நிலவினை மேகங்கள் சூழ..
வானில் ஒளி குன்றும்
புறத்தே கடின தோலும் ,முள்ளும் இருக்க
அகத்தே தேன் சுவை இனிய பலா
விதைவைக்கு வெள்ளை சேலை என்பார்,
ராகு காலம் என்பார்,எம கண்டம் என்பார்,
செவ்வாய் தோழம் என்பார்,
மூலம் நிர்மூலமாக்கும் என்பார்,
மழை பொழிய நாய்க்கும் , கழுதைக்கும் திருமணம் செய்வர்,
வீட்டு உத்திரத்தில் பல்லியின் ஓசைக்கு செவிகொடுப்பர்,
குட்டியிட்டு திரியும் பூனை குறுக்கே வந்தால் ....
அபசகுனம் என்பர்,தும்மினாலும் அமங்கலம் என்பர்.
அன்பே உருவான இறைவனுக்கு...
ஆடும்,மாடும்,கோழியும் பலி கொடுத்து படையளிடுவர்,
நிலவினை மேகங்கள் சூழ..
வானில் ஒளி குன்றும்!
மூட நம்பிக்கை நிறைத்த சமுகத்து வானில்..
எந்த நிலவும் நிரந்தரமாய் உதிப்பதுமில்லை !
2 கருத்துகள்:
//மூட நம்பிக்கை நிறைத்த சமுகத்து வானில்..எந்த நிலவும் நிரந்தரமாய் உதிப்பதுமில்லை !//
உண்மைதானுங்க
நன்றி திரு சொல்லரசன் அவர்களே
கருத்துரையிடுக