தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சேவை செய்திட எத்தனையோ தொலைக்காட்சிகள் தோன்றி,தமிழ் மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கின்றன .!
ஆபாச குப்பைகளை,அரசியல் திசை திருப்பும் கோமாளி தனங்களை போட்டி போட்டு கொண்டு ,பல சேனல் களும் ஓளி பரப்பி தங்களுடைய குள்ள நரித்தனத்தை சாதுரியமாக மக்கள் மீது திருப்ப பார்க்கின்றன.
நேற்றைய கலைஞர் டிவியின் மானாட,மயிலாட ஓளி பரப்பில் ஒரு கோமாளித்தனம் காட்டப்பட்டது .ஆடிய எல்லா ஜோடிகளுமே அறை இறுதியில் இருந்து இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதாக கலா அக்கா அறிவிக்க. !!
ஒவ்வொரு ஜோடியும் கண்ணிற் விட்டு தேம்பி தேம்பி அழுதார்கள்.......
அவர்கள் அழுவதை பார்த்து கலா அக்கா , குஷ்பூ மேடம், ரம்பா மேடம், இன்னும் வந்திருந்த ஜோடிகளின் அருமை தாய்களும்,தங்கைகளும் அழுது நிகழ்ச்சியை நெஞ்சை நெகிழ செய்துவிட்டார்கள்!!
ஆபாச உடைகளும் ,மழை தீம்களும், அடுகிறவர்களுக்கு கெமிஸ்ட்ரி வேண்டும் என்ற அறிவுரைகளும் .ஒவ்வொரு போட்டியாளரும் கலா அக்காவை புகழ்வதும் .அடிக்கடி கண்ணிற் விடுவதும் தமிழனின் தலைவிதிஎன நொந்து கொள்ளவே செய்யதொன்றுகின்றன.
கலைஞர் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள டிவி தமிழுக்கு அந்நியமாகவே நிகழ்ட்சிகளை ஓளி பரப்பிவருகிறது.இதற்கு இடையே சன் நெட் வோர்கிற்கும் கலைஞர் டிவி இக்கும் இடையே வாரிசு மற்றும் தொழில் போட்டிகளுக்கான போர் தளங்களாகவே மாறி வருகின்றன
மக்கள் இது போன்ற (மானாட மயிலாட போன்ற) நிகழ்ட்சிகளை ஆதரிக்க கூடாது .தமிழை காசுக்கு விற்கும் சாமர்த்தியத்தை மக்கள் அனுமதிக்க கூடாது.
மின் வெட்டு, பொருட்களின் விலை உயர்வு, என கழ்டபடுகின்ற தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைப்பது வேதனையிலும் வேதனையே