
உலகில் மிக நல்ல நிலையில் இருந்தவர்கள் தங்களுடைய வாழும் காலத்திலேயே அழிந்து தங்களுடைய அஸ்தமனத்தை கண்டவர்களின் பட்டியலை நீங்கள் பார்த்தால் இந்த மூன்று ஆசைகளினாலே அழிந்தார்கள் என்பது நன்கு விளங்கும்.
பண்டைய காலம் தொட்டே மது...மங்கை...மண்.. இந்த மூன்றும் பல அழிக்க முடியாத நிகழ்வுகளை சரித்திரத்தில் அழுந்த பதித்துள்ளதை உலகின் வரலாறு பறை சாற்றுகிறது.
மன்னர்களும்,சக்ரவர்த்திகளும் மண்ணிற்காகவும்,பெண்ணிர்காகவும் படையெடுத்து உயிரை எடுத்தும் இழந்தும் உள்ளார்கள். சுக போகங்களில் திகழ அந்தபுரத்து மஞ்சங்களில் பல தேசத்து பெண்கள்,மதுவை உண்டு மங்கையை சுவைத்து அந்த போதை தந்த மயக்கத்தில் மிக கோரமான போர்கள் நடந்தேறின.
இரண்டு நாட்களுக்கு முன்னால் தொலைகாட்சியில் ஜப்பானிய நிதி அமைச்சர் சோய்ச்சி நக்காகவ G7 நாடுகளின் பொரளாதார சிறப்பு கூட்டதிற்கு வந்தவர் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அதித போதையில் கண் சொருகி பேச கூட முடியாதவராய் அமர்ந்திருந்ததை உலகம் கண்டது. இப்போது அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது இன்றைய உதாரணம் .
டாக்டர் பிரகாஷ்..நீங்கள் மறந்திராத பெயர்.மிக நல்ல படிப்பாளி,மருத்துவ புத்தகங்களை எழுதியவர்.மிக கேவலமாய் பெண் மோகத்தினால் அவருடைய இருப்பிடம் இப்போது சிறைகம்பிகளுக்கு பின்னால்.படித்தவன் படிக்காதவன் எல்லோரும் இந்த பெண் ஆசையால் நொடியில் தவறி மிக பாதளாதிர்க்கு விழுந்து போகிறார்கள்.
கண்டருறு மோகனரு ...உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? சபரிமலை ஐயப்பனை தொட்டு பூஜை செய்த மேல்சாந்தி!.என்னவானார் தெரியுமா ?.ஒரு வேசியின் வீட்டில் ஏடாகூடமாய் மாட்டி அஸ்தமித்து போனார்.
சதாம் ஹுசைன் ..தனது மிக செல்வம் மிக்க இராக் நாட்டை அழிவின் பாதைக்கு அழித்து செல்ல முக்கிய காரணம் அண்டை நாடான குவைத் மீது படையெடுத்து சென்றதுதான் .இந்த மண் ஆசை இராக்கை நிலைகுலைத்து மட்டுமில்லாமல். சர்வாதிகாரியை உலா வந்த சதாம் பிச்சைகார பரதேசி போல் பதுங்கு குழியில் மறைந்து கிடந்தார்
இந்த ஆசையில் வீழ்ந்து ஞானம் கண்டவர்கள் பலரின் பெயரும் மற்றோர் பட்டியலில் இருக்கவே செய்கிறது.அருணகிரி நாதர் தீவிர பெண் பித்தாராய் அலைந்தவர் நோயினால் புத்தி வந்து மீண்டு திரு புகழை இயற்றி கொடுத்தார்.
கவிஞர் கண்ணதாசன் மது..மங்கை இரண்டிலும் திளைத்தாலும் இந்த தமிழகத்திற்கு பல கருத்தாழம் மிக்க பாடல்களைகவிதைகளை,நூற்களை கொடுத்தார்.
மன்னர் அசோகர் படிஎடுத்தார்,,எல்லை களை விரிவாக்க போர் தொடுத்தார்.போரில் ஏற்பட்ட அழிவை கண்டு முடிவில் அஹிம்சைக்கு தாவினார்.
அறை அங்குல வாய்க்க தகராறு தலையை வெட்டி கொலை செய்த மனிதர்கள் எத்தனை பேர்?
மதுவின் போதையில் பதவி இழந்து,குடும்பத்தை அழித்தவர்கள் எத்தனை பேர்?
சிந்திப்போம் ..பிறரையும் சிந்திக்க செய்வோம்.!!
2 கருத்துகள்:
நல்ல பதிவு...இந்த பழக்கங்கள் எல்லாம் மேல் நாட்டு மோகத்தினாலும்...the extra ordinary infiltration thru media....போன்ற ஊடகங்கள் மூலமும் பரவிவிட்டது...பதிவின் கடைசி வரிகள்...மிகவும் முக்கியமானவை...
Thanks mr.Sharma..Your Views are encouraging me.I accept the role of media and the culture infiltration
கருத்துரையிடுக