திங்கள், 2 பிப்ரவரி, 2009

எய்ட்ஸ் - சில நியாயங்களும் சில அநியாயங்களும் !!


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்களின் கவனத்தை கவராமல் ஒரு ஆட்கொல்லி நோய் உலகை ஊடுருவியது. ஆப்பரிக்க கண்டத்தில் தென் சகாரா பகுதியில் இந்த ஆட்கொல்லி நோய் ஊடுருவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன .ஆயிரத்தி தொள்ளயிரத்தி ஐம்பதாம் ஆண்டு தொடஙகி..மெல்ல மெல்ல இனம் புரியாத இந்த நோயை குறித்து ஆய்வுகள் நடந்தன



அதிகார பூர்வமாக ஆயிரத்தி தொள்ளயிரத்தி எண்பத்தி ஒன்றாம் ஆண்டு இந்த பேராபத்தான நோய் உலகிற்கு அறிவிக்கப்பட்டது.அன்று தொடஙகி இராண்டயிரத்தி ஆறு வரை இருபத்தி ஐந்து வருடங்களில் இருபத்தி ஐந்து மில்லியன் மக்களை கொன்றது அந்த நோய்- அதுவே இன்றைய எய்ட்ஸ்!

நீங்கள் மேலே பார்க்கின்ற அந்த பந்து எய்ட்ஸ் வைரஸ் இன் தோற்றம்


சிம்பன்சீ மனித குரங்கிளிரிந்து இது மனிதர்களுக்கு பரவியதாக (HUNTERS THEORY)ஒரு அனுமானம் உண்டு. வேட்டையாடும்போது மனித குரங்கின் ரத்ததிளிரிந்து மணித் ரத்தத்தில் உள் புகுந்து கொண்டது எய்ட்ஸ் வைரஸ் என்பது HUNTERS THEORY
இந்த நோய் பரவ மிக முக்கிய காரணியாக கண்டறியப்பட்டது பாதுகாப்பட்ட்ற பாலுறவு ,ரத்தத்தின் மூலம்,தாய் பாலின் மூலமும் பரவுகிறது
இந்த நோய் தாக்கி இதுவரை இராண்டயிரத்தி ஆறு வரை ஐந்து லட்சத்தி எழுபதாயிரம் குழந்தைகள் இறந்து பொய் உள்ளனர்.இது எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயின் அநியாய பசியின் வேட்கை .
மேலே நீங்கள் பார்ப்பது நெஞ்சை உருக்கும் ஒரு ஆந்திர மாநில பச்சிளம் குழந்தையின் தோற்றம்.ரோஜா பூவை சிரிக்க வேண்டிய இந்த குழந்தை இப்படி நோயினால் கதற என்ன பாவம் செய்தது ??

பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள் பாவம் செய்பவர்களுக்கு எய்ட்ஸ் இறைவன் அளித்த பரிசு எனில் அது ஒரு வகையில் நியாயமே ஆனால் ஒரு பாவம் செய்யாத பச்சிளம் குழந்தைகளும்,பிற மனிதர்கள் இறப்பதும் அநியாயம் அன்றோ!
இன்றைய மத்திப்பிடுகளின் படி ஆப்பிரிக்க கண்டம் எய்ட்ஸ் நோய் தாக்கத்தில் முதலிடம் வகிக்கிறது .ஏறக்குறைய தொண்ணுறு மில்லியன் மக்களை அது விழுங்கும் என்பது ஆய்வுகளின் முடிவு.

இவற்றின் ஊடாக பதினெட்டு மில்லியன் குழந்தைகள் ஆனதயக்க படுவார்கள் !.இப்பொழுது தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும் அது எல்லா நாடுகளையும் இன்னும் முழுமையாக சென்றடைய வில்லை !.இந்த மருந்துகளின் மூலம் மரணத்தை தள்ளி போட இயலுமே ஒழிய நோயை குனபடுத்த இயலாது
ஒரு மனிதன் தவறு செய்தால் அதற்க்கான தண்டனை அவனுக்கு மட்டுமே..இது சட்டத்தின் கோட்பாடு! இது நியாயமானது . எய்ட்ஸ் நோயின் கோட்பாடு முற்றிலும் வேறுபட்டது தவறு செய்தவனை அது தண்டிக்கிறது! அவனுடைய குடுமபத்தை நிராதரவக்கி நிர்மூல படுத்துகிறது ..பின்னர் சமுதாயத்தில் பரவி மெல்ல மெல்ல மரண பரிசுகளை அள்ளி தருகிறது





இளமையின் வேகத்தில் தவறுகள்..இறுதியில் இளமைன் அடையாளம் இழந்து வாழும் போதே பிணமாக..மரணத்தை எதிர் நோக்கி ..தன்னுடைய குடும்பத்தை ,சமுகத்தை சகலத்தையுன் அழித்து மண்ணுக்குள்...!!!




இந்த கண்களில் தெரிவது என்ன? உங்களில் யாருக்கேனும் எதாவது புரிகிறதா...வார்த்தைகள் தேவையா இந்த கண்கள் என்ன சொல்கிறது என அறிய??
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !!


7 கருத்துகள்:

ஜீவா சொன்னது…

உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

வாழ்த்துக்கள்

ஜீவா சொன்னது…

அர்த்தமுள்ள பதிவு இதற்கு பின்னுட்டமில்லாதது வருத்தமளிக்கிறது , வாழ்த்துக்கள் தோழமைக்கு

ராஜ்குமார் சொன்னது…

மிக்க நன்றி தோழரே...

முதல் அங்கிகாரமாய் இந்த கட்டுரை விகடன் வலைத்தளத்தில் வந்தது மிக்க மகிழ்ச்சி.உங்களை போன்ற ஓரிருவரின் பின்னுட்டங்கள்..என்னுடைய நாளைய பதிவுகளை செம்மையாக்கும். கருத்துக்களுக்கு நன்றி..

hariharan சொன்னது…

வாழ்த்துக்கள் ராஜ்குமார்,

உங்கள் பதிவு விகடனில் வெளிவந்தது குறித்து மகிழ்ச்சி.

மேலும் சிறப்பான பதிவுகளை பதிய வாழ்த்துக்கள்.

ஹரிகரன்

ராஜ்குமார் சொன்னது…

நன்றி ஹரி...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

உங்களுடைய மின் அஞ்சல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல பதிவுகளை நீங்கள் அனுப்பி வருவதற்கு..எனது தனிப்பட்ட நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

S.Rajakumar, Dubai சொன்னது…

Padangalum vilakkamum arumai Rajkumar