ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்ற சலுகை திட்டம் ,இலவச டிவி ,இலவச காஸ் அடுப்பு போன்ற சலுகை திட்டங்கள் எதனை உணர்த்துகின்றன ? அடிப்படை வாழ்வுஅதரமற்ற மக்கள் பெரும்பாலோர் இன்னும் விடியலை காணமலே உள்ளார்கள் என்பதைத்தான்.
இதுதான் விடியலா?இது சலுகையா அல்லது வேதனையா? என்பதை ஆய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும் !!
ஒரு நல்ல அரசானது தனது மக்களின் அடிப்படை வாழ்வு நிலையினை உயர்த்த கூடிய திட்டங்களை செயல் படுத்த வேண்டும் !.சலுகைகளை அளிப்பது தீர்வாகது மாறாக வேலை வாய்ப்பினை நல்கக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதுதான் சிறந்த தீர்வாகும்.ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பமே வாழ்வு பெரும் என்பதுதான் உண்மை.
மக்களை உழைக்க தூண்டாமல் ..சலுகைகளை மட்டும் அளிப்பது .நோயை போக்காமல் காத்து கொள்வது போன்றதுதான்!.வறுமை கோட்டிற்கு கீழே இன்னும் பல கோடி பேர் உள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மைதான் !.
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் .இன்னும் பல அடிப்படை வசதிகளை நாம் பெறவில்லை என்பது மிக வேதனையான ஒன்றுதான்.
வளைகுடா நாடுகளையோ.தெற்காசிய நாடுகளை நாம் ஒப்பிட்டு பார்த்தாலும் நம் நாட்டின் அரோக்கிய வாழ்வு நிலை ,சுகாதார விழிப்பு நிலை ,தனிமனித மதிப்பின் தன்மை வெகு குறைவுதான்!
அற்புதமான இயற்க்கை வலம் ,அறிவு மிக்க இளைய சமுதாயம்,ஒப்பற்ற கலாச்சாரம் என நமது நாடு இருக்கின்ற போதிலும் .அவலமான வாழ்க்கை நிலை வேதனை நல்கவே செய்கிறது.
தனி மனித விழிப்புணர்வும் ,மாறுபட்ட அரசியல் அமைப்பும் நமது அவசிய தேவை என்பதை நாம் உணர்வோம் !
உங்களுடைய கருத்துக்களை அறிவதில் மகிழ்வேன் !!
1 கருத்து:
http://panaiyeri.blogspot.com/
கருத்துரையிடுக