நான் கடவுள் பார்த்த பிரமிப்பிலிரிந்து மீளாமல் இருக்கும் உங்களுக்கு அகோரி பாபாக்களை குறித்து இந்த பதிவு உங்களுக்கு சொல்லும் .
அகோரிகளையும்..ஊனமுற்ற மனிதர்களையும், பிச்சை காரர்களையும் தனக்கே உரிய மாறுப்பட்ட கண்ணோட்டத்தோடு இயக்குனர் பாலாவும், இசை ஞானி இளையராஜாவும் நமக்கு தமிழ் சினிமா மூலம் காட்டியிருப்பது .வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது எனலாம்.
சற்றேரக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கபாலிக பிரிவிலிறிந்து தோன்றிய ஒரு பிரிவுதான் அகோரிகள் எனப்படும் நர மாமிசம் உண்ணும் அமானுஷ்ய இந்து சாதுக்கள் பிரிவு
இவர்களை மற்ற இந்து பிரிவுகள் அங்கிகரிக்கவில்லை காரணம் இவர்களுடைய பிணங்களை உண்ணும் பழக்கமும், போதை வஸ்துக்களை உபயோகிக்கும் போக்கும்
தீமைகளை அழிக்கும் கடவுளான சிவனையே தங்கள் முதலும் கடைசியுமான தெய்வமாக அகோரிகள் வழி படுகிறார்கள்.இந்த நில உலகில் தென் படுகின்ற கல்லும்,மரமும்,மிருகங்களும் ,தோன்றுகின்ற ஒவ்வொரு எண்ணங்களிலும் சிவன்..சிவனை தவிர வேறொன்றும் இல்லை என்பதுதான்
இறந்து போன மனித உடலை கங்கை கரை ஓரத்தில் எரிப்பதும், கங்கை நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வழி வழியாக இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை
அகோரிகள் இப்படி வீச படும் உடலை கங்கையிளிரிந்து வெளியே இழுத்து அவற்றை உண்கிறார்கள்...எரிந்தும் எரியாத பிணங்களை உண்கிறார்கள் .அவர்களை பொறுத்துவரை இறந்து போன உடல் உலக்கத்திற்க்கு உதவாத குப்பை மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது மனித உடலாக இருக்கலாம்
அமானுஷ்ய சக்திகளை கடுமையான தாந்தரிக பயிற்சியினாலும்,கடின மன உறுதியினாலும் பெரும் அகோரி சாதுக்களை ..வழி படுவதற்கும் ஆசி பெறுவதற்கும் பலர் காடும் மலையும் தேடி செல்வது வழக்கம்.
அகோரி பாபாக்களின் உலகம் வேறு..மனித கபால ஓட்டில் உண்பதும் ,குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும்.உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும் ,இடது கையில் மண்டை ஓட்டையும் ,வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம் .
ஒற்றை காலில் பலமணி நேரம் நிற்கும் அகோரிகள், நெருப்பில் படுத்து கொண்டு புன்னகைக்கும் அகோரிகள், மனதின் எல்லையற்ற சக்தியை வெளிகொணர்ந்து காட்டும் அகோரி பாபாக்கள் இன்றும் கங்கை கரை ஓரத்திலும், வாரனாசியின் ( காசியின்) உள்ளேயும் காண இயலும் .
8 கருத்துகள்:
வணக்கம் தோழரே,,,
நான் கடவுள் படம் பார்த்தேன்...
முற்றிலும் மாருபட்ட் ஒரு காவியம்.
அது உண்மயில் உயிரான பாத்திரமா என்று எனக்குள்ளே பல விணாக்கள் எழும்பின.தங்களின் வலைபகுதியை பார்த்தேன்.தாங்கள் பிரசுரித்த அகோரி பாபாக்கள் பற்றிய செய்தி அதற்கு விடை அளித்த்து.
நன்றி தோழரே.
சினெகத்துடன்,,,
சுவரன்
மிக்க நன்றி சுவரன்...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஒரு படைப்பு நான் கடவுள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை !!
வணக்கம்,நண்பரே.அகோரிகள் பற்றிய தங்கள் படங்களையும்,எண்ணங்களையும் படித்தேன்.நன்றி.நான் இதனைக் காட்டிலும் மென்மையாகத்,தத்துவரீதியாக அகோரி விமலானந்தாவைப் பற்றிப் பயின்றிருக்கிறேன்.முடிந்தால் இணையத்தில் பாருங்கள்.அந்த சாதுக்களைப் பற்றிய உங்கள் எண்ணம் இன்னும் வளமாகும்.
கருத்துரைக்கு மிக்க நன்றி தோழர் சண்முக பிரியன் அவர்களே..
அகோரிகளை குறித்தான இந்த பதிவு பொதுவான ஒன்று. எல்லா நிலைகளிலும் சில அற்புதமான விழயங்கள் இருக்கும் என்பது உண்மையும் கூட, நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சுவாமி விமலானந்தவும் அதில் அடக்கம்.
ஞானிகள் ,சித்தர்கள்,அகோரிகள் என பெயரளவில் பட்டியலிட்டாலும் அவர்களுடைய பயணம் ஒன்றே. அதனை நன்கு நான் உணர்ந்தும் இருக்கிறேன்.
உங்களுடைய பதிவின் முகவரியை நல்குங்கள்..!!
நல்ல பதிவு,அகோரிகள் பற்றிய தகவல்கள், மற்றும் புகைப்படங்கள் அருமை, எங்கு பார்த்தீர்கள் நான் கடவுள் படத்தை குவைதிலா?
அன்புள்ள நண்பர் தவ நெறி செல்வன் அவர்களே...
எனது இடுகையில் நீங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. நான் கடவுள் எனும் அகோரி சாதுக்களை குறித்தான இடுகையில் உங்கள் கருத்துரை கண்டேன்.நன்றி.பாடல்களையும் விமர்சங்களை மட்டுமே கண்டுள்ளேன் ,இன்னும் அந்த திரை படத்தை பார்க்கவில்லை.ஒம் சிவா ஓம் பாடல் ஒரு சக்தியின் ஊற்றாகவே உள்ளது.
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" -நானும் வாடிடவே செய்கிறேன்.
sorry rajkumar,
Ur opinion about agoris is not correct exactly.
please refer other people's blogs too.
the information in wiki is not all correct.
the way u write is good.
wishes
இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.
அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.
யோகிகளின் லட்சணங்கள் :
யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.
கருத்துரையிடுக