப்பற்ற உறவால் இயலும்//

ஆம் சகோதர தங்கள் கூற்றில் உண்மை மற்றும் தற்பொழுது மாற்றுக்கருத்து

"ஒரு மனிதனை மனிதனாக வாழ செய்யவும் கிருமினல் குற்றமும் சுமத்த முடியும்" வாய்பிருந்தால் என் வலைபூபக்கத்திற்கு சென்று பார்வையிடவும்"

http://tamizhsaran-antidowry.blogspot.com