பாரத திருநாட்டில் எண்ணற்ற தத்துவ ஞானிகளும்,மத குருமார்களும் தோன்றினர்.பல ஆயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டு நிகழ்ந்துவரும் இந்த சுழற்சியில் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தங்களையும்,பயிற்சிமுறைகளையும் கொண்டு வந்தவர் ரஜ்னீஷ்.
காமத்திலிறிந்து கடவுள் என்கின்றன சித்தாந்தமும் கொள்கையும் பல கண்டனங்களுக்கும் ,தடைகளையும் கொண்டு வந்து ரஜனீஷின் வாழ்கையை மிக உயரத்திற்கும்..மிக பாதளத்திர்க்கும் கொண்டு சென்றது.
அவருடைய வாழ்கையை குறித்தும் ,அவருடைய பணிகள் குறித்தும் இந்த சிறிய பதிவில் காண்போம்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ,குச்வாடா என்னும் சிறிய கிராமத்தில் ரஜ்னீஷ் என்கிற சந்திர மோகன் ஜெயின் பிறந்தார். பிறந்த வருடம் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஒன்று டிசம்பர் மாதம்
அவருடைய தந்தை துணி வியாபாரி .பதினோரு பிள்ளைகளின் மூத்த பிள்ளையாக ரஜ்னீஷ் பிறந்தார். தன்னுடைய ஏழு வயது வரை தன்னுடைய தாத்தா ,பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்.பெற்றோர்களின் கவனிப்பு இல்லாததும் தன்னுடைய பாட்டியின் மித மிஞ்சிய சுதந்திரமே தன்னுடைய உலக ஞானத்திற்கு வழி கோளியதாக ரஜ்னீஷ் பின்னாளில் நினைவு கூர்ந்துள்ளார் .
கஜூறேகாவின் கோயில் உடலுறவு சிற்ப்பங்களை தன்னுடைய சிறு வயதிலேயே பள்ளி பருவத்திலே பல முறை பார்த்ததாகவும் ,அதன் மூலம் பாலுணர்வு குறித்துதனக்கு உலகத்தின் பார்வை மிக வித்தியாசமாக தெரிவதாகவும் ரஜ்னீஷ் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இருபத்தி இரண்டாம் வயதில் தான் ஞானம் அடைந்ததாக ரஜ்னீஷ் கூறுகிறார்.அந்த அனுபவம் எப்படியிருந்தது வெனில்.. ''அந்த மரங்களும்,செடிகொடி களும் உயிர்ப்பு நிலைக்கு வந்து நின்றன ..எங்கும் உயிர்ப்பு நிலையும்,ஒளி வெள்ளமும் நான் கண்டேன் .அவற்றில் ஒரு மரம் ஒளி வெள்ளத்தில் மிதந்தது நான் அதன் அடியில் சென்று அமர்ந்தேன் ..அது என்னை உள் வாங்கி கொண்டது.இந்த பிரபஞ்சமே தெய்விக பிரார்த்தனை போல் தோன்றியது ""
பி .எ .தத்துவம் முடித்தவுடன் இந்திய முழுக்க பல இடங்களுக்கு சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் ரஜ்னீஷ்.சிறந்த ,வசீகரம் மிக்க தன்னுடைய இந்தி ,மற்றும் ஆங்கில பேச்சுக்களால் ,பலரது கவனத்தை ஈர்த்தார் ரஜ்னீஷ்
தன்னுடைய இயற் பெயரான சந்திர மோகன் மறைந்து ஆச்சார்யா ரஜ்னீஷ் என்று அழைக்கப்பட்டார்.இந்து மதத்தையும், மகாத்மா காந்தியை குறித்தும் வெகு வெளிபடையாக விமர்சித்தார் ரஜ்னீஷ்.இதனால் பலரின் கவனம் அவரின் மீது திரும்பியது.
ஆயிரத்தி தொள்ளயிரதி அறுபத்தி எட்டில் தன்னுடைய ஆசிரிய பணியை உதறி விட்டு.முழு நேர போதகாரக உரு மாறினர்.புதிய தியான வகுப்புகளை மூன்று நாள் முகாம் களாக நடத்தினார் ரஜ்னீஷ்.
காமத்திலிறிந்து கடவுள் என்கின்றன நூல் ஆயிரத்தி தொள்ளயிரதி அறுபத்தி எட்டில் வெளி வந்தது.இந்து சமய தலைவர்கள் பாலுறவு,சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும் என்று ரஜ்னீஷ் கருத்து தெரிவித்திரிந்தார்...இது மிக பெரும் கண்டனத்தை இந்து சமய்த்திளிரிந்து வெளி கொணர்ந்தது
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபதில் மும்பைக்கு குடி பெயர்ந்தார் ரஜ்னீஷ்.முதல் பெண் சீடராக ஒரு செல்வந்த ஜைன பெண்ணை தேர்ந்தெடுத்தார் .ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி நான்கில் புனே வில் ஒரு மிக பெரிய ஆசிரமம் நிறுவப்பட்டது.இந்தியாவில் நிறுவப்பட்டு இன்றளவும் இயங்கும் ஒரு ஆசிரமம் இது
இந்த கால கட்டத்தில் தான் மேற்கத்திய சீடர்கள் இவருடைய கருத்தின் பால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து தங்கினர். இந்தியாவில் இவரை செக்ஸ் குரு என்றும் புத்தி பிறழ்ந்த மனிதர் என்றும் கருதப்பட்டார்
இந்த ஆசிரமத்தில் பல சட்ட விரோத செயல்கள் அப்போது நிகழ்ந்தேற தொடங்கின.பயிர்ச்சி முறைகளில் பாலுணர்வு வெளிப்படையாக அரங்கேற்றப்பட்டதகவும் தகவல்கள் பரவின
மேலும் ஆசிரம விச்தரிப்புகளுக்காக நிலம் தேடப்பட்டது .ஆனால் மொராஜி தேசாய் அரசு நிலத்திகான அனுமதியை நல்காமல் ரத்து செய்தது. முக்கியமாக மேற்கத்திய நாட்டினருக்கான விசா நடிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது
ஏற்கனவே இந்தியாவில் இருந்த மேற்கத்திய ரஜ்னீஷ் சீடர்கள் விபசாரம்,மற்றும் போதை பயன் பாடுகளுக்காக கைது செய்யப்பட்டனர்
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஒன்றில் ரஜ்னீஷ் முதன் முறையாக அமெரிக்கா சென்றார், மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சென்ற பயணம் அது .இந்திய அரசு ஆச்ரமத்திற்கான நிலம் தராத தருணத்தில் அமெரிக்காவில் இருநூற்றி அறுபது சதுர கிலோ meeter பரப்பளவில் நிலம் வங்க பட்டது .
விலை உயர்ந்த ரோல்ல்ஸ் ராய்ஸ் கார்கள் ராஜ்நீஷ்கு பரிசாக குவிந்தன.அப்போது உலகில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட நேரம் .தங்களுடைய சீடர்கள் பாலுறவின் போது கை உரைகளும் ,ஆணுறை தடுப்பும் செய்து கொள்ள வேண்டும் என்று ஆச்ரமம் கேட்டு கொண்டது
ராஜ்நீச்கு பதில் அவருடைய மேற்கத்திய சீடையான ஷீலா எல்லா காரியங்களையும் மேற்கொண்டார்.ரஜ்னீஷ் இடைப்பட்ட இந்த காலத்தில் மௌன தியானம் செய்ய தொடங்கியதால் எல்லா பொறுப்புகளும் ஷீலாவை சேர்ந்தது
அமெரிக்கா அரசு இந்த ஒரேகான் ஆச்ரமத்தில் பல சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக கருதி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.ரஜ்னீஷ் மீது முப்பத்தி ஆறு வழக்குகள் பதிய பட்டன. அவற்றில் இரண்டை சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியத்தையும்,தன்னுடைய சீடர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக குடியுரிமை பெறுவதற்கான திருமனகளை செய்ததையும் ஒப்பு கொண்டார் ரஜ்னீஷ்
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஐந்தில் ரஜ்னீஷ் கைது செய்யப்பட்டு நாடு கடத்த பட்டார், எல்ல நாடுகளும் அவரை ஏற்று கொள்ள மருத்தான,பல நாடுகளில் அவர் விமான நிலையதிளிரிந்து திருப்பி அனுப்ப பட்டார்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஆறு முதல் தான் தொண்ணூறு வரை .தான் இறக்கும் வரை அவர் பூனவிலேயே இருந்தார்.
அவர் வேலீயம் என்கின்றன ரசாயன பொருளை இடைப்பட்ட நாட்களில் பயன் படுத்தினார் என்றும்,எய்ட்ஸ் நோயில் தன்னுடைய ஐம்பத்தி எட்டாம் வயதில் மறைந்தார் எனவும் பல நிரூபிக்கப்படாத தகவல்கள் உலா வந்தன
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஆறு முதல் தான் தொண்ணூறு வரை .தான் இறக்கும் வரை அவர் பூனவிலேயே இருந்தார்.
அவர் வேலீயம் என்கின்றன ரசாயன பொருளை இடைப்பட்ட நாட்களில் பயன் படுத்தினார் என்றும்,எய்ட்ஸ் நோயில் தன்னுடைய ஐம்பத்தி எட்டாம் வயதில் மறைந்தார் எனவும் பல நிரூபிக்கப்படாத தகவல்கள் உலா வந்தன
ஓஷோ பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை இந்த பூமியை பார்வையிட்டது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஒன்று டிசம்பர் மாதம் முதல் ஜனவரி பத்தொம்பது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறு வரை என்று அவருடைய சமாதி பறை சாற்றுகிறது .அவருடைய இறப்பிற்கு காரணம் இதய கோளாறு என வெளி உலகத்திற்கு ஆச்ரமத்தால் தெரிவிக்கப்பட்டது .
2 கருத்துகள்:
தகவல்களுக்கு நன்றி....
You are most welcome Sharma...
கருத்துரையிடுக