வெள்ளி, 3 அக்டோபர், 2008

பேய் பேய்தான் - உண்மைகதை !!

பனி கொட்டிய அந்த இரவினை என்னால் மறக்க முடியாது.அப்படி ஒரு குளிர்!.பனி மட்டும் இல்லை அன்று என்னுடைய வாழ்க்கையில் நான் கண்ட சம்பவமும்தான்.அந்த இரவு நேரத்தில் செகண்ட் ஷோ முடிந்து மிதிவண்டியில் வீட்டிற்கு வந்து கொண்டிருதேன் .

ஏற்கனவே பலமுறை வந்த பாதை தான் .டவுன் இல் இருந்து கிராமத்திற்கு செல்லும் மண்சாலை திரும்பும் போது சட்டென்று இருட்டும் .தவளைகளின் சத்தமும் வண்டியின் கேரியரில் உட்கார்ந்து கொண்டதை போல் இருந்தது

வீட்டில் எத்தனையோ முறை திட்டு வாங்கினாலும் இப்படி இரவு நேரத்தில் வீடு திரும்புபோது சற்று பயமும் சேர்ந்து கொள்ளவே செய்கின்றது.

குண்டும் குழியுமாய் அந்த மண் சாலை வண்டியின் வேகத்தை மட்டுபடுதியதுவேடியப்பன் கோயில் சந்து திரும்பி பத்து நிமிழதில வீட்டுக்கு போய்டலாம் .

இதோ கோயில் தாண்டி வந்தாச்சி .புளியமரத்து டீ கடை இருக்கற எடம் தெரியல!. ரொம்ப நாள் பூட்டி கிடக்கும் கவுண்டர் வீட்டில் இருந்து ஐந்தாவது நிமிழம் வீடு வந்திடும்,....சட்டென்று சைக்கிளின் முன் சக்கரத்தில் ஏதோ பெரிய கல் ஒன்று இடறியது .நான் சுதாரிக்கும் முன் வண்டியிலிருந்து நான்நாலு அடி தள்ளி விழுந்தேன் !

மீண்டும் எழுந்து சைக்கிள்ஐ , தூக்கி நிறுத்தும்போதே கவுண்டர் வீட்டு வாயிலில் இருந்து என்னை நோக்கி ஒரு குரல் வந்தது "யாரது !!".
கவுண்டர் ரொம்ப நாள் புத்தி சரியில்லாம இருந்து இறந்து போய் வருஷம் ஒன் ஆகுது

குரல் வந்த திசை நோக்கினேன் .யாரென்று சரியாக சொல்லமுடியவில்லை அம்பது வயசிருக்கும் .கவுண்டர் மாதிரி தான் தெரிந்தது !!

யாரது ?? இந்த முறை குரலில் மிரட்டல் தெரிந்தது .நான் பேச முயல்வதற்குள் அது எனக்கு வெகு அருகில் வந்து நின்றது . இடுங்கி போன கண்கள் ,காவியேறிய பற்கள்,வெகு நாள் சாபிடாத ஒட்டிய வயிறு ! குரலில் மட்டும் சற்று அதிக மிரட்டல்.

நான் பேச முனையவில்லை ஏனெனில் இது கௌண்டேரேதான் .உடல் வேர்க்க ஆரம்பித்து விட்டது .நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி வா வா எதாவது கொடு !! பற்கள் நறநறக்க கவுண்டர் என்னை நோக்கி


அந்த நடையில் தள்ளாட்டமும் வேகமும் ,ஒருங்கே இருந்தது.சட்டென்று அவருடைய கையில் வெட்டரிவாள் ஒன்று வந்து சேர்ந்தது .நான் யோசிக்கும் முன்னே என்னை நோக்கி அவர் விசியத்தில் என்னுடைய தலை வெட்டுப்பட்டது .

நான் கதறினேன் .கவுண்டர் மண்டியிட்டு ரத்தம் குடித்தார் .உடம்பு விலுக் விலுக் என்று தூக்கி போட்டது .மண்டையில் பட்டென்று அடி விழுந்தது நாயே பகல் தூக்கமா ? எழுந்திரு அப்பா வின் சத்தம் .அன்று இரவு செகண்ட் ஷோ போகலாம் என்றிந்த நான் வெகு நீண்ட நாள் போகவே இல்லை