வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கேரளா முதலிடம் -நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில்

நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் கேரளா முதலிடம்

நாட்டிலேயே உயர்ந்த கல்வியறிவு விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ள கேரள மாநிலம், செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் படிப்பதிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கேரள மாநில மக்களில் 90 சதவீதம் பேர் செய்தித் தாள்கள், புத்தகங்கள், வார, மாத இதழ்களைப் படிக்கின்றனராம்.இதுதொடர்பாக கேரள மாநில நூலக கவுன்சில் சர்வே ஒன்றை நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பில் 15 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இவர்களில் 90 சதவீதம் பேர் தினசரிகளையும், பிற நூல்கள், புத்தகங்களையும் தொடர்ந்து படிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், டிவி மூலம் வரும் பல்வேறு உப்புச் சப்பில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்றும் ஆச்சரியத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐந்து மாநகராட்சிள், 53 நகராட்சிகள், 63 தாலுகாக்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 900 குடும்பங்கள் கலந்து கொண்டன.7 வயதுடையவர்களில் 7.9 சதவீதம் பேரே படிப்பறிவற்றவர்களாக உள்ளனர்.ஆண்களில் 91.62 சதவீதம் பேர் படிப்பறிவுடையவர்களாக உள்ளனர்.

6.48 சதவீதம் பேரே படிப்பறிவற்றவர்கள்.பெண்களின் படிப்பறிவு விகிதம் 88.66 சதவீதம் ஆகும். படிப்பறிவற்றவர்களின் எண்ணிக்கை 9.41 சதவீதமாகும்.

படிக்கும் பழக்கத்தில் முதலிடத்தில் இருப்பது பத்தனம்திட்டா (95%)மாவட்டமாகும். எர்ணாகுளம் மாவட்டம் (94%) 2வது இடத்தில் உள்ளது. வயநாடு மாவட்டம்தான் கடைசி இடத்தில் உள்ளது. அதன் விகிதாச்சாரம் - 81.34 சதவீதமாகும்

கருத்துகள் இல்லை: